திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Saturday, September 22, 2012

நபிகளாரின் கார்ட்டூன் மீண்டும் சீண்டிப்பார்க்கும் பிரான்ஸ்! கொடியை எரித்து போராட்டம் நடத்திய மதுரை INTJ.

,





அமெரிக்காவை அடுத்து பிரான்ஸ்  பத்திரிகை ஒன்று  தன் பங்குக்கு முஹம்மத நபியை இழிவு படுத்தும் விதமாக கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளது! இந்த விவகாரம்  தற்போது  முஸ்லிம் நாடுகளில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி  பல நாடுகளில்   தன்னுடைய தூதரகங்களை மூடி வைத்துள்ளது பிரான்ஸ் நாடு. யஹுதிகளும் நசாராக்களும் திட்டமிட்டு இஸ்லாத்தை இழிவு படுத்த முயன்று தோற்றுப்போய், குரானை பொய்ப்பிக்க  முயன்று தோற்றுப்போய், அதைக் கொண்டு வந்தவரை இழிவு படுத்தினால் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுத்து விடலாம்! என எண்ணி செயல் பட்டுக் கொண்டுள்ளனர். 
இஸ்லாத்திற்கு ஒன்று என்றால் உடனடியாக களம் இறங்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மதுரை மாவட்டம் இன்று ஜும்மா தொழுகைக்குப் பின் நபிகளாரை இழிவு படுத்திய பிரான்ஸ் நாட்டை கண்டித்து அந்த நாட்டின் தேசியக் கொடியை எரிக்கப் போவதாக அறிவித்து இன்று  ஏராளமானோர்  திரண்டு பிரான்சுக்கு எதிராக கோஷமிட்டு அதன்  கொடியை எரித்தனர்.

0 comments to “நபிகளாரின் கார்ட்டூன் மீண்டும் சீண்டிப்பார்க்கும் பிரான்ஸ்! கொடியை எரித்து போராட்டம் நடத்திய மதுரை INTJ. ”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates