அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் மரியம் பிச்சையை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், தி.மு.க., அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியிருந்தாலும் அது முறையாக செயல்படுத்தப்படவில்லை.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், அது முறையாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 2ம் நாள் பிரசாரத்தை இன்று மாலை 5 மணிக்கு துவக்கிய ஜெயலலிதா, கருமண்டபம், தீரன் நகர், ராம்ஜி நகர் டோல்கேட், புங்கனூர் வழியாக மரவனூர் வரை பிரசாரம் செய்கிறார்.
நன்றி : தினமலர்.