திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Wednesday, September 26, 2012

ஓரணியில் சமுதாயம்...உணர்ச்சிப் பெருக்கில் சேலம்

,




பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுக்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் 
மாநில செயலாளர் .புரைதா .இஸ்மாயில் .
 கண்டன உரை நிகழ்த்தும்  இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட 
தலைவர்சேலம்.ஹுசைன் 




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நபிகள் பெருமானாரை அவமதிக்கும் வண்ணம் திரைப்படம் வெளியிட்டு நாளுக்கு நாள்
முஸ்லிம்களின் வெறுப்பை விலை கொடுத்து வாங்கி வருகிறது அமெரிக்கா ..! இதே நேரத்தில் அகிலத்தின் அருட்கொடையாம்   நபிகளாரின் நேசம்தமிழக முஸ்லிம் சமுதாயத்தை ஓரணியில் திரட்டி வருகிறது  அல்ஹம்துலில்லாஹ் ... தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடந்து வரும் ஒன்று பட்ட முஸ்லிம்களின் அமெரிக்க எதிர்ப்பு பேரணி ஆர்ப்பாட்டங்களின் வரிசையில் சேலம் மாநகரில் கடந்த 22 .09 .2012  சனிக்கிழமை காலை 10 .00  மணிக்கு  சேலம் மாவட்ட இஸ்லாமிய  ஐக்கியஜமாஅத் சார்பில்..  அமெரிக்க வல்லூறுகளுக்கு எதிரான கண்டன பேரணி மற்றும் ஆர்பாட்டம் நடைபெற்றது..! சேலம் ஜாமியா மஸ்ஜித் அருகில் இருந்த புறப்பட்ட பேரணி ...சேலம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள தலைமை தபால் அலுவலகம் எதிரில் ஆர்பாட்ட களத்தில் முடிவுற்றது.ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இப்பேரணியில் குரூர புத்தி படைத்த அமெரிக்க நாட்டை கண்டித்தும், இறைவனால் சபிக்கப்பட்ட டெர்ரி ஜோன்ஸ் ,சாம் பாசிலி ஆகியோரை கண்டித்தும், வெளிப்படையாகவும் ,மறைமுகமாகவும் அமெரிக்காவை ஆதரிக்கும் இந்திய அரசைக் கண்டித்தும் கண்டன கோசங்கள் விண்ணைப் பிளந்தன...இறுதியாக சேலம் மாவட்டத்தின் அனைத்து ஜமாத் முத்தவல்லிகள் ,உலமாக்கள், முஸ்லிம் கட்சிகள் ,சமுதாய இயக்கங்கள் ,அமைப்புகளின் நிர்வாகிகள் கண்டன உரை நிகழ்த்தினர். உணர்ச்சிப் பிழம்பாக வெளிப்பட்ட முஸ்லிம்களின் உணர்வு மிக்க ஆர்பாட்டம் காண்போரை மெய் சிலிர்க்க வைத்தது ..!
முன்னதாக கடந்த 20 .09 .2012 .அன்று சேலத்தில் இயங்கக்கூடிய அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் ஒன்று கூடி சேலம் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் துவக்கப் பட்டது..!
இதன்  தலைவராக  சகோ. அன்வர் பாஷா (முஸ்லிம் லீக்
செயலாளராக  சகோ.புரைதா.இஸ்மாயில்(இந்திய தவ்ஹீத் ஜமாஅத்  மாநில செயலாளர்) 
பொருளாளராக சகோ.பஷீர் (சேலம் பென்ஷன் லைன் மஸ்ஜித் குபா பள்ளியின் முத்தவல்லி )
 துணை தலைவராக சகோ. சமதானி  பாஷா (ஜாக்,மாவட்ட தலைவர் )
துணை செயலாளராக  சகோ. முஹம்மத் பயாஜ் (பாபுலர் பிரன்ட்மாவட்ட தலைவர் )
ஆகியோர்  தேர்வு செய்யப்பட்டனர் .
சேலம் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் துவக்குவதில் சேலம் மேட்டு தெரு இஸ்லாமிய நற்பணி டிரஸ்ட் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது..!
.

0 comments to “ஓரணியில் சமுதாயம்...உணர்ச்சிப் பெருக்கில் சேலம்”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates