திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Saturday, August 4, 2012

சத்தியத்தை வீதியிலும், வீடு வீடாகவும் கொண்டு சென்ற செங்குன்றம் INTJ.

,
புயலைக் கிளப்பிய பரா அத் போஸ்டரும், போலிசுக்கு சென்ற சுன்னத் ஜமா அத்தினரும்!

இனி போஸ்டர் வேண்டாம் ஒவ்வொரு வழிகேட்டையும் வீடு வீடாக சென்று சந்தித்து விளக்கிச் சொல்லி மக்களை விலக வைக்க வேண்டும்,
தெருமுணை கூட்டங்கள் நடத்தி நேர் வழியை எடுத்து இயம்ப வேண்டும் என்று  முடிவெடுத்து உடனே திருவள்ளூர் மாவட்டம் அண்ணை இந்திரா நினைவு நகரில் வரும் ஞாயிறு நாயன் நாடினால் நடக்கவிருக்கும் மாபெரும் மார்க்க விளக்க தெருமுணையை வீரியமாய் நடத்த வேண்டுமென்று அங்கேயெ முடிவும் எடுத்து விட்டனர்...
  மடமைக்கு மரண அடி தொடரும் மறை தந்த இறை நாடினால்.....
அந்த தெருமுணை கூட்டமும் நடந்து முடிந்து விட்டது அதுவும் மிக்க மேலானவனின் கருனையால் மிகச் சிறப்பாக, கூட்டத்தை ஆரம்பித்து வைத்தார் செங்குன்றம் செயலாளர் தீன் முஹம்மத்,தலைமை தாங்கினார் மாவட்டச் செயலாளர் அஷ்வாக்,பின்னர் "வரதட்சனை" என்ற தலைப்பில் மாவட்ட து.செயலாளர் செங்குன்றம் சபியுல்லா வாழைப்பழத்தில் ஊசி ஏற்ற, அடுத்து வந்த மசூதா ஆலிமா இஸ்லாத்தின் அழகிய வடிவில் ரமலானை வரவேற்க, 
அனல் பறக்கும் ஆவேசமும்  குளுங்க சிரிக்க வைத்த கொள்கை கெட்டவர்களின் கோமாளித்தனத்தையும் இணைத்து "தவ்ஹீதை எதிர்ப்பது நியாயம் தானா ?" என்ற புதுவிதமான தலைப்பில் அண்ணன் ஜமாஅத்தின் ஏமாற்றும் ஏகாதிபத்தியத்திலிருந்து வெளியேறிய மாநிலப் பேச்சாளர் மெளலவி ஷாஜா கான் 'தவ்ஹீதி' எழுச்சி உரையாற்றினார்.
     
 தன் உரையில் ஷாஜா கான் 'தவ்ஹீதி' எங்களோடு விவாதத்திற்கு வர மறுத்து நாங்கள் விவாதம் செய்ய தகுதியற்றவர்கள் என்று ஊளைக்கூச்சலிடும் உலமாக்களே முபாஹலாவிற்கு தயாரா??, நான் இந்த சபையிலேயே என் பெற்றோர்கள், அண்ணன் தம்பி மார்களை வைத்து தயாராய் கேட்கிறேன் என்று சொன்னபோதும், வல்லவனின் ஜோதியை வாயால் ஊதி அணைக்க நினைக்கிறார்களா? என்று கர்ஜித்த போதும் தக்பீர் முழக்கம் விண்ணைப் பிளந்தது..  
    



 வீடு வீடாக அழைப்பு பணியில் 



அடுத்த கூட்டம் இன்ஷா அல்லாஹ் செங்குன்றத்தில் நடைபெறும் கொள்கை சகோதரர்கள் இறைவனிடம் இறைஞ்சுங்கள்..

0 comments to “சத்தியத்தை வீதியிலும், வீடு வீடாகவும் கொண்டு சென்ற செங்குன்றம் INTJ.”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates