திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Sunday, October 14, 2012

செங்குன்றத்தில் அமைதிக்கு அழைக்கிறது இஸ்லாம் நிகழ்ச்சி

,

















அன்பாளன் அருளாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அல்லாஹ்வினுடைய மாபெரும் கிருபையால், செங்குன்றம் முழுக்க பேனர்கள் போஸ்டர்கள் என்று விளம்பரங்கள் செய்யப்பட்டு, மாற்று மத சகோதர சகோதரிகளுக்கு அழைப்பு தரப்பட்டு, பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் திருவள்ளூர்  மாவட்டம் சார்பாக, செங்குன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "அமைதிக்கு அழைக்கிறது இஸ்லாம்" நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
        ஆரம்பமாக இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலப் பேச்சாளார் ஷாஜாகான் தவ்ஹீதி "இஸ்லாத்தின் மனிதநேயம்" என்ற தலைப்பில் உரையாற்ற அடுத்து இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் இக்பால் அவர்கள் இஸ்லாத்தைப் பற்றிய அறிமுகத்தை அழகாகத் தர, நிகழ்ச்சியின் முக்கியத்துவம், ஏற்பாடு செய்யப்பட்டதன் நோக்கம் போன்றவற்றை தெளிவாக விளக்கி ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில தலைவர் S.M, பாக்கர் அவர்களும் மாநில துணை தலைவர் முனீர் அவர்களும் மாநில செயலாளர் இன்யதுல்லாஹ் அவர்களும் களந்து கொண்டனர்.
                   கேள்வி பதில் நிகழ்ச்சி ஆரம்பித்த உடன் முதலில் எடுத்த உடனே ஒரு பெண் தான் கேள்வியை ஆரம்பித்து வைத்தார், பிறகு போக போக கேள்வி பதில் நிகழ்ச்சி சூடு பிடிக்க ஆரம்பித்தது. "பெண்களை அவர்களுடைய கணவர்கள் உறவுக்கு அழைத்தால் மறுக்காமல் சம்மதிக்க வேண்டும் என்று உங்கள் நபிகள் நாயகம் சொல்லியிருப்பது ஏற்புடையதாக இல்லையே" என்று சகோதரர் ஒருவர் கேள்வி கேட்டதும், "தீவிரவாதம் என்ற வார்த்தை கூட உங்கள் பேனரில் கூட இருக்க கூடாது என்று நான் விரும்புகிறேன்" என்று ஒரு சகோதரர் கேட்டதும் அதற்கு அழகிய முறையில் பதிலளிக்கப்பட்ட முறையும் வந்திருந்த அனைவர் மனதையும் கவர்ந்தது. எல்லா கேள்விகளுக்கும் மிக அழைய விதத்தில் திருவள்ளூர் மாவட்ட தலைவர் வேலூர் இப்ராஹீம் அவர்களும் மாநிலப் பேச்சாளார் அலீம் அல்புஹாரி அவர்களும் பதில் அளித்தனர்.
     களந்துகொண்டு கேள்வி கேட்ட அனைவருக்கும் திருக்குர்ஆன் தமிழாக்கமும் மாபெரும் தலைவர் நபிகள் நாயகம் என்ற புத்தகம் வழங்கப்பட்டது , அதிலும் வித்தியாசமாக களந்து கொண்ட விருந்தினர்களே மற்ற சக விருந்தினர்களுக்கு குர்ஆன் வழங்கியது ஒரு புதிய முயற்சியாக அனைவராலும் பாராட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.,
    களந்து கொண்ட விருந்தினர்கள் அனைவருக்கும் மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததன் அடிப்படையில் கேள்விக்கு விளக்கமும் பெற்று விருந்திலும் பங்கேற்று மனத்தெளிவோடு சென்றார்கள்.
   அடுத்தடுத்து இது போன்ற நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று களந்து கொண்டவர்கள் நம்மை கேட்டுக்கொண்டது நமக்கு உந்துதலையும், உத்வேகத்தை தந்தது அல்ஹம்துலில்லாஹ்..,.,.,

0 comments to “செங்குன்றத்தில் அமைதிக்கு அழைக்கிறது இஸ்லாம் நிகழ்ச்சி”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates