இறுதியில் நாங்கள் அப்பாவின் இடத்திற்கு வந்தபின், பாதுகாவலர் என்னையும், என் தங்கை லைலாவையும் அப்பாவின் இடத்திற்கு அழைத்து சென்றார். எப்பொழுதும் போல அப்பா கதவின் பின் ஒளிந்து, எங்களை பயமுறுத்துவதற்காக காத்துக் கொண்டிருந்தார். நாங்கள் சந்தித்தோம், பின் ஓர் நாளில் எவ்வளவு முடியுமோ அத்தனை அரவணைப்பும், அன்பின் வெளிப்பாடாக முத்தங்களும் பகிரப்பட்டன.
எங்கள் தந்தை எங்களை நன்கு கூர்ந்து கவனித்தார். பின் என்னை அவர் மடியில் அமரச்செய்து என் வாழ்நாளில் எக்கணமும் மறக்க முடியாத ஓர் அறிவுரையை கூறினார். என் கண்களை நேருக்கு நேர் நோக்கி என் தந்தை கூறினார்,
" ஹன்னா, இவ்வுலகில் மிகவும் விலையுயர்ந்த பொருட்களை இறைவன் மிகவும் பத்திரமான, மறைவான, எளிதில் எவரும் அடையமுடியாத இடங்களில் படைத்துள்ளான். வைரங்களை நீ எங்கே பெறுகிறாய்? நிலத்தினுள் வெகு ஆழத்தில், மறைவான, பாதுகாப்பான இடத்தில். முத்துக்களை எங்கே பெறுகிறாய்? கடலின் அடியில் அழகிய சிற்பிகளை கொண்டு மறைக்கப்பட்டு, பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள இடங்களிலிருந்து. தங்கத்தை எங்கிருந்து பெறுகிறாய்? சுரங்கங்களில் அடுக்கடுக்காய் பாதுகாப்பளிக்கும் பெரும் பெரும் பாறைகளின் பின்னாலிருந்து. கடின உழைப்பின் மூலம் மட்டுமே அவற்றை நாம் அடைய முடியும்."
பின் என் தந்தை அவரின் கண்களில் தீர்க்கத்தையும் சிரத்தையையும் வெளிப்படுத்தி என்னை நோக்கி கூறினார்,
" உன்னுடைய உடலும் மிக புனிதமானது, விலைமதிப்பற்றது. நீ வைரங்களையும், முத்துக்களையும் விட விலையுயர்ந்தவள். எனவே நீயும் உன் உடலை போர்த்தி பாதுகாத்து வைக்க வேண்டும்"
இந்த பதிவு தந்தைகளுக்கு மட்டும் அல்ல, தாய்களுக்கும்தான். ஆனால் மிக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், இங்கு தந்தையே நேரடியாக பிள்ளைகளிடம், தெளிவாக நேர்மையாக, சுற்றி வளைக்காமல், கோபப்படாமல், அவர்களை மனம் வெறுக்க செய்யாமல் அதே சமயம் அவர்கள் மனதில் என்றென்றைக்கும் மறக்காமல் தங்கக் கூடிய அளவில் அறிவுரை கூறியதுதான். நாமும் நம் பிள்ளைகளிடம் இதேபோல் பேச கற்றுக் கொள்ள வேண்டும். குழந்தைகளின் ஆடைகளைப் பார்த்துவிட்டு தாயிடம் நாம் கோபப்படுகிறேம்,"என்ன விதமான ஆடைகளை உடுத்த நீ அனுமதித்தாய்?" என்றோ அல்லது "இனிமேல் இத்தகைய ஆடைகளை அணிய வேண்டாம் என்று கண்டிப்புடன் சொல்லிவிடு" என்று கூறுகின்றோம். இதனால் பிள்ளைகள் மனதில் என்ன எண்ணம் வருகின்றது? ஆஹா...தந்தை ஒன்றும் சொல்வதில்லை, தாயே பட்டிக்காடாக இருக்கின்றாள், தாய்க்கு நாம் நாகரீகமாக உடை உடுத்துவது பிடிக்கவில்லை என்றுதான் நினைப்பார்கள். இதுவே அவர்களை தாய்க்கு எதிராக திசை திருப்புவதுடன் உண்மையில் ஏன் என்ற காரணத்தை விளங்காமலே போக வைத்துவிடும். அதுவுமன்றி, இஸ்லாத்தில் பிள்ளைகளை சரிவர வளர்க்கும் பொறுப்பு தாய்க்கு மட்டுமன்றி தந்தைக்கும் சேர்த்தே கொடுக்கப்பட்டுள்ளது. எனெவே, நாம் ஏன் இதில் தலையிட வேண்டும் என்றோ, தாயே இதை சரி செய்ய வேண்டும் என்றோ நினைக்காமல் தந்தையும் பொறுப்பை சரி வர செய்ய வேண்டும். இன்ஷா அல்லாஹ், அல்லஹ் நம்மை நல்லதொரு தாயாக, நல்லதொரு தந்தையாக வாழ கிருபை செய்வானாக.
நபிமொழி :
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானின் உடமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்வை குறித்து விசாரிக்கப்படுவான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் (ரலீ)-நூல்: அபூதாவூத் 1412
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''யார் இரு பெண்குழந்தைகளை, அவர்கள் பருவ வயதடையும்வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்'' என்று கூறிவிட்டு, தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள். அறிவிப்பவர்:அனஸ் பின் மாலீக்(ரலீ)-நூல் : முஸ்லிம்(5127)
ஒரு பெண்மணி தனது இரு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டார். அவர் அதிரிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்று விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள், '''இவ்வாறு பல பெண் குழந்தைகளால் யார் சோதிக்கப்படுகின்றாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திரிருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள்'' எனக் கூறினார்கள். அறிவிப்பவர்:ஆயிஷா (ர)-நூல் : புகாரி(1418)
''யார் இந்தப் பெண் குழந்தைகளால் ஒன்றுக்குப் பொறுப்பேற்று நன்மை புரிவாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து தடுக்கும் திரையாக இருப்பார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ர)-நூல் : புகாரி(5995) homeschoolingintamil.blogspo
தற்போதைய பதிவுகள்
Wednesday, November 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)