திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Monday, January 9, 2012

சேப்பாக்கத்தில் திருமறை பெறத் திரண்ட பெண்கள் !

,
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சேப்பாக்கம் கிளை சார்பில் ஆயிஷா நசிர் மதரசாவில் வாரந்தோறும் வியாழன் மக்ரிபுக்குப் பின் பெண்கள் பயான் நடை பெற்று வருகிறது! அரையாண்டு விடுமுறைக்குப்  சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால்  பயானுக்கு வரும்   பெண்களின் எண்ணிக்கை குறைந்ததால் நேற்று சேப்பாக்கம் கிளையின் சார்பில் வீடு   வீடாக சென்று அழைப்பு விடுக்கப் பட்டது !

செங்கிஸ் கான், காஜா கரிமுல்லாஹ், கலீல் ரஹ்மான், அனிஸ் ஆகியோர் அந்த அழைப்பின் போது மார்க்கத்தை பற்றியும் , கயிறு, தாயத்து , பச்சை துணியில் சுற்றப்பட தேங்காய் போன்ற கண்ணில் கண்ட மார்கத்திற்கு முரணான செயல்கள் பற்றியும் எடுத்து சொல்லப் பட்டது, அது போன்று புகை , பொடி, போதை போன்ற தீமைகளையும் எடுத்து சொல்லி பிரசாரம் செய்யப் பட்டது !  









இந்த அழைப்பை ஏற்று மக்ரிபுக்கு பின் ஆயிஷா நசிர் மதரசாவில் இடம் கொள்ளாத வகையில் எராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.எல்லா நிகழ்சிகளையும் இறை வேதத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நிகழ்ச்சியாக மாற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சேப்பாக்கம் கிளை சார்பில் வந்திருந்த பெண்களில் சுமார் 60 பேருக்கு திருமறை குரானின் தமிழ் மற்றும்  உர்து மொழியாக்கம் வழங்கப் பட்டது! மாநில செயலாளர் அப்துல் ஹமித் அவர்களின் சொற்பொழிவும் அதைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடை பெற்றது. இதில் அப்பகுதியில் வசிக்கும் இளையான்குடி புதுரை சேர்ந்த ஏரளமான பெண்கள் கலந்து கொண்டனர்

0 comments to “சேப்பாக்கத்தில் திருமறை பெறத் திரண்ட பெண்கள் !”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates