தமிழகம் முழுதும் நம்முடைய பெண்கள் மார்க்கத்தை மறந்து, பெற்றவர்களை
துறந்து காதல் வலையில் வீழ்ந்து வீட்டை விட்டு போய்க் கொண்டிருப்பதை
அனைவரும் அறிவோம்! அது போன்ற செங்குன்றத்தில் நடந்த ஒரு சம்பவத்தில் ஒரு
இந்து இளைஞனுடன் முஸ்லிம் பெண்ணொருவர் வீட்டை வீடு வெளியேறினார்
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் களமிறங்கி சேலம் மாவட்டம் ஆத்தூர்
சென்று இருவரையும் பிடித்துக் கொண்டு வந்து. அவருக்கு இஸ்லாத்தை எடுத்து
சொல்லி அவரை கலிமா சொல்ல வைத்து இஸ்லாத்தை ஏற்ற பின்னால் அவருடைய பெற்றோர்
உறவினர்களுக்கு சொல்லி திருமணத்திற்கு ஏற்பாடு செய்த பொது அவருடைய
உறவினர்கள் அனைவரும் விடுதலை சிறுத்தைகள் மற்றும் பாரதிய ஜனதாவில் மாவட்ட
பொறுப்புகளில் இருப்பது கண்டு முதலில் தயங்கினாலும் பின்னர் அல்லாஹ்வின்
மேல் தவக்குல் வைத்து பிரச்சனைகளை சந்திக்க தயாராகி அவர்களுக்கு சொல்லி
அனுப்பப்பட்டது. ஆரம்பத்தில் கடுமையாக நடந்தாலும் பின்னர் நம்முடைய
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளின் அழகிய அணுகு முறையால் இஸ்லாத்தை
செவிமடுத்ததோடு . திருமணத்திற்கு சம்மதிதனர் .
23 செப்டம்பர் 2012 ஞாயிறு அன்று அல்லாஹ்வின் நாட்டப்படி அந்த சகோதரரை
இஸ்லாத்தின்பால் மீட்டுக்கொண்டுவந்தது அல்ஹம்துலில்லாஹ், அந்நிகழ்ச்சியில்
அச்சகோதரரின் உறவினர்கள் தெரிந்தவர்கள் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட
நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்
கிளை நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் மற்றும் சேலம் ஆத்தூரின் முன்னாள் சேர்மன்
போன்ற பலருக்கு இஸ்லாத்தையும் குறிப்பாக முஹம்மது நபிகளைப் பற்றி மாற்று
மத அறிஞர்களின் கருத்துகளைச் சொல்லி இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப்
பேச்சாளர் அலீம் அல்புஹாரி இஸ்லாத்தின் பால் அழைத்தபோது பெரும்
பரபரப்பாகவும், ஆர்வமாகவும் நிகழ்ச்சி நகர்ந்தது பின்னர் இஸ்லாத்தை பற்றி
அழகிய முறையில் எடுத்துரைத்து புரியவைத்தார் திருவள்ளூர் மாவட்ட தலைவர்
வேலூர் இப்ராஹீம், பின்னர் இறுதியாக செங்குன்றம் நகர INTJ செயலாளர் தீன்
முஹம்மத் மற்றும் மாநில பேச்சாளர் ஷாஜா கான் தவ்ஹீதி பா.ஜ.க சேலம் மாவட்ட
செயலாள்ருக்கு திருமறைக் குர் ஆனை அன்பளிப்பாக வழங்கினர் மத சண்டையை
உருவாக்கக் கூடிய ஒரு சம்பவத்தில் மதியூகத்துடன் நடந்து மணமக்கள்
இருவரையும் காத்த திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் பாராட்டுக்குரியவர்கள்
எனினும் அவர்களை நரக நெருப்பில் இருந்து காத்த
அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் !