ஐதராபாத் : பாஸ்போர்ட் அனைவரும் எளிதில் பெறும் வண்ணம், நாடெங்குமிலும் 77 புதிய பாஸ்போர்ட் சேவை மையங்கள் இந்தாண்டின் இறுதிக்குள் அமைக்கப்பட இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக உயர் அதிகாரி கே என் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்த சேவை மையங்கள் திறக்கப்பட்ட பிறகு, பாஸ்போர்ட் குறித்த விசாரணைகள் ஆன்லைனிலே மேற்கொள்ளப்பபடும், இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவல்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். இதன்மூலம் பாஸ்போர்ட் பெறுவது எளிதாக்கப்படும். ஆந்திராவில் 7 மையங்களும், ஐதராபாத்தில் 3 மையங்களும் அமைக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.
தற்போதைய பதிவுகள்
Subscribe to:
Post Comments (Atom)