பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
காவி பயங்கரவாதிகளால் தரைமட்டமாக்கப்பட்ட தனியோனின் இல்லமாம் பாபர் மஸ்ஜிதை மீட்கும் அறப்போராட்டத்தில் ஐ.என்.டி.ஜே. ஆர்பரித்து களமிறங்கி, மேலப்பாளையம் முதல் சென்னை வரை 'பாபர்மஸ்ஜித் மீட்பு ரதயாத்திரை' அறிவித்தது. ஆளும் வர்க்கத்தின் தடையையும் மீறி, அயோக்கியர்களின் தடைக் கற்களையும் தவிடு பொடியாக்கி, ரதயாத்திரையை நடத்திக் காட்டி கைதாகினர் இதஜவின் வேங்கைகள்.
அதன் தொடர்ச்சியாக டிசம்பர் 6 அன்று மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்த ஐ.என்.டி.ஜே., அல்லாஹ்வின் பேரருளால் பேரெழுச்சியுடன் நடத்தி முடித்துள்ளது. சென்னையில் தேசியத்தலைவர் எஸ்.எம்.பாக்கர் தலைமையிலும், மாநிலத்தின் ஏனைய பகுதிகளில் மாநில நிர்வாகிகள் தலைமையிலும் போராட்டங்கள்நடந்தேறின. சென்னையில் நடபெற்ற ஆர்பாட்டத்தில் எங்கள் தொப்புள் கொடி உறவுகளான விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், யாதவ மகாசபைத் தலைவர் தி.தேவநாதன்,அரசியல் விமர்சகர் டி.எஸ்.எஸ். மணி,மீனவர் சங்கத் தலைவர்கள். உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டு தங்களின் கண்டங்களை பதி வு செய்தனர். புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே!