பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 7 அம் தேதி சனிக்கிழமை அன்று இராஜகிரியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
இதில் மண்டல செயலாளர் நாச்சியார்கோவில் ஜஃபார் அலி அவர்கள் தலைமை தாங்கினார். இராஜகிரி R இஸ்மாயில், மாநில பேச்சாளர் B ஒளி முஹம்மது, மாநில பேச்சாளர் A.M.யூசுஃப் மிஷ்பாஹி, தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் பிஸ்மி ஜாஹிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணை தலைவர் M.S. ரஹ்மத்துல்லாஹ் "இளைய சமுதாயம் திசை மாறி போவது ஏன்" என்ற தலைப்பிலும், மாநிலசெயலாளர் P.M.H.செங்கிஸ்கான் "இஸ்லாத்தின் பார்வையில் உண்மையும் பொய்யும்" என்ற தலைப்பிலும், மாநில தலைவர் S.M.பாக்கர் "நீதி எங்கே!?" என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் ஷாஜித் ரஹ்மான் கூடத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை வாசித்தார், இறுதியில் மாவட்டச் செயலாளர் குடந்தை ஜபார் நன்றியுரை நிகழ்த்தினார்.
இந்த கூடத்தில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
செய்தி தகவல் : பிஸ்மி ஜாஹிர்.
