திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Wednesday, October 10, 2012

இடிக்கப்ப்பட்ட இறையில்லமும் இணைந்து போராடிய சிறுத்தைகளும் சிங்கங்களும்.

,
முஸ்லிம்களின் உணர்வை சீண்டுவதை வாடிக்கையாய் செய்து வேடிக்கைப் பார்ப்பது அதிகார வர்க்கத்திற்குப் பழகிப்போய் இருக்கிறது,


இல்லாத ஆயுதத்தை காரணம் காட்டி ஈரக்கை அழிப்பதும்,
அப்பாவி அன்சாரிகளைக் கைது செய்வதும்
தேசப்பற்று மிக்கவர்களை தீவிரவாதி என்பதும்
விடுதலைக்கு வித்திடவர்களை வேண்டாதவர்களாக பாவிப்பதும்
காலிழந்த மதானிகளை கைதிகளாக்குவதும், 
காலிழக்கச் செய்தவர்களை தேசியவாதிகளாக்குவதும், என்று
 இந்தியாவின் அனைத்துத் தரப்பு அதிகார வர்க்கமும் இதில் கை கோர்த்து நிற்பது விதிவிலக்கில்லாமல் பொது விதி ஆகியுள்ள சூழ்நிலையில்


சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்தில் உள்ள பாலவாக்கம் கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளாக முஸ்லிமகள் தொழுது வந்த பள்ளிவாசலை 25.9.2012 அன்று எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் நெடுஞ்சாலை விரிவாக்கம் என்ற பெயரில் வட்டாச்சியரின் அனுமதியோடு ஊத்துக்கோட்டை வட்ட ஆய்வாளர் நஸ்ருதீன் [!?]  மற்றும் நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த ரவி, திருமலை ஆகியோர் இடிக்க வந்துள்ளனர்,
  
 இதை அங்குள்ள முஸ்லிம்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் என்று மத பாகுபாடு இல்லாமல் அனைவரும் தடுக்க முயன்றபோதும் காவல்துறையை வைத்து மக்களை மிரட்டி விரட்டி விட்டு பள்ளியின் ஒரு பகுதியை தரைமட்டமாக்கினர். இதில் மாபாதகம் என்னவென்றால், இந்த மூவரும் அங்கிருந்த திருக்குர்ஆனை கிழித்த இழி செயல்தான் (புகைப்படத்தில் உள்ளது போன்று) இதில் கொடுமை என்னவென்றால் குர் ஆனை மட்டும் எடுத்துக்கொள்ளக் கூட தனக்கு நேரம் தரப்படவில்லை என்று வேதனைப் படுகிறார் அந்த பள்ளியின் இமாம் (பள்ளியை இடிப்பதில் அப்படியொரு அவசரம் பாவம்).
 
       தகவல் அறிந்து நாம் களத்திற்குச் செல்வதற்கு முன்னால், செங்குன்றத்தில் நடக்கவிருக்கும் மாற்று மத சகோதர சகோதரிகளுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியான "அமைதிக்கு அழைக்கிறது இஸ்லாம்" நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பாலசிங்கம் அவர்களை அழைக்கச் சென்ற திருவள்ளூர் மாவட்ட தலைவர் வேலூர் இப்ராஹீம்,  மா.து.செ. முபாரக், செங்குன்றம் நகர செயலாளர் தீன் முஹம்மத், மாநிலப் பேச்சாளர் ஷாஜாகான் தவ்ஹீதி மற்றும் செங்குன்றம் நகர ஆலோசகர் பீர் முஹம்மத் அவர்களின் அழைப்பை ஏற்றுவிட்டு, விடுதலை சிறுத்தைகள் சார்பாக பாலவாக்கம் பள்ளி இடிப்பிற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
 
துக்கத்திலும் ஒரு சந்தோஷம் என்பது போல் பள்ளி இடிக்கப்பட்டது துக்கம் என்றால் அதற்கான போராட்டத்தை முதலில் விடுதலை சிறுத்தைகள்  நடத்துவது, அதிலும் 7 கிலோ மீட்டர்கள் நடை பயனப் போராட்டம் என்பது மிகப்பெரும் சந்தோஷத்தைத் தந்தது (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவு படுத்தி திரைப்பட டிரைலர் வெளியானபோது தமிழகத்தின் மற்ற கட்சிகளும் அதன் தலைவர்களும் வெறும் வாய் ஜாலம் காட்டியபோது வீடியோவையும் அமெரிக்காவியும் கண்டித்து தமிழ்நாட்டில் போராட்டம் நடத்திய ஒரே அரசியல் கட்சி விடுதலை சிறுத்தைகள் தான் என்பது நினைவு கூறத்தக்கது பார்க்க மக்கள் ரிப்போர்ட்: ), நிச்சயம் கலந்துகொள்வதாகக் கூறி விடைப் பெற்றனர் நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவரை ஒருவர் உதவிக்கொள்ளும் இந்திய தவ்ஹீத் ஜமாத்தினர்.
          
களத்தில் ஆய்வு செய்தபோது மிக அதிர்ச்சிகரமான ஓரவஞ்சனை ஒன்று கண்ணில் பட்டது அது என்னவென்றால் நெடுஞ்சாலையில் இருந்து 3 மீட்டர் தொலைவில் உள்ள பள்ளியை இடித்து இருக்கிறார்கள் அதே சமயம் 1 அடிகூட இடைவெளி விடாமல் நெடுஞ்சாலையுடன் ஒட்டி கட்டப்பட்டிருக்கும் கோவில் மட்டும் அப்படியே விடப்பட்டிருந்தது தான், நாம் நாடுவது பள்ளி இடிபட்டால் கோவிலும் இடிக்கப்பட வேண்டும் என்பதல்ல, சட்டம் அனைத்து சமூகத்திற்கும் பொதுவானதாய் இருக்க வேண்டும் என்பது தான். (காண்க படம்) நடைபயனப் போராட்டம் ஆரம்பித்தபோது இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்டத் தலைவர் வேலூர் இப்ராஹீம் அவர்கள் நடைபயனத்தை ஆரம்பித்து வைத்தார், பின்னர் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடை பயனம் தொடர்ந்தது, அப்போது S.D.P.I ஐச் சார்ந்தவர்களும் உடன் இருந்தனர்.
      
 பின்னர் போராட்டம் இறுதி கட்டத்தை நெறுங்கியபோது பரபரப்பு தொற்றிக்கொண்டது, வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக கண்டனங்களை அனைவரும் பதிய வைத்தனர், அப்போது எதிர்பாராத விதமாக திருவள்ளூர் மாவட்டத் தலைவர் வேலூர் இப்ராஹீம் அவர்கள் தன் கண்டனத்தைப் பதியவைக்குமாறு விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளரால் அழைக்கப்பட்டார்.
      
வேலூர் இப்ராஹீம் அவர்கள் தனது உரையை ஆரம்பித்து கண்டனத்தைப் பதிய வைக்க ஆரம்பித்தபோது பரபரப்பு உச்சகட்டத்தை அடைந்தது வேலூர் இப்ராஹீம் அவர்கள் தன் உரையில் " முஸ்லிமகளுக்காக குரல் கொடுப்பதில் விடுதலை சிறுத்தைகளும் அதன் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களும் எப்போதும் தங்களை முதன்மைப் படுத்திக் கொள்கின்றனர்" என்று ஆரம்பித்தபோது விடுதலை சிறுத்தையினர் கரகோஷமிட்டனர் அவர்களை அமைதி படுத்தி கண்டனத்தை தொடர்ந்தபோது " இஸ்லாமியரின் உரிமை என்று வந்துவிட்டால் தூதர் நபியை இழிவு படுத்தியதால் கட்டுப்பாட்டை மீறி அமெரிக்கத தூதரகத்தையே  பதம் பார்த்தக் கை இது, இறை இல்லத்திற்காகவென்றால் வட்டாச்சியர் அலுவலகத்தைத் தகர்ப்பதற்காக இன்னும் ஒரு முறை கட்டுப்பாட்டை மீற யோசிக்காது'" என்ற போதும் கரகோஷம் விண்ணைத் தொட்டது. கண்டனத்தை முடித்தபோது தலித் இனச் சகோதரர்கள் நிறைய பேர் அவரைக் கட்டித்தழுவி தங்களது இணக்க உணர்வை வெளிப்படுத்தினர்.

        
அது முடிந்து வட்டாச்சியரை நேரில் சந்திக்கச் சென்றனர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் வேலூர் இப்ராஹீம் மற்றும் விடுதலை சிறுத்தைகளின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர்.  அப்போது வட்டாச்சியரிடம் " பள்ளி இடிக்கப்படும்போது பொதுவாகவே முஸ்லிம்கள் காட்டும் உணர்வை நீங்கள் காணவில்லை எங்கள் உணர்வை நாங்கள் காட்ட வேண்டிய கட்டாயத்தை கொண்டு வந்துவிட வேண்டாம் என்றும், பள்ளி இடிக்கப்பட்ட அதே நெடுஞ்சாலை வரம்பை மீறி கட்டப்பட்டுள்ள கோவில் இடிக்கப்படாத போது பள்ளி மட்டும் இடிக்கப்பட்டது முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட சதி என்றும் மேலும் பள்ளியை இடித்து திருக்குர்ஆனை கிழித்தெரிந்த மூன்று கயவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும்  பள்ளிக்கான புதிய தனி இடத்தை தரும் வரை அதே இடிக்கப்பட்ட பள்ளியிலேயே எங்கள் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவார்கள்," என்று தெளிவாக பதியவைத்தார் வேலூர் இப்ராஹீம் 
                     இதற்கு வட்டாச்சியர் செவிசாய்க்காமல் மெத்தனம் காட்டினால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார், பிறகு விடுதலை சிறுத்தைகளின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய ஜ்னநாயகப் பேரவையினருக்கும் நன்றி செலுத்தி திரும்பினர் இந்திய தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள்.      
                                           ___
                                                                                                                                                          -அலீம் அல்புஹாரி B.B,A.,B.L
      படங்கள்:ஷாஜாகான் தவ்ஹீதி                                           

0 comments to “இடிக்கப்ப்பட்ட இறையில்லமும் இணைந்து போராடிய சிறுத்தைகளும் சிங்கங்களும். ”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates