ரமலானிலும் வீதி வீதியாக சேலம் INTJ மார்க்கப் பிரச்சாரம்!
சேலத்தில் எழுச்சி மிகு வாராந்திர தொடர் தாவாஹ்...இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் சேலம் மாவட்டத்தின் சார்பில் வாராந்திரதொடர்
தாவாஹ் நடைபெற்று வருகிறது... இதன் தொடர்ச்சியாக சேலத்தில் முஸ்லிம்கள் கணிசமாக வாழும்
முள்ளுவாடி ஷாகர்ஷா மக்கான் பகுதியில் நேற்று
22 .07 .2012 ஞாயிறு அன்று மாலை
தாவாஹ் நடைபெற்றது. சேலம் மாவட்ட
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்ட இந் நிகழ்வில் மாநில செயலாளர்
புரைதா.இஸ்மாயில். புனித ரமலான் என்கிற தலைப்பிலும்
, மாவட்ட தலைவர்.ஹுசைன் ரமலான் தரும் பண்படுத்தும் பயிற்சி
என்கிற தலைப்பிலும் ,
மாவட்ட செயலாளர்
பக்கீர் ஒலி குர் ஆன் அருளப்பெற்ற மாதம் என்கிற தலைப்பிலும் , உரையாற்றினார்கள்.இவ்வினிய நிகழ்வில் அப் பகுதியை சேர்ந்தவரும், தாயகம் வந்துள்ள
ரியாத் தமிழ் சங்கத்தின் இணை செயலாளருமான
சகோ. சிக்கந்தர் நம்முடன்
வந்திருந்து தாவாஹ் நிகழ்வில் கலந்து கொண்டார்.
-- சேலம்.ஹுசைன்