திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Sunday, January 30, 2011

ஐஎன்டிஜே கோரிக்கையை முதல்வர் ஏற்றார்

,
(கடிதத்தை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும் http://4.bp.blogspot.com/_m25dsPmYwkI/TUQ_WmSVkHI/AAAAAAAAAMk/p0v-Acng4l4/s1600/Page+3.jpg

தமிழக அரசு முஸ்லிம்களுக்கு வழங்கிய 3.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு அதிகாரிகள் செய்த குளறுபடிகளால் முஸ்லிம்களுக்கு உரிய பயன்கள் கிடைக்காமல் இருந்து வந்தது. தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் முலம் வேலை வாய்ப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கூட முஸ்லிம்கள் தங்களுக்குரிய இட ஒதுக்கீட்டின் பங்கை இழந்திருக்கின்றனர். இவற்றையெல்லாம் சரி செய்து முஸ்லிம்களுக்குக் கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டின் பயன்கள் முறையாகவும், முழுமையாகவும் கிடைக்க வழி வகை காண வேண்டும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பலமுறை தமிழக அரசுக்கு சுட்டிக் காட்டியது. சமுதாய மக்கள் ரிப்போர்ட் இதழிலும் இது குறித்த செய்திகள் வெளியிடப்பட்டன. (பார்க்க செய்தி http://2.bp.blogspot.com/_m25dsPmYwkI/TTpveIqYigI/AAAAAAAAAJs/TrAqxRFxmoo/s1600/Page+16.jpg

இந்நிலையில் கடந்த ஜனவரி முதல் வாரத்தில் தமிழக முதல்வருக்கு ஐஎன்டிஜே தலைவர் எஸ்.எம். பாக்கர் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், 'தங்களுடைய ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத தனி இட ஒதுக்கீட்டிற்கான சட்டம் இயற்றி அதனை நடைமுறைப்படுத்தினீர்கள். ஆனால் தாங்கள் சட்டமாக்கிய 3.5 சதவீத தனி இட ஒதுக்கீடு முழுமையாக கிடைக்கிறதா என்ற சந்தேகம் சமுதாய மக்கள் மனதில் உள்ளது. நீண்ட நெடுங்காலமாக போராடிப் பெற்ற இட ஒதுக்கீடு முழுமையாக கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் சமுதாய இளைஞர்களிடையோயும் பரவி வருகிறது.

ஆகவே அண்மையில் அருந்ததியினர் சமுதாயத்தினருக்கு அளிக்கப்பட்ட தனி இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்படுகிறதா என கண்காணிக்கும் வகையில் தலைமைச் செயலாளர் தலைமையில் செயல்முறை ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதே போன்று முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 3.5 சதவீத தனி இட ஒதுக்கீடு முழுமையாக அமுல்படுத்தப்படுகிறதா? அதன் பயன்கள் முஸ்லிம் சமுதாயத்திற்கு கிடைக்கிறதா என்பதையும் கண்காணிக்கும் வகையில் செயல்முறை ஆய்வுக்குழு அமைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன். 

மேலும் முஸ்லிம்களுக்குகென தனி இட ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்ட பிறகு அளிக்கப்பட்ட அரசு வேலை வாய்ப்புகளில் 3.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது குறித்து வெள்ளை அறிக்கையினை 'இந்திய தவ்ஹீத் ஜமாஅத்' மற்றும் முஸ்லிம் சமுதாயத்தின் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்.' என்று குறிப்பிட்டிருந்தார்.  இது குறித்து முன்னணி பத்திரிகைகளிலும் இச்செய்தி வெளியாகி இருந்தது. 

இதனைத் தொடர்ந்து முதல்வரின் தனிச் செயலாளர் சண்முகநாதனை தொடர்பு கொண்டு முதல்வருக்கு எழுதிய கடிதம் குறித்து பேசிய இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைத் தலைவர் முஹம்மது முனீரிடம், ''உங்கள் கடிதத்தை முதல்வர் பார்வையிட்டார். நல்ல முடிவு வரும்...'' என்று சண்முகநாதன் தெரிவித்திருந்தார். இந்தச் செய்தியை ஜனவரி 21-27 சமுதாய மக்கள் ரிப்போர்ட்டரில் ‘ஹைலைட்' செய்திருந்தோம். (பார்க்க செய்தி http://4.bp.blogspot.com/_m25dsPmYwkI/TUKGWwzf8uI/AAAAAAAAAME/ZHNPxciBUHU/s1600/Page+8+%2526+9.jpg

இந்நிலையில் கடந்த 28-01-2011 அன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு முறையாக சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மாலதி தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐஎன்டிஜேவின் கோரிக்கையை ஏற்று கண்காணிப்பு குழுவை அமைத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளை முஸ்லிம்களின் 3.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்த வெள்ளை அறிக்கையும் வெளியிட வேண்டும் என இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது                                                இஸ்லாமிய இடஒதுக்கீட்டு நடைமுறையைக் கண்காணிக்க குழு


சென்னை, ஜன.29- இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டு நடைமுறையைக் கண்காணிக்க தலைமைச் செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:இஸ்லாமிய சமுதாயத்தினரின் முன்னேற்றம் கருதி அவர்களுக்கு 3.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி முதல்வர் கருணாநிதி 15.9.2007 அன்று ஆணையிட்டு, நடைமுறைப்படுத்திவரும் இடஒதுக்கீட்டின்படி, இஸ்லாமிய சமுதாயத்தினர் தமிழக அரசின் கல்வி நிறுவனங்களிலும், வேலைவாய்ப்புகளிலும் உரிய இடங்களைப் பெற்றுப் பயனடைந்து வருகின்றனர்.  இந்த 3.5 சதவீத இடஒதுக்கீட்டின் செயல்பாட்டினைத் தொடர்ந்து கண்காணித்து, ஆய்வு செய்வதற்காகவும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள்வதற்காகவும், தமிழக அரசின் தலைமைச் செயலாளரைத் தலைவராகவும், பிற்படுத்தப்பட்டோர்-மிகப் பிற்படுத்தப்பட்டோர்-சீர்மரபினர்-சிறுபான்மையினர் நலத்துறைச் செயலாளரை செயல் உறுப்பினராகவும், உள்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைச் செயலாளர், ஆசிரியர் தேர்வாணையக் குழுத் தலைவர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர், சிறுபான்மையினர் நல ஆணையர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட குழு ஒன்றை அமைத்து முதல்வர் கருணாநிதி இன்று (29.1.2011) ஆணையிட்டுள்ளார். இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, January 29, 2011

நம்மை தூக்கிக்கொண்டு பறப்பதற்காக ஜனாசா ஏர் லைன்ஸ் தயாராக உள்ளது! பயணிகளே கவனமாக தயாராகுங்கள் !!!

,
ஏறும் இடம் (Departure ) : துணியா !
இறங்கும் இடம் (Araival) : கபர்ஸ்தான் !!.
புறப்படும் நேரம் : நம்மை படைத்த எல்லாம் வல்லாஹ் அல்லாஹ் அறிந்தவன்.
கவலைபடவேண்டாம் பயண நேரமும் தேதியும் மாற்றத்திற்கு உள்ளாகாது !. விமானமும் கேன்சல் ஆகாது !?.
Destination Air போர்ட் : டெர்மினல் 01 சொர்க்கம் ! / டெர்மினல் 02நரகம்!?.
இது ஒரு ட்ரான்சிட் AIR LINE ?
இந்த அதிநவீன ஏர் லயன்சின் திட்டங்களும் விபரங்களும் உலகில் எங்கும் கிடைக்காது ஆனால்
புனித திருக்குரான் மற்றும்
நபிகளார் முகமது சல்லல்லாஹுவசல்லம்அவர்களின் வாழ்வின் நடைமுறையில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
இந்த அதிநவீன எரோபிளேனின் பெயர் பிரிட்டிஷ் அல்லது கல்ப் அல்லது எமிரேட்ஸ் அல்லது ஏர் இந்திய கிடையாது.
ஆனால் இதன் பெயரோ ஏர் ஜனாசா !.
இந்த விமானத்தின் கேப்டன் மலக்குல் மவுத் !!!.
இதனில் உட்காரும் இருக்கை இல்லை, வசதியாக படுத்துக்கொண்டேபயணிக்கலாம் !.
இதில் ரவுண்டு ட்ரிப் கிடையாது ஒன் வே ட்ரிப் மட்டும்தான் !!!.?.
இதில் கண்டிப்பாக உங்கள் உடமைகளை எடுத்து கொண்டு பயணிக்க இயலாது !,
ஆனால் நமது அமல்களை எத்துனை கிலோவாக இருந்தாலும் அனுமதி கிடைக்கும் !!.
அதற்காக ஏர்போர்ட் டாக்ஸ் கட்ட வேண்டிய பிரச்னை இல்லை மகிழ்ச்சிதானே ! ?.
இதிலே செல்வதற்கு கோட் சூட் தேவை இல்லைஒரு ஆறு முழ வெள்ளை துணி போதும் ? காசு மிச்சம்தானே !!!.
இதில் நீங்கள் பயணிக்க விசாவிற்கோ மற்றும் ஏர் டிக்கெட் எடுபதற்கோ சிரமபடதேவை இல்லை !!!! ??? காசும் விரயம் இல்லை!?.
உங்களுடை விசாவும் பயண சீட்டும் நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் இருக்கும்போதே தயாராக விட்டது. !!!.
மேலும் மகிழ்ச்சிதானே?! ஆம் உங்கள் சீட் உறுதிசெய்யப்பட்டு விட்டது (confirmed )!. ரீ கன்பாம் செய்யும் பிரச்னை இருக்காது !!!.
ஆனால் உங்களுடைய சரியான பாஸ் போர்டை வைத்துகொள்ள மறந்தும் இறந்து விடாதீர்கள் ?
உங்களுக்கு பாஸ்போர்ட் செக்கிங் உண்டு !!!.
பாஸ் போர்ட் செக்கரின் பெயர் முன்கர் மற்றும் நகீர் !!!!!!! ???.
வேறு இந்தியன் or அமெரிக்கன் or பிரிட்டிஷ் or எந்தவிதவிதமான பாஸ்போர்ட்டும் செல்லுபடியாகாது ???.
ஆனால் ஒரே ஒரு பாஸ் போர்ட் தான் செல்லு படியாகும் !!!.
ஆம் அந்த பாஸ் போர்டின் பெயர் மவுத் !!!!!!.
அதிலே எல்லாருக்கும் ECR கட்டாயம் ஸ்டாம்ப் உண்டு.
எமிக்ரேசன் கிளியரன்சுக்கு மூன்று கேள்விகளை நமது பாஸ்போர்ட் எமிக்ரேசன் ஆபிசர் மதிற்பிக்குரிய முன்கர் மற்றும் நகீர் அவர்கள் கேட்பார்கள்.
அதை சரியாக கூறிவிட்டால் உங்கள் ட்ரான்சிட் லவுஞ்சில் சுகமாக ஓய்வு எடுக்கலாம் எந்த விதமான தொல்லையும் இருக்காது!!!.
ஆஆனால் சரியாக கூறாவிட்டால் உங்களுக்கு தொல்லை ஆரம்பம் ஆகிவிடும் உங்களின் ட்ரான்சிட் லவுன்ச் நரக லவுன்ச் ஆகிவிடும்???.
உஷார் !
உஷார் !
உஷார் !
உஷார் ! அந்த மூன்று கேள்விகள் !.
உன்னுடைய இறைவன் யார் ? விடை அல்லாஹ் !!!!!!.
உன்னுடைய மார்க்கம் எது ? விடை இஸ்லாம் !!!!!!!!.
உன்னுடைய நபி யார் ? விடை முகமது சல்லல்லாஹுவசல்லாம்
மறந்தும் இறந்து விடாதீர்கள் ? பதிலை சொல்ல நல்ல முஸ்லிமாக வாழ்ந்து சுகமான பயணத்திற்கு தயாராக இருங்கள் இன்ஷா அல்லாஹ் !.
வஸ்ஸலாம்
நம்முடைய ஏர் ஜனாசா !. பயணம் நல்ல பயணமாக அமய துவா செய்யும்,
"எங்கள் இறைவா ! உன்மீது ஈமான் கொண்டவர்களை நல்லோருடன் வாழ வைப்பாயாக ! நல்லோருடன் சேர்பாயக"
"யா முகல்லிபுள் குளுஉப் சப்பிக அலா கல்பி தீனுக்க"

பெரியார் பார்வையில் இஸ்லாம் (அ) ஏகத்துவம்..

,
(’இஸ்லாம்’ பற்றி பகுத்தறிவு கொள்கை கொண்ட பதிவர்கள் சிலரின் மதிப்பீடுகளை-பின்னூட்டங்களை தமிழ்மணத்தில் படித்துவிட்டு -பகுத்தறிவு தந்தையின் மதிப்பீடு என்னவென்று தேடியபோது கிடைத்ததை மீள்பதிவு செய்திருக்கிறேன்).
சகோதரர்களே! 69 ஆதிதிராவிடர்கள் முகமதியர்களாகி விட்டதால், அவர்களுடைய பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டதென்றோ, அவர்களுக்கு "மோட்ச லோகம்' கூப்பிடும் தூரத்திற்கு வந்துவிட்டதென்றோ, "கடவுளோடு கலந்து விட்டார்கள்' என்றோ கருதி நான் மகிழ்ச்சி அடையவில்லை. இவைகளை நான் ஏற்றுக் கொள்ளுவதும் இல்லை. மற்றவர்களை நம்பும்படிச் சொல்வதும் இல்லை. அன்றியும், ஒரு மனிதன் மதம் மாறுவதால் அவனுடைய செய்கைக்கும், எண்ணத்திற்கும் தகுந்த பலன் அடைவதில் வித்தியாசமுண்டு என்பதை நான் ஒப்புக் கொள்வதில்லை.
இந்துவாயிருந்து பசுவைக் கொன்றால் பாவம் என்றும், முமகமதியனாயிருந்து பசுவைக் கொன்று தின்றால் பாவமில்லை என்றும், மதத்தின் காரணமாக கருதுவது மூடநம்பிக்கையே ஒழிய, இரண்டுவித அபிப்பிராயத்திலும் அர்த்தமே இல்லை. உலகத்தில் உள்ள சகல மதங்களும் மூட நம்பிக்கையின் மீதே கட்டப்பட்டிருக்கின்றன. ஆகையால், பாவபுண்ணியத்தையும், மோட்ச நரகத்தையும் ஆதாரமாய் வைத்தும் நான் மகிழ்ச்சியடையவில்லை.

மற்றென்னவென்று கேட்பீர்களேயானால், இந்து மதம் என்பதிலிருந்து மதம்மாறினதாகச் சொல்லப்படும் 69 ஆதிதிராவிடர்களும், பிறவியின் காரணமாக அவர்களுக்குள்ள இழிவிலிருந்து விடுதலை அடைந்ததோடு, பாமரத் தன்மையும் காட்டுமிராண்டித்தனமுமான மிருகப்பிராயத்திலிருந்தும், அறியாமையிலிருந்தும்சிறிது விடுதலை அடைந்தவர்களானார்கள் என்பதற்காகவே மகிழ்ச்சியடைகின்றேன்.

அதாவது, மேற்கண்ட 69 பேர்களுக்கும் தீண்டாமை என்பது போய்விட்டது. இனி ஒருவன் அவர்களைப் பறையன், சக்கிலி, சண்டாளன் என்று இழிவாய்க் கூற முடியாது. அவர்களும் மற்றவர்களை "சாமி, சாமி, புத்தி' என்று கூப்பிட்டுக் கொண்டு தூர எட்டி நிற்க வேண்டியதில்லை. மற்ற மனிதர்களின் காலில் விழுந்து கும்பிட வேண்டியதில்லை. ஊரை விட்டு வெளியில் குடி இருக்க வேண்டியதில்லை. குளிக்கத் தண்ணீரில்லாமல், குடிக்கத் தண்ணீரில்லாமல் திண்டாட வேண்டியதில்லை.

வண்ணான், நாவிதன் இல்லாமல் அழுக்குத் துணியுடனும், கரடிபோல் மயிர் வளர்த்துக் கொண்டும், பார்ப்பவர்களுக்கு அசிங்கமாகத் தோன்றும்படி வாழவேண்டியதில்லை. இனி எந்த பொதுத் தெருவிலும் நடக்கலாம்; எந்த வேலைக்கும் போகலாம்; யாருடனும் போட்டி போடலாம்; அரசியலில் சமபங்கு பெறலாம்; மத சம்பந்தமாகவும் இனி அவர்கள் தங்கள் கோயிலுக்குள் போக தாராள உரிமை உண்டு; வேதம் படிக்க உரிமையுண்டு.

எனவே, இவர்கள் பொருளாதாரக் கஷ்டத்திலும், அறிவு வளர்ச்சித் தடையிலும், சமூக இழிவிலும், சுயமரியாதைக் குறைவிலும், அரசியல் பங்குக் குறைவிலுமிருந்து ஒருவாறு விடுதலை அடைந்து விட்டார்கள் என்பது போன்றவைகளை நினைக்கும்போது மகிழ்ச்சியடையாமலிருக்க முடியவில்லை. ஏனெனில், தீண்டாமை, நெருங்காமை, பார்க்காமை, பேசாமை முதலாகிய சகிக்க முடியாத கொடுமைகள் முதலாவதாக மதத்தின் பேரால், வேத சாஸ்திரங்களின் பேரால், கடவுள்களின் பேரால் உள்ளவைகள் எல்லாம் அடியோடு நீங்க வேண்டும் என்கின்ற தீவிர ஆசையே இம்மாதிரி நினைக்கச் செய்கின்றது.

ஆகையால், தீண்டாமை முதலிய கொடுமை ஒழிய வேண்டும் என்கின்ற கருத்துள்ளவர்களுக்கும், ஒற்றுமையை எதிர்பார்க்கும் கருத்துள்ளவர்களுக்கும், மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியை ஊட்ட வேண்டும் என்னும் கருத்துள்ளவர்களுக்கும் நமது நாட்டில் இப்போது உள்ள முக்கியவேலை, முதலில் தீண்டப்படாதவர்கள் முகமதியராவதை ஆட்சேபியாதிருப்பதேயாகும் என்பது, எனது தாழ்மையானதும், கண்ணியமானதுமான அபிப்பிராயம்.

நிற்க. சிலர் முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குகின்றது என்று எனக்கு எழுதி இருக்கிறார்கள். அது வாஸ்தவமானால், தீண்டப்படாதவர்களுக்கு அவர்களது தீண்டாமை ஒழிய முகமதிய மதத்தைச் சிபாரிசு செய்வதற்கு அதுவே ஒரு நல்ல காரணம் என்றே கருதுகிறேன். முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குவது உண்மையானால், அதில் சேர்ந்த இவர்கள் இனிமேலாவது இவ்வளவு தாழ்மையாக நடந்து கொள்ள மாட்டார்கள் அல்லவா? மற்றவர்களும் அவர்களது முரட்டு சுபாவத்தைக் கண்டு பயந்து மரியாதையாய் நடந்து கொள்ள இடமேற்படும் அல்லவா?

ஆகையால், இந்து சமூகத்தில் உண்மையான சமத்துவமும் ஒற்றுமையும் ஏற்படும்வரை தீண்டப்படாதவர்கள் கும்பல் கும்பலாய் முகமதியர் ஆவதைத் தவிர வேறு மார்க்கமில்லையாதலால், நாம் அதை ஆட்சேபிக்க முடியாதவர்களாய் இருக்கின்றோம். தவிரவும், மதத்தினிடத்திலோ இந்து சமூகத்தினிடத்திலோ கவலையுள்ளவர்களுக்கு இதனால் ஏதாவது சங்கடம் இருப்பதாயிருந்தால், அவர்கள் தாராளமாய் வெளிக்கிளம்பி வந்து தீண்டப்படாத மக்களுக்கு இருக்கும் கொடுமையையும் இழிவையும் நீக்க முன்வரட்டும். அவர்களோடும் எப்போதும் ஒத்துழைக்கத் தயாராயிருக்கிறேன்.
ஐந்து மணிக்குத் தீண்டத்தகாதவன் 5.30 மணிக்குத் தீண்டத்தகுந்தவன்!

நான் இந்து மதத்தைப் பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தினுடையவும் ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள். அந்த வேலையை ஒரு பரீட்சை மாணவனுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலை இல்லை. ஆனால், நான் பேசுவது என்பது, இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பெரும்பான்மை மக்களிடையே இருந்து வரும் பிரத்தியட்சக் கொள்கைகள் சம்பந்தமான காரியங்களையும், அதனால் அவரவர்கள் பிரத்தியட்சத்தில் அடைந்துவரும் பலன்களையும் பற்றித்தான் பேசுகிறேன்.

அந்தந்த மதங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? அதனால் சமூகம் என்ன பயனடைந்திருக்கிறது? என்பன போன்றவைகள்தான் மதத்தின் மேன்மையை அளக்கும் கருவியாகும். அப்படிப் பார்ப்போமானால், அனேக விஷயங்களில் இந்து மதத்தைவிட இஸ்லாம் மதமே மேன்மையுடையது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

இஸ்லாம் மக்களிடத்தில் தங்களுக்குள் சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, அன்பு முதலிய குணங்கள் இருக்கின்றன. வீரம் இருக்கின்றது. வீரம் என்றால் லட்சியத்திற்கு உயிரைவிடத் துணிவது என்பதுதான். இஸ்லாம் மதத்தில் உயர்வு தாழ்வு இல்லை. அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை. அவர்களது தெருவில் நடக்கக்கூடாதவன், குளத்தில் இறங்கக்கூடாதவன், கோவிலுக்குள் புகக்கூடாத மனிதன் இல்லை. இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

இந்துக் கொள்கையில் வேறு எங்கு ஒற்றுமையாய் இருந்தாலும் சமூக வாழ்விலும் கடவுள் முன்னிலை என்பதிலும், மனிதன் மிருகத்தைவிடக் கேவலமாய் நடத்தப்படுகின்றான். இதை நேரில் காண்கின்றோம். இதைத்தான் அன்பு மதம், சமத்துவ மதம் என்று இந்துக்கள் தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள்.

மதத் தத்துவ நூலை, வேதம் என்பதை இஸ்லாம் மதத்தில் உள்ள செருப்புத் தைக்கும் சக்கிலியும், மலம் அள்ளும் தோட்டியும் படித்தாக வேண்டும்; பார்த்தாக வேண்டும்; கேட்டாக வேண்டும். இந்துமத வேதம் என்பதை ஒரே ஒரு சிறு கூட்டம் தவிர பார்ப்பனன் தவிர மற்ற யாவரும் அவன் பிரபுவானாலும், ஏழையானாலும், யோக்கியனானாலும், அயோக்கியனானாலும் சரி, ஒருவனுமே படிக்கவும் பார்க்கவும் கேட்கவும் கூடாது.

இஸ்லாம் கொள்கை மக்களை ஒன்று சேர்க்கிறது. இந்தியாவில் கொஞ்ச காலத்திற்கு முன் ஒரு கோடியைவிடக் குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள் இன்று 8 கோடி மக்களாய்ச் சேர்ந்திருக்கிறார்கள். இன்று யாவரையும், எப்படிப்பட்ட இழிவானவர் என்று இந்து மார்க்கத்தாரால் கருதப்பட்டவர்களையும் தனக்குள் சேர்த்துக் கொள்ளக் கையை நீட்டுகின்றது. இந்துக்களின் கொள்கையோ எப்படிப்பட்ட மேலானவன் என்று மதிக்கப்பட்டவனையும் உள்ளே விட மறுத்து, வாசற்படியில் காவல் காக்கின்றது; தன்னவனையும் வெளியில் பிடித்துத் தள்ளுகின்றது.

ஆதித் திராவிடர்களை நான், ‘இஸ்லாம் மதத்தில் சேருங்கள்' என்றுசொன்னதற்காக அனேகம் பேர் என்மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப்பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை; சொல்வதைக் கிரகிக்கச் சக்தியும் இல்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம். ஏனெனில், மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை; அல்லது "ஆத்மார்த்தத்திற்கோ' "கடவுளை அடைவதற்கோ' நான் அப்படிச் சொல்லவில்லை. ஆதித் திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்குச் சட்டம் செய்வது, சத்தியாக்கிரகம் செய்வது போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன்; இனியும் சொல்கின்றேன்.

சட்டம் செய்வது கஷ்டம்; செய்தாலும் நடைமுறையில் வருவது கஷ்டம். சத்தியாக்கிரகம் செய்வதும் கஷ்டம்; செய்தாலும் வெற்றி பெறுவது சந்தேகம். இவற்றால் துன்பமும் தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால், ஆதித் திராவிடர்களுக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது, அன்னியருக்கு ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் ஆத்திகனாய் இருந்தால் என்ன? நாத்திகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனால் என்ன? உலகில் மதங்கள் ஒழிக்கப்படும்போது, இஸ்லாம் மதமும் ஒழியும்.

ஏன் கிறிஸ்து மதத்தைக் தழுவக் கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக் கூடாது? கிறிஸ்து மதக் கொள்கைகள் புத்தகத்தில் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி நான் சொல்ல வரவில்லை. நடைமுறையில் பறை கிறிஸ்தவன், பார்ப்பாரக் கிறிஸ்தவன், வேளாளக் கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், கைக்கோளக் கிறிஸ்தவன், நாடார் கிறிஸ்தவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர். இஸ்லாம் மார்க்கத்தில் இவ்வித வேறுபாடுகள் இருக்கின்றனவா? கிறிஸ்தவ சகோதரர்கள் கோபிக்கக் கூடாது; வேண்டுமானால், வெட்கப்படுங்கள் என்று வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரிய சமாஜம் என்பதும் ஒரு வேஷந்தான்.

நன்றி :dailymuslimnews

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சவுதியிலிருந்து ஒரு மடல்!..

,

இசைத்துறையில் ஆஸ்கார் விருது பெற்ற அன்பு சகோதரர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு…

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது நிலவட்டுமாக!

‘சவுதி அரேபியாவுக்கு சென்ற ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜித்தாவில் உற்சாக வரவேற்பு’, ‘புனித பூமியில் பிறந்தநாள் கொண்டாடிய இசைமேதை’ என்றெல்லாம் சில தினங்களுக்கு முன் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. அதுபற்றி தெளிவுபடுத்த விரும்பியதன் விளைவே இந்த கட்டுரை.

ஆஸ்கார் விருது பெற்றபோது எல்லா புகழும் இறைவனுக்கே! என்று மிகத் தெளிவாக அறிவித்து எங்களைப் போன்றவர்களை வியப்பில் ஆழ்த்தினீர்கள். இஸ்லாத்தில் இசை என்பது தடுக்கப்பட்டது. ஒரு சாராயக்டையை அல்லது ஒரு விபச்சார விடுதியை நடத்தி அதன் மூலமாக வரும் கோடிக்கணக்கான வருமானத்தை ஒருவன் ஏழை எளியவர்களுக்கு தர்மம் செய்தாலும் அவன் செய்யும் வியாபாரம் ஹலாலாக ஆகிவிடாது. தடுக்கப்பட்டதை செய்து மக்களை வழிகெடுத்ததற்கான தண்டனையை அவன் அனுபவித்தே ஆகவேண்டும் என்பது இஸ்லாமிய நியதி. உங்களது இசையும் அது போன்றதே! நீங்கள் அமைக்கும் இசையானது வெறும் இசையுடன் மட்டுமின்றி ஆபாசக்காட்சிகளுடன் வெளியிடப்படுகின்றன. அந்நியர்களுடன் சரச சல்லாபத்தில் ஈடுபடுவதும் அங்க அவயங்களை மாற்றாருக்கு காண்பிப்பதும் இஸ்லாத்தில் மிகப்பெரும் தவறு என்பதை தாங்கள் அறியாமலிருந்தால் அதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகின்றேன். ஒரு தீமையை செய்ததற்காக கிடைத்த விருதை நீங்கள் பெற்றபோது ‘எல்லா புகழும் இறைவனுக்கே! என நீங்கள் விளித்தது ‘நன்மையும் தீமையும் இறைவனிடத்தில் இருந்து வருபவை’ என்ற இஸ்லாமிய கோட்பாட்டின் படி மட்டுமே சரியானது. ஆனால் தீமை செய்ததற்கான தண்டனையை மறுமையில் அனுபவித்தே ஆக வேண்டும்.

ஒருவன் பிற மதத்திலிருந்து இஸ்லாத்தை தேர்ந்தெடுத்து வந்தால் அவனது முந்தைய பாவங்கள் அனைத்தையும் இறைவன் மன்னித்து விடுகின்றான் என நமது வழிகாட்டியாகிய நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவ்வாறு அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்ட நீங்கள் மீண்டும் தர்ஹாக்களுக்கு சென்று இணைவைப்பு எனும் பாவத்தை சம்பாதித்து வருகின்றீர்கள்.



காத்ரீனா கைஃப், ஷில்பா ஷெட்டி போன்றவர்களெல்லாம் தலையில் பூக்கூடை அணிந்தவர்களாக அஜ்மீர் தர்ஹாவுக்கு செல்கிறார்கள் என்றால் அது பிழைப்புக்காக! முஸ்லிம் ரசிகர்களும் படம் பார்க்க வரவேண்டும் என்ற நப்பாசையும் தனது படம் நிறைய நாள் ஓடவேண்டும் என்ற சுயலமும் தான் அதற்கு காரணம். அவர்களை பொறுத்தவரை அது பத்தோடு பதினொன்று. கோவிலுக்கும் செல்வார்கள், சர்ச்சுக்கும் செல்வார்கள், தர்ஹாவுக்கும் செல்வார்கள்.

இறைவனைத் தவிர வேறு எவராலும் நமக்கு எதையும் தந்திட முடியாது என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. ‘எம்மதமும் சம்மதம்’ என்று சொல்பவன் ஏக இறைவனை வணங்கக் கூடியவனாக இருக்க முடியாது. பல தெய்வ கொள்கைகளை தகர்த்து ஏக தெய்வ கொள்கையை இஸ்லாம் வலியுறுத்துகிறது. அப்படியிருக்க கல், மண், கப்ரு, மகான் என்பனவற்றிற்கு சக்தி எங்கிருந்து வரும். அவைகளால் திரைப்படம் அதிக நாள் ஓடும் என நீங்கள் நம்பினால் நீங்கள் இஸ்லாத்திலிருந்து விலகி விட்டீர்கள் என்றே அர்த்தம். உங்களை ஒரு இஸ்லாமியராக உலகம் பார்ப்பதால் தர்ஹாக்களுக்கு நீங்கள் செல்வதை இஸ்லாமிய வழிபாட்டில் ஒரு பகுதியாக சிலர் எண்ணும் வாய்ப்புகளுண்டு. அது களையப்பட வேண்டும். ஆனால் இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், உங்களை ஜித்தாவில் வரவேற்றவர்கள் இசை என்பது ஹராமென்றோ, தர்ஹாக்களிடம் கையேந்துவது மிகக் கொடிய பாவம் என்றோ தங்களுக்கு ஏன் சொல்லவில்லை என்பது தான். உங்களை வரவேற்ற முஸ்லிம் பெயர்தாங்கிகள் அனைவருமே ஒரு பிரபலத்துடன் போஸ் கொடுக்க வேண்டும் என்ற நினைப்புடன் நடந்துள்ளார்கள் என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

மக்காவில் உம்ரா செய்ய வேண்டுமென்று வந்ததாகவும் அந்த புண்ணிய பூமியில் தங்களது பிறந்தநாளை கொண்டாட வேண்டுமென்றும் விரும்பியதாக தாங்கள் பேட்டியளித்துள்ளீர்கள். அஜ்மீர் தர்ஹா, கடப்பா தர்ஹாவிற்கு சென்று பிரார்த்திப்பது போன்றதல்ல மக்காவுக்கு செல்வது என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எண்ணப்படி தான் செயல்கள் அமையும் என்பது புகாரி ஹதீஸ் புத்தகத்தில் வரும் முதலாவது ஹதீஸ். இதுவரை நீங்கள் படிக்காமலிருந்தால் இன்றே அதை புரட்டுங்கள். ஒருவன் தனது நாட்டை, குடும்பத்தை, செல்வத்தை விட்டு அடுத்த நாட்டுக்கு ஹிஜ்ரத் செய்யும் போது அங்கே இருக்கும் அழகான பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என எண்ணி இருந்தால் அது நிறைவேறும். ஆனால் இறைவனின் பொருத்தத்தை அடைய முடியாது என்பது அந்த ஹதீஸின் அர்த்தம். பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்ற அர்த்தத்தில் நீங்கள் வந்திருந்தால் அது நிறைவேறிவிட்டது, உம்ரா இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பது சந்தேகமானதே! அதை இறைவன் ஒருவனே அறிவான்.

பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை, நாம் போற்றும் நபிகளார் பெருமானார் (ஸல்) அவர்கள் தனது எந்த பிறந்தநாளுக்கும் கேக் வெட்டியதில்லை, இன்று என்னுடைய பிறந்தநாள், எனவே விழா எடுங்கள் என்றோ சொன்னதில்லை, அவர்களது காலத்தில் பாசத்திற்குரிய குழந்தைளுக்கும் அன்பிற்குரிய மனைவிகளுக்கும் நேசத்திற்குரிய தோழர்களுக்கும் பிறந்தநாள் கொண்டாடியதில்லை, அதை அனுமதிக்கவுமில்லை. ஆனால் அறியாமையால் நீங்கள் கேக் வெட்ட முனைந்த போது தங்களுடன் இருந்த எவருமே தடுக்காதது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். அந்த இடத்தில் அது தவறு என்பதை தங்களுக்கு அவர்கள் உணர்த்தி இருந்தால் தாங்களும் அதை உணர்ந்து அந்த தவறை செய்யாமல் இருந்திருப்பீர்கள். அதன் மூலமாக தமிழ் முஸ்லிம்களிடத்தில் அது பற்றிய ஒரு விழிப்புணர்வும் ஏற்பட்டிருக்கும். தாங்கள் செய்த அச்செயல் இன்று ஒரு முன்னுதாரணமாக மாறிவிடுமோ என்ற கவலையே என்னுள் எழுகின்றது.

பிறந்தநாளுக்கு கேக் வெட்டுவது இஸ்லாமிய கலாச்சாரமல்ல! அதுவும் சவுதி அரேபியாவில் அதை அனுமதித்த ஜித்தா நண்பர்கள் மிகப்பெறும் தவறிழைத்துவிட்டார்கள். அவர்கள் தங்களை இஸ்லாமியனாக பார்க்கவில்லை. உடன் நின்று போட்டோ எடுக்கும் பிரபலமாகத் தான் பார்த்திருக்கின்றார்கள். இல்லையேல் உம்ரா செய்யும் போது மொட்டை அடிப்பது தான் சிறந்தது என்பதை சொல்லி தந்திருப்பார்கள். ஏனெனில் உம்ரா செய்துவிட்டு முடிகளை விரலளவு களைவதை இஸ்லாம் கற்றுத்தரவில்லை. மொட்டையடிப்பதை சிறந்ததாக கூறுகிறது. மொட்டையடித்தவர்களுக்காக நபிகள் பெருமானார் மூன்று முறை பிரார்த்தனை செய்துள்ளார்கள் என்பதை உங்களது வழிகாட்டிகள் உங்களுக்கு சொல்லித்தரவில்லை. அவர்களுக்கும் தெரிந்திருக்குமோ என்பதும் சந்தேகமே!

சரி! தங்களது பிறந்தநாளில் என்ன வித்தியாசத்தை நீங்கள் பார்த்தீர்கள். வயதை அளவிடும் ஒரு நாளே தவிர எந்த சிறப்பும் அதற்கு இல்லை. ஆண்டுக்கொருமுறை தான் பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்பதை எதன் அடிப்படையில் தீர்மானித்தீர்கள். வருடத்திற்கொருமுறை ஏன் அந்த நாளை கொண்டாட வேண்டும். மாதத்திற்கொரு முறை கொண்டாடலாமே? ஒவ்வொரு மாதமும் 6ம் தேதி கொண்டாடலாமே? ஏன்? கிழமையை கணக்கிட்டு வாரத்திற்கொருமுறை கூட கொண்டாடலாமே? நீங்கள் பிறந்தது திங்கள்கிழமை என்றால் இன்று அது வியாழக்கிழமை! பின் எவ்வாறு பிறந்தநாள் கொண்டாட முடியும். எனவே சிந்தியுங்கள்!

நம்மை பொறுத்தவரை வாழ்க்கை என்பது இந்த உலகத்துடன் முடிந்து விடுவதில்லை. மறுமை உலகம் என்ற மாபெரும் பேறு நமக்காக காத்திருக்கின்றது. அதில் நாம் வெற்றியடைய வேண்டுமாயின் அதற்கான தேர்வுக்கூடம் தான் இது. உங்களை புகழ்ந்து கொண்டும் உங்களுடன் போட்டோவுக்கு போஸ் கொடுப்பவர்களும் மறுமையில் உங்களுக்கு துணையாக வரமாட்டார்கள். மறுமை நாளிலே இந்த கூட்டமெல்லாம் உங்களை வரவேற்க வராது, உதவிகள் செய்யாது. நீங்கள் மட்டும் தனித்து விடப்படுவீர்கள். மரணிக்குமுன் நீங்கள் தவறுகளுக்காக இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்டுவிட்டால் அவன் நாடினால் மன்னித்துவிடுவான்.

இறுதியாக, தமிழகத்திலோ அல்லது வடமாநிலங்களிலோ இந்த பிறந்தநாளை நீங்கள் கொண்டாட திட்டமிட்டிருந்தால் திரையுலகமும் ஆட்சியாளர்களும் திரண்டு ஊரே கோலாகலமாக இருந்திருக்கும். ஆனால் அதைவிட புனித பூமியான மக்காவிற்கு செல்வதை நீங்கள் சிறந்ததாக கருதியதிலிருந்து அந்த புகழாரத்தை விட மக்காவின் அமைதியை நீங்கள் விரும்பியுள்ளீர்கள் என்பது தெளிவாகின்றது. எனவே தங்களை சுற்றியுள்ள கூட்டமே தங்களை முழுமையாக இஸ்லாத்தில் நுழையவிடாமல் தடுக்கின்றன என்பதை என்னால் உணர முடிகின்றது.

ரசிகர்கள் கூட்டத்தை கண்டு புளகாங்கிதம் அடையாமல் மறுமையை பற்றிய தேடுதலை அதிகப்படுத்துங்கள். அப்போது மிகப்பெரிய மாற்றத்தை காண்பீர்கள். உங்களது தேடுதலில் இறைவனை பற்றிய அறிவை நீங்கள் பெற்றுவிட்டால் கல்லை, கபரை, மனிதனை வணங்க கூடாது என நீங்கள் முடிவெடுத்து விடுவீர்கள். ஆனால் அதை அறிவித்து விட்டால் நீங்கள் தனித்து விடப்படுவீர்கள். எதிர்ப்புக்கு உள்ளாக நேரிடும். இசை, பாடல்களின் மூலம் கிடைத்த புகழாரம் மற்றும் வருமானம் நின்று போகும். உங்களின் இசை, ஆடல், பாடல்களை ரசித்து உங்களை சுற்றிலும் இருப்பவர்கள் உங்களை வெறுக்க ஆரம்பித்து விடுவர். நீங்கள் தனித்து விடப்படுவீர்கள். இந்த விளைவுகளுக்கு நீங்கள் தயாராக இருந்தால் இன்றே தங்களது தேடுதலை துவக்குங்கள்.

அன்பிற்குரிய ரஹ்மான்!

நீங்கள் இஸ்லாத்தை ஏற்றதும் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்டதை போல இணைவைப்பிலிருந்து விலகி தவ்பா செய்தால் மீண்டும் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களாக மாறுவீர்கள், மாறவேண்டும் என்பதே எனது அவா. ஏனெனில் மறுமை நன்மைக்காகத் தான் நீங்கள் உம்ராவுக்கும் வந்தீர்கள். மதீனாவிலிருந்து ஜித்தா செல்ல பிளைட்டுக்கு நேரமாவதைக் கூட உணராமல் பிரார்த்தனையில் லியித்ததாகவும் அதனால் பிளைட்டை தவற விட்டுவிட்டு காரில் ஜித்தா செல்லும் நிலை எற்பட்டதாகவும் செய்தி அறிந்தேன். பிரார்த்தனையில் இத்தனை நிகழ்வுகள் நிகழும் போது மறுமையில் கேள்விக்கணக்கு நாளில் நமது நிலை என்னவாக இருக்கும்! அங்கு தனித்து விடப்படுவதை காட்டிலும் இவ்வுலகில் தனித்து விடப்படுவது துன்பம் தரும் விஷயமல்ல. மரணத்திற்கு பின் இருப்பதே நிலையான வாழ்க்கை என்பதை அறிந்து கொண்டு தீயவைகளை களைந்து இறைவனுக்கு பிடித்தவற்றை மட்டும் செய்யக்கூடியவனாக தங்களை இறைவன் மாற்றவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தவனாக முடிக்கின்றேன்.
நன்றி:Changesdo.blogspot.com

அடக்கஸ்தலம் கோரி தடையை மீறி INTJ ஆர்பாட்டம்! ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைதாகி விடுதலை !

,
வேளச்சேரி, தரமணி, மடுவங்கரை பகுதி மக்களின் பல வருட கோரிக்கையான அடக்கஸ்தல கோரிக்கையை கண்டு கொள்ளாமல் 'நாய்களை புதைக்க நகரின் மத்தியில் இடம் வழங்கிய' மாநகராட்சி மற்றும் தி.மு.க.மேயரை கண்டித்து   இந்திய தவ்ஹித் ஜமாஅத் சார்பில் நேற்று (28.01.2011) மாபெரும் ஆர்பாட்டம் நடை பெற்றது! 
சமுதயாத்திற்கு ஒன்று என்றால் முதலில் களமிறங்கும் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் போர்க்குணம் மிக்க நிர்வாகிகள், எதையும் வித்தியாசமான கோணத்தில் கையில் எடுத்து இறையருளால் தொடர்ந்து வெற்றியும் பெற்று வருகிறார்கள். நேற்றைய தினம் வேளச்ரியில் நடந்த இந்த நூதனப் போராட்டத்தை சந்தூக்கு ஏந்திய போராட்டமாக அறிவித்து சந்தூக்குகளோடு வந்து குவிந்தனர்.
வேளச்சேரி மாநகராட்சி முற்றுகை என்றதும் அனுமதி மறுத்த காவல்துறை அனுமதி மறுத்து உணர்ச்சி மிகு பிரச்னை என்பதால் அசம்பாவிதங்கள் நிகழா வண்ணம் காவல் துறையினரின் படை குவிக்கப்பட்டு பத்திற்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் இருந்தும் ஆய்வாளர் உள்பட அனைவரும் குவிந்திருந்தனர்.

































கண்டன உரை நிகழ்த்திய மவ்லவி முஜிபுர் ரஹ்மான் பாகவி,  நாய்களை விட நம்மை மோசமாக மதிக்கும் மாநகர மேயரை கண்டித்தார்.  விழிப்புணர்வு கழகத்தின் மவ்லவி தர்வேஷ் ரஷாதி, வரும் தேர்தலில் மக்கள் தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்டுவார்கள் என குமுறினார். விடுதலை சிறுத்தைகள் யூசுப் 'இனி யாரையும் நம்பி பயன் இல்லை! நம்முடைய உரிமைகளைப்பெற நாம் களமிறங்க வேண்டும். அப்படிப்பட்ட  போராட்டங்களுக்கு சமுதாயம் பாக்கர் தலைமையில் ஒன்று பட வேண்டும் என உணர்ச்சி மிகு உரையாற்றினார்.
இறுதியாக பேசிய தலைவர் S.M..பாக்கர் இருபத்தோராம் நூற்றாண்டிலும் இறந்தவர்களை அடக்க இடம்   கேட்டு போராடுவது தமிழக அரசுக்கே அவமானம் என்றார். இந்த நிலை நீடித்தால் அடுத்த மய்யித்தை கோபாலபுரத்தில் அடக்குவோம் என அதிரடியாக கூறியபோது “அல்லாஹு அக்பர்” என்ற கோஷதத்துடன் ஆர்ப்பரித்தது மக்கள்  கூட்டம் !    
       
சந்தூக்கில் பிணக் கோலத்தில் ஏறி படுத்த ஒருவரை தடுத்தது! எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த உரிமை இல்லையா? என பொங்கி எழுந்த மக்களை கண்டு போலீஸ் அடங்கியது! ஆரம்பத்தில் கெடுபிடி செய்த காவல்துறை பின்னர் பணிந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கைது செய்து கொண்டு செல்ல வாகனமின்றி திணறியது .
சந்தூக்கையும்  போலீஸ் வேனில் ஏற்றிய போது இந்திய வரலாறில் ஒரு சந்தூக்கு கைது செய்யப்படுவது முதல் முறை என கமென்ட் அடித்து கலகலப்பூட்டினார்  .அருகில் உள்ள மாநகராட்சி மண்டபத்தில் ஆண்களும் பெண்களும், குழந்தைகளும் அடைக்கப்பட்ட உடன் , அதையும் வழக்கம் போல் மக்களுக்கு மார்க்கத்தை சொல்லும் இடமக்கினார் , மாநில பேச்சாளர் மசுதா ஆலிமா.
அஸர் மற்றும் மக்ரிப் தொழுகைகளை ஜமாஅத்தாக   தொழுத போது, நம்முடைய தொழுகை அணிவகுப்பையும் தொழும் முறையையும் கட்டுப்பாடு மிக்க இராணுவத்தின் செயல்களாக வியந்து பார்த்தனர் காவல் துறையினர். மக்ரிப் தொழுகைக்குப் பின் அனைவரையும் விடுவித்தனர்.   அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் ஸித்தீக், அப்துல் ஹமீது, ஷிப்லி, இனாயதுல்லாஹ், முஹம்மது முஹைதீன், வேளச்சேரி சிராஜ் உள்ளிட்டவர்களுடன் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Friday, January 28, 2011

பிரித்தானியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கையில் அபார வளர்ச்சி _

,



  பிரித்தானியாவில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை எதிர்வரும் 20 வருடங்களில் இரு மடங்காக அதிகரிக்கும் என ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

முஸ்லிம்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 5.5 மில்லியன்களாகக் காணப்படும் எனவும் இத்தொகையானது குவைத்தில் உள்ள முஸ்லிம்களின் தொகையை விட அதிகம் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதிகப்படியான இடம்பெயர்வுகளே இதற்கான காரணமாக இருக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை குறித்த காலப்பகுதியில் அமெரிக்காவில் உள்ள பிரித்தானியர்களின் எண்ணிக்கை சுமார் 6.2 மில்லியனாக இருக்கலாம் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.


அவ்வறிக்கையின்படி பிரித்தானியாவில் குடியேறும் 4 பேரில் ஒருவர் முஸ்லிம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


2030 ஆம் ஆண்டளவில் உலகின் மொத்த சனத்தொகையில் 26 % முஸ்லிம்களாக காணப்படுவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.



இஸ்லாத்தின் பார்வையில் காதலர் தினம்

,

இஸ்லாத்தின் பார்வையில் காதலர் தினம்

இளசுகளின் மனம் மறந்தவிடாது அலைபாயும் ஒரு தினம் என்றால் பெப்ரவரி 14ம் திகதி காதலர் தினம்! பெப்ரவரி மாதத்தை பொறுத்தவரை எமது நாட்டுக்கு முக்கியமான ஒரு மாதம். சுமார் ஒரு நூற்றாண்டு காலம் கிறிஸ்தவ ஆங்கியர்களுக்கு அடிமைப் பட்டு கிடந்து சுதந்திரம் அடைந்த மாதம். பெப்பரவரி 4ம் திகதி எமது நாடு (இலங்கை) விடுதலைப் பெற்ற தினம்! இத்தினம் பற்றி பள்ளிப் பருவ மாணவர்கள் முதல் பல்லுப் போன வயோதிபர்கள் வரை அறிந்து வைத்திருக்க வேண்டிய தினம்! ஆனால் இன்று யாரும் அத்தினம் பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. எல்லோரும் பெப்ரவரி 14ம் திகதியைத் தான் மனமகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள். வாலிபர்கள், வயோதிபர்கள், தம்பதிகள் என்று பலரும் பூச்செண்டு, பரிசுப் பொருட் கள் கொடுத்து வாழ்த்து தெரிவிக்கிறார்கள். விஷேடமாக இளம் வாலிபர்கள் தங்களுடைய காதலை புனிதப் படுத்தக் கூடியதாக அத்தினத்தை பூஜிக்கிறார்கள் தனது பிறந்த நாளை மறந்துவிட்டாலும், ‘காதலர் தினத்தை’ மறந்தவிட முடியாத நிலையில் இத்தினம் பிரசித்தம் பெற்றுவிட்டது. சர்வதேச ரீதியாக பலதினங்கள் விஷேட தினங்களாக கொண்டாடப்படுகிறன. - போதை ஒழிப்புத் தினம் - சிறுவர், முதியோர் தினம் - சூழல் பாதுகாப்புத் தினம் - சேமிப்புத் தினம் - மகளிர் தினம் - அன்னையர் தினம் - தொழிலாளர் தினம் இத்தினங்கள் பற்றிய அறிவும் ஆர்வமும் காணக்கிடைப்பது அரிது. ”காதலர் தினம்” மேற்கத்திய உலகில் சீரழிந்து போன கலாசாரத்தின் சிந்தனையால் உருவான தினம்! இரவு பணிரெண்டு மணிக்கு காதலர்கள் ஒன்று கூடி முத்தமிடுவதும் பூச்செண்டுகளை பறிமாறுவதும் பரிசில்களை கொடுப்பதும் உல்லாசமாக ஊர்சுற்றுவதும் தனித்து நின்று உறவுகொள்வதும் மிகப்பெரிய நாகரீகம். நாளொருவன்னம், பொழுதொரு மேனியாக ஆண் பெண் உறவு (காதலர் காதலி உறவு) மாறிக்கொண்டேயிருக்கும். ”ஒருவனுக்கு ஒருத்தி” என்ற நிலை மாறி ”ஒருவருக்கும், ஒருத்திக்கும் பலபேர்” என்று சாதாரணமாகிவிட்டது. அதனை பிரதிபலித்துக் காட்டுவதுதான் மேற்கத்திய உலகின் ‘காதலர் தினம்”! கற்பு, கன்னித்தன்மை பற்றி அங்கேயாரும் அலட்டிக் கொள்வதில்லை. பரஸ்பரம் உடம்புகளை பரிமாறிக் கொள்வதில், கண்டவர் உடன் கூடிக் கொள்வதில் அலாதியான திருப்தி அவர்களுக்கு! இளம்பெண்களின் உடைகளை உரித்தெடுத்து பவனிவரவிடுவதும் அதற்கு புள்ளிகள் போட்டு கிரீடம் சூட்டுவதும் அவர்களுடைய பொழுதுபோக்கு! அழகு ராணி எனும் பெயரில் பெண்களின் அங்கங்களை அலந்துபார்த்து ரசிப்பதும் ருசிப்பதும் அவரக்களுடைய கௌரவமான பொழுதுபோக்கு! பெண்ணின் கற்பை மயக்கமருந்தாக உட்கொள்வதற்கான அத்தனை வாய்ப்புக்களையும் வழிகளையும் தாராளமாக ஏற்படுத்தி கொள்கிறார்கள். அதற்காகவே பல தினங்களை பல சந்தர்ப்பங்களை ஏற்டுத்துகிறார்கள்.. அமெரிக்க பாடகி மடோனா கூறும் போது ‘என்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்ட அமெரிக்கா வீ.ஐ.பி.க்களின் பட்டியலை நான் எடுத்து விட்டால் அவர்களுடைய ”பெரிய மனிதர் இமேஜ் அத்தோடு காலி” என்றாள். மேலை நாட்டுகளில் பிள்ளைகளுக்கு தாய் சொல்லும் அட்வைஸ், மகளே! யாரோடு கூடினாலும் கருத்தடை உறையை பாவிக்க மற்ந்திடாதே! என்பது தான். கற்பை இழந்தாலும் கர்ப்பத்தோடு வராதே என்பது தார்மீக மந்திரம்! பாடசாலை செல்லும் பிள்ளைகளும் தொழிலுக்கு செல்லும் பெண்களும் தங்களது பைகளில் (Bags) களில் கருத்தடை மாத்திரை, கருத்தடை உறை வைத்துக் கொள்ள மறந்திடமாட்டார்கள். திருமணத்திற்கு முன் கன்னித் தன்மை இழத்தல் கர்ப்பம் தரித்தல் கர்ப்பத்தை கலைத்தல் ஏன் குழந்தையை பெற்றெடுத்தல் எல்லாம் சர்வ சாதாரணமான விடயம். பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அப்பன் பெயர் தெரியாத குழந்தைகளும் அம்மா பாசம் இல்லாத பிள்ளைகளும் நாளுக்கு நாள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களது ”உல்லாசபுரியை” தான் காதலர் தினமாக அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். மீடியாக்களாலும் ஜனரஞ்சக தினமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. சீரழிந்துபோன ஒரு சமூகத்தின் நாற்றம் வீசும் கலாசாரத்தின் நாகரீகப் பெயர் காதலர் தினம். நாறிப்போன இந்த அனாச்சாரம் கீழத்தேய நாடுகளில் அரங்கேற்றப்படுகிறது. நாகரீகத்தை புரிந்து கொண்டவர்களால் நாற்றம் வீசும் அம்சங்களை புரிந்து கொள்ள முடியாமல் போயுள்ளது. ”நட்பு தூய்மையானது ஆண் பெண் உறவு புனிதமானது அதனை கொச்சைப் படுத்தக் கூடாது” என்று அழகிய வார்த்தையில் காதல் பற்றி பேசலாம், கதைக்கலாம், வாதிக்கலாம். ஆனால் நடை முறையில் அது உண்மையல்ல என்று நிரூபிக்கப்பட்டு வருகிறது. காதலித்து கைவிடப்பட்ட எத்தனையோ அபலை பெண்களை பார்க்கிறோம். கற்பை சூரையாடி குதூகலிக்கும் எத்தனையோ கயவர்களையும் காண்கிறோம். ஏமாற்றப்பட்டுவிட்டோம் என கதறிஅழும் கன்னியர்களையும் கண்டிருக்கிறோம். மானம் போய்விட்டதே என்று தற்கொலை செய்துக்கொள்ளும் அப்பாவி பெண்களையும் அன்றாடம் கேள்விப்படுகிறோம். மகள் ஓடிப்போய்விட்டாளே என்று உயிரைமாய்த்து கொள்ளும் பெற்றோரையும் பாரக்கிறோம். கருவை கலைக்கச் சென்று மரணித்து போன பெண்களின் செய்திகளையும் படித்திருக்கிறோம். காதலியுடன தனித்திருந்து சல்லாபித்த காட்சிகளை மறைமுகமாக புகை படம் எடுத்து வீடியோ பண்ணி ‘பிளக்மையில்’ பண்ணும் காதலன்; அதனை இன்டர்நெட்டுக்கு விட்டு பணம் பறித்து -சம்பாதிக்கும்-விடயத்தையும் பாரக்கிறோம். காதலாலும் அதன் புனித தினத்தினாலும் உருவான விபரீதங்கள்தானே இவைகள். ஆணும் பெண்ணும் தனிமையில் சந்திப்பது, ஊர் சுற்றுவது, உலா வருவது என்பதுதான் காதல் என்றால் அதற்காகத்தான் காதலர் தினம் என்றால் அப்படிப்பட்ட தினத்தை இஸ்லாம் கண்டிக்கிறது. உலகம்தோன்றிய காலம் முதல் இன்று வரை பெண்ணின் கற்பைப் பற்றித் தான் இச்சமூகம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. கற்புக்கு அவமரியாதையை ஏற்படுத்தும் ஏதாவது செயற்பாடுகள், அல்லது பேச்சுக்கள் இருந்தால் அது பெண்ணின் வாழ்க்கையே கேள்விக்குறியாக்கிவிடும். ”திருமணத்திற்கு முன்பு நீ ஒருவனுடன் ஊர் சுத்தியவள்தானே” என்று கணவன் மனைவியைப் பார்த்து கேட்டாலே போதும் அவளுடைய கற்பு கேள்விக்குரியாகி விடும் வாழ்க்கை அஸ்தமனமாகிவிடும். கற்பு என்பது புனிதமானது. அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது வானது. இருவரும் கற்பை பாதுகாக்க வேண்டும் என இஸ்லாம் உத்தரவிடுகிறது. ”தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும், தங்களது கற்பை பேணிக்கொள்ளுமாறும். நபியே! விசுவாசிகளான ஆண்களுக்கு நீர் கூறுவீராக!” ”தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும், தங்களது கற்பை பேணிக்கொள்ளுமாறும். நபியே! விசுவாசிகளான பெண்களுக்கும் நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 24:30-31) பெண்கள் இருக்கும் இடத்திற்கு நீங்கள் செல்வதை பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது ஒரு நபித்தோழர் கணவனின் நெருங்கிய உறவினர் அப்பெண்ணிடம் செல்லலாமா என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் கணவரின் நெருங்கிய உறவினர் மரணத்தைப் போன்றவர் என்று கூறினார்கள். அறிவிப்பவர் உக்பத் இப்னு ஹாமிர் (நூல்: புகாரி முஸ்லிம்) உங்களில் ஒருவர் ஓர் அந்நியப் பெண்ணிடம் அவளுடைய (தந்தை, சகோதரன், மகன்) போன்ற மஹ்ரமான உறவினர்கள் உடன் இருந்தாலே அன்றி தனியே இருக்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (நூல்: புகாரி முஸ்லிம்.) சமூதாயக் கட்டுக்கோப்பை தகர்த் தெறியக் கூடிய அர்த்தமற்ற செயற்பாடுகளை இஸ்லாம் தடைசெய்கிறது. எச்சந்தர்ப்பத்திலும் அந்நிய ஆணும் அந்நிய பெண்ணும் தனிமையில் சந்திப்பது, பேசுவது, ஊர் சுற்றித் திரிவதைத் தடுக்கிறது. பெண்ணின் நன்மை கருதியே இஸ்லாம் இந்த தடையுத்தரவை பிறப்பிக்கின்றது. ஒரு பெண் தனக்கு விருப்பமான ஒரு கணவனையும், ஒரு ஆண் தனக்கு விருப்பமான மனைவியையும் தேர்ந்தெடுப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை. பிள்ளைகளின் விருப்பப் படிதான் மணம் முடித்து வைக்க வேண்டுமென இஸ்லாம் கட்டளையிடுகிறது. இதற்காக இவர்கள் வேலிதாண்டிப் போக வேண்டுமென்று இஸ்லாம் கூறவில்லை. அன்னியப் பெண்ணைப் பார்ப்பது, அவளைத் தொடுவது, அவளுடன் உட்காருவது விபச்சாரத்தின் பக்கம் கொண்டுப் போகக் கூடிய காரியமென கண்டிக்கிறது. விபரீதம் ஏற்பட முன்பு விளைவைப் பற்றி அறிவுறுத்துகிறது. அவசரத் தேவைகள் ஏற்பட்டாலும் ஆண் பெண் பேசக் கூடாது தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக் கூடாது எனக் கூறவில்லை. அவ்வாறான சந்தர்ப்பங்களில் கற்புக்கு பங்கம் ஏற்படாதவாறு கண்ணியத்துடன் நடந்துகொள்ளுமாறு கட்டளையிடுகிறது. இதற்கு உதாரணமாக அல்குர்ஆன் அன்னை மர்யம் (அலை) அவர்களது வரலாற்றையும் மூஸா (அலை) அவர்களது வரலாற்றையும் சொல்லித்தருகிறது. (மர்யம்) தன் ஜனங்களை விட்டும் ஒதுங்கி ஒரு திரையைப் போட்டு (மறைத்து) கொண்ட சமயத்தில் நம்முடைய தூதரை (ஜிப்ரீல் (அலை) அவரிடம் அனுப்பிவைத்தோம். அவர் சரியான மனிதருடைய தோற்றத்தில் காட்சியளித்தார். நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன் என்று (மர்யம் ஜிப்ரீலை நோக்கி) கூறினார். (19:17-18) மூஸா நபி மத்யன் வாசிகளான இரு பெண்களுக்கு நீர் இறைத்துக் கொடுத்து உதவி புரிந்தார். ”அது சமயம் அவ்விரு பெண்களில் ஒருத்தி மிக்க நாணத்தோடு அவர் முன் வந்து நீர் எங்களுக்கு தண்ணீர் புகட்டியதற்குரிய கூலியை உமக்கு கொடுக்கும் பொருட்டு என் தந்தை உம்மை அழைக்கிறார்” எனக் கூறினாள். (28:23-25) எனவே இஸ்லாம் கூறும் ஆண் பெண் உறவு பற்றிய விளக்கம் மிகத் தெளிவானது, புனிதமானது. அதனைத் தாண்டிப் போகும் செயலை இஸ்லாம் தடை செய்கிறது.

தர்ஹாவில் நடந்த விபரிதம்

,
தர்ஹாவில் நடந்த விபரிதம்
  • இடம்
  • திருச்சூர்
  • (கேரளா)தர்ஹாவில்
  • நடந்த
  • விபரிதம்

துபையில் நடந்த அனாச்சாரம்

,
இஸ்லாம் தடை செய்த ஒன்றை நாம் செய்யலாமா? இது இஸலாம் அனுமதிக்கிறதா? சிந்தியுங்கள்

Thursday, January 27, 2011

அபுதாபி : சூரிய சக்தி மூலம்

,
கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்

அபுதாபி, ஜன.20-  கடல் நீரை சூரியஒளி எரிசக்தி மூலம் குடிநீராக்கும் புதிய திட்டத்தினை அய்க்கிய அரபு எமிரேட் முயற்சி செய்து வருகிறது.

இதற்காக 30 இடங்களை நாடு முழுவதும் தேர்வு செய்து முதற்கட்ட பரிசோதனை நடத்தவுள்ளது. வளைகுடா நாடான அய்க்கிய அரபு எமிரேட் நாட்டின் தலைநகரிலுள்ள அபுதாபி சுற்றுச்சூழல் மேம்பாட்டு ஆணையம் , கடல் நீரை சூரிய ஒளி மூலம் சுத்திகரிப்பு செய்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா என ஆய்வு செய்து வருகிறது.

இதன் மூலம் கரியமிலவாயு வெளியேறாமல் தடுப்பது, சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இந்த திட்டம் நிறைவேற்றுவது உள்ளிட்ட அம்சங்களை பரிசீலனை செய்து வருகிறது.  முதற்கட்டமாக நாடு முழுவதும் 30 இடங்களை தேர்வு செய்து சோதனை அடிப்படையில் பயன்படுத்தவும் உள்ளது.

மேலும் இந்த திட்டத்தினால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் பாதிப்புகள் குறித்தும், அதனை சமாளிக்க வேண்டி நடவடிக் கைகள் குறித்தும் ஆய்வு செய்து வருவதாகவும் ஹமீம், மற்றும் சுவையாஹ் ஆகிய இரு நகரங்களில் இதற்கான பூர்வாங்க பணிகளில் தொடங்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி ?

,

மின்மினி பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்கிறோம். மின்மினி பூச்சிகள் Coleoptera என்ற குடும்பத்தைச் சேர்ந்த வண்டுகள் ஆகும். மின்மினி பூச்சிகளில் உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன.
மின்மினி பூச்சிகள் முட்டை புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி ? என்ற கேள்வி பல நாட்களாக எனக்குள் இருந்தது அதற்கான விடையை தேடி எடுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
இது ஒரு சிக்கல் நிறைந்த உயிர்வேதியியல் (bio-chemical) முறையாகும். இம்முறை bioluminescence எனப்படும். மெழுகுவர்த்தி, மின்விளக்கு ஆகியன தரும் ஒளி வெப்பம் நிறைந்தது. ஆனால் இங்கே வெப்பம் ஏதும் உண்டாவதில்லை. மின்மினிப் பூச்சி தரும் ஒளியில் எரி
பொருளாகப் பயன்படுவது லூசிஃபெரின் (luciferin) என்ற வேதியியல் கூட்டுப் பொருள். இது
பூச்சியின் ஒளியுமிழ் உறுப்பில் (light emitting organ) நிறைந்துள்ளது.


இந்த லூசிஃபெரின், லூசிஃபெரெஸ் என்ற என்ஸைமில் (enzyme) உள்ள உயிர்வளி (oxygen), உயிரணுக்களில் (cells) நிறைந்துள்ள ATP என்ற வேதியியல் பொருள், மற்றும் மக்னிசியம்
ஆகியவற்றுடன் சேரும்போது ஒளி உண்டாகிறது.


இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாவிடினும் ஒளியுண்டாகாது. மின்மினிப் பூச்சி விட்டுவிட்டு ஒளிர்வதற்குக் காரணம், அதன் ஒளியுமிழ் உறுப்புக்குச் செல்லும் நரம்புத் தூண்டல்கள் (nerve impulses) விட்டு விட்டுச் செல்வதேயாகும்.
மின்மினி பூச்சிகள் பற்றிய ஒரு பார்வை பெண் வண்டுகள் மண்ணில் முட்டை வைக்கும். சுமார் 4 வாரங்களில் முட்டையில் இருந்து புழு வந்துவிடும். புழுக்கள் கோடையிலும், வேனில் காலத்திலும் நன்கு சாப்பிட்டுவிட்டு ‘ஹாயாக’ டார்ச் பிடித்துக் கொண்டு வளைய வரும். குளிர்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணுக்கடியில் பதுங்கி விடும். பெரும்பாலும், இவை மண்புழு மற்றும் நத்தை ஆகியவற்றையே தின்னும். இவை இரையைப் பிடித்துத் தின்னும் முறையே அலாதியானது. இரையைக் கண்டுபிடித்தவுடன் அதை முதலில் மயக்கமடையச் செய்துவிடும். இதற்கென்றே இதன் முகத்தில் ஒரு பிரத்தியேக அரிவாள் போன்ற கொடுக்கு நீட்டிக்கொண்டு இருக்கும். அதைக் கொண்டு இரையின் உடலினுள் மயக்கமடையச் செய்யும் வேதிப்பொருளை செலுத்திவிடும்.
பிறகு இரைக்குள் செரிமான நொதிகளை செலுத்தும். சில மணி நேரத்தில், இரையின் உடலினுள் உள்ள அவயங்கள் கூழ்மமாக மாறிவிடும். உடனே மின்மினி பூச்சிகளின் புழுக்கள் இரையைச் சுற்றி அமர்ந்து, ஜூஸ் குடிப்பது போல உறிஞ்சிவிடும். பிறகு ஜாலியாக ரவுண்ட்ஸ் போக தொடங்கும். அப்போது அதன் உடலில், அதாவது அடிவயிற்றின் முடிவில் விளக்கு எரிந்துகொண்டு இருக்கும். ஒரு சில பறவைகள்கூட, ஒளிக்காக இந்த புழுக்களைப் பிடித்து வந்து, தங்கள் கூட்டில் வைத்திருக்கும்.
மின்மினிப் பூச்சிகள் இரவுகளில் சில குறிப்பான இடங்களில் திரண்டிருப்பதைப் பார்க்கலாம்.
ஏன்? அங்கே ஆணும் பெண்ணும் மினுமினுக்கின்றன. தங்கள் துணை தேடுவதற்காக என்கிறார்கள் ஜார்ஜியா தென் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகள்.
பெண் பூச்சிகள் மினுமினுப்பு மூலம் தங்கள் இருப்பிடத்தைக் காட்டுகின்றன. ஆண் பூச்சிகள் இதற்குத் தகுந்தாற் போல அதே வித மினுமினுப்புகளை உண்டாக்கிக் காட்டுகின்றன.
பின்னர் ஜோடி சேர்கின்றன. பெண்களில் ஒரு சிறு சதவீதம் ஆண் பூச்சிகள் மினுமினுப்புக்கு இசையாமல் அல்லது இசைய முடியாமல் இறந்துவிடுகின்றன. பரிணாம விதியில் இப்படி அழிவதும் சரிதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
Thanks to Mohammad Sultan

அழைப்புப்பணியும் பெண்களும்

,

அழைப்புப்பணியும் பெண்களும்

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ
நிகழ்ச்சி: சுவனப்பாதை மாதஇதழ் நடத்திய கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா
வழங்குபவர்: மௌலவி K.L.M. இப்ராஹீம் மதனீ
இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனாய்யியா, ஜித்தா

Tuesday, January 25, 2011

காமக் கொடூர நாய்கள்

,
இது பாக்கிஸ்த்தானில் காமக் கொடூர நாய்களாலும், குடும்ப தலைவன் என்ற அரக்கர்களாலும்,அமில திரவம் மூலம் இவர்களின் வாழ்க்கையை நாசம்  பண்ணிவிட்டார்கள் அழகு தேவதைகளான இச்சகோதரிகள் நரக வாழ்வினை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

கருவிலியே ச்சீ..என கருவப்படும் பெண்ணானவள் கண்ணீருடன் காலடி எடுத்து வைத்தாலும் காலத்தை வெல்வது கேள்விக்குறியே ?


மரமே..மரமே..உம்மை துளையிட்டு உம்மேனியை ரதமாக்கி அதில் நான் கூடு கட்டுவதை நான் விரும்பவில்லை, ஆனால் பறவையா பிறந்த எனக்கு வேரு வழி தெரியலையே என்று பறவை அழுதுச்சாம்.

இந்தப் பறவைக்கு இருக்கும் இரக்கக் குணம் கூட நன்றி கெட்ட மனித ஜாதியிடம் இல்லையே...!!!

பெண்ணை போதைப் பொருளாய் நினைக்கும் மனித மிருகம் இருக்கும் வரை இந்த அழகிகளை போல், எத்தனை அழகிகள் நரக வேதனை அனுபவிக்கிறார்களோ ?


இந்த அவலத்திற்க்கு முற்றுப் புள்ளி வைக்காவிட்டால் உலகில் பெண் இனமே கோரமாகி போய்விடும்.


பாலியல் பலத்காரம் மற்றும்ஆசிட்  என்னும் கொடிய திரவத்தை எரிதல் போன்ற, நாச  வேலைகளில் ஈடுபடும் நாசக்கார நாய்களை இனம் கண்டு அவர்களின் வாயினுள் ஆசிட்டை ஊற்றவேண்டும், இது நீதி மன்றம் மூலம் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறவேண்டும்.


இது போன்ற காட்டுமிரான்டிகளை காப்பற்ற வரும் கேடுகட்ட கட்சிதலைவன்,லஞ்சம் வாங்கும் போலீசு மற்றும் ஊழல் வக்கீலு,இவர்களுக்கும் இந்த தண்டனையைக் கொடுக்கனும்,இதைப் பார்த்து எல்லா மனிதரும் திருந்தனும்.


பெண்கள் எப்படி வாழனும்னு இஸ்லாம் மிக தெளிவாக கூறி இருக்கு, அதை பின்பற்றினாலே போதும் உங்கள் பாதுகாப்பிர்க்கு.












4:1    يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
4:1. மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.
 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates