சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான கடந்த வியாழக்கிழமை மத்திய பிரதேச மாநில பள்ளிக்கூட மாணவர்கள் சூரிய நமஸ்காரம் செய்யவேண்டும் என அம்மாநில பா.ஜ.க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு முஸ்லிம் மார்க்க அறிஞர்களும், எதிர்கட்சிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
சூரிய நமஸ்காரம் என்பது ஒரு வகையான விக்கிரக வழிபாடு என முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் கூறுகின்றனர். இஸ்லாம் அல்லாஹ்வை தவிர வேறு எந்தப் பொருளையும், எவரையும் வணங்குவதை கடுமையாக தடைச்செய்கிறது. ஆதலால் இந்நிகழ்ச்சி இஸ்லாத்திற்கு எதிரானது என ஷஹர் காழி முஷ்தாக் அலி நத்வி உள்ளிட்ட முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் வெளியிட்ட ஃபத்வாவில் கூறியுள்ளனர்.
கல்வியில் தரத்தை மேம்படுத்துவதற்கும், அடிப்படை வசதிகளை விரிவாக்குவதற்கும் பதிலாக வளங்களை அரசு பாழாக்குகிறது என எதிர்கட்சி தலைவர் அஜய்சிங் குற்றம் சாட்டியுள்ளார். பகவத் கீதையை பள்ளிக்கூட பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றுவதில் துவங்கிய காவி மயமாக்கலின் தொடர்ச்சிதான் புதிய முயற்சி என அவர் கூறியுள்ளார்.
இங்கு தமிழகத்திலும் சமத்துவப் பொங்கல் எனும் பெயரில் சூரியனை வழிபடும் நிகழ்ச்சி அரசால் மக்கள் மத்தியில் திணிக்கப் பட்டு அதற்க்கு போஸ் கொடுக்க சில முஸ்லிம் பெயர் தாங்கிகளும் பங்கேற்ற நிகழ்வு கடந்த ஆட்சியில் நடை பெற்றது !
முஸ்லிம்கள் படைத்தவனை மட்டுமே வணங்குவார்கள் படைப்புகளை வணங்க மாட்டார்கள் என்பதை இவர்கள் புரிது கொள்ள வேண்டும் ! அரசு என்பது மத நிகழ்சிகளை, நடத்துவதாக இருக்கக் கூடாது ! மத நல்லிணக்கம் எனும் பெயரில் மற்ற மக்களின் நம்பிக்கையில் தலையிடக் கூடாது ! நல்லிணக்கம் எனும் பெயரில் முஸ்லிகள் குர்பானி கொடுக்கும் மாட்டிறைச்சியை மற்றவர்களிடம் கொடுத்தல் ஏற்றுக் கொள்வார்களா ? மாட்டிறைச்சி மாமி என செய்தி வெளியிட்டதற்கே குடி நீர் மின்சாரம் துண்டிக்கப் பட்டு நக்கீரன் அலுவலகம் தாக்கப் படுகிறது! என்றால் மத நல்லிணக்கம் எனும் பெயரில் சூரியனுக்கு நன்றி செலுத்துகிறோம் எனும் பெயரில் சூரியனை வணங்கும் பொங்கலையோ, ஆடு மாடுகளுக்கு நன்றி செலுத்துகிறோம் எனும் பெயரில் ஐந்தறிவு பிராணிகளை வணங்கும் மாட்டு பொங்கலையோ, அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை எனும் பெயரில் உயிரற்ற்ற ஜடப் பொருள்களை வாங்குவதையோ , விஜய தசமி எனும் பெயரில் காகிதத்தை வணங்குவதையோ, தியானம் எனும் பெயரில் சங்க பரிவார சர்க்கார் புகுத்தும் சூரிய நமஸ்காரத்தையோ, தேசபக்தி எனும் பெயரில் தாய் மண்ணை வணங்க சொல்லும் வந்தே மாதரதையோ உண்மை முஸ்லிம்கள் ஒரு போதும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள்