தானே புயலால் புரட்டிப் போடப் பட்ட பாண்டிச்சேரி மற்றும் கடலூர் மாவட்டங்களில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாகிகள் எஸ்.எம்.பாக்கர், செங்கிஸ் கான் ,புதுவை பீர் முஹம்மத உள்ளிட்டோர் நேற்று நேரில் சென்று புயலின் பாதிப்புகளை கேட்டறிந்ததோடு பாதிக்கப் பட்ட முஸ்லிம்களுக்கு ஆறுதல் கூறினார்.
காலையில் பாண்டிச்சேரியிலும் ,பின்னர் கடலூர் ,நெல்லிக் குப்பம் , பண்ருட்டி ஆண்டிக்குப்பம் பகுதிகளுக்கும் சென்று முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் கேட்டறிந்து அவர்களுக்கு ஆறுதல் கூறினர்!
தானே புயலின் தாக்கம் சுனாமியை விட மோசமான பாதிப்பை ஏற்படுத்தி இருந்தும் உரிய நிவாரணங்கள் மக்களை சென்று அடைய வில்லை.
முஸ்லிம்கள் இதில் கடுமையாக பாதிக்கப் பட்டிருந்தும அதன் தாக்கம் சமுதாயத்தை சென்று அடையவில்லை.ஆகையால் சமுதாய இயக்கங்களும், தனவந்தர்களும் நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்!
ஏனெனில் வானமே கூரையாக வீடின்றி சமுதாயக் கூடங்களிலும் , பள்ளிவாசல்களிலும் தங்கியிருப்பதும்,
மின்சாரமின்றி குடி நீரின்றி மொத்த வாழ்க்கையும் முடங்கி போயுள்ள முஸ்லிம்களுக்கு சக முஸ்லிம்கள் உடலைப் போன்று உதவ வேண்டும் என்பதே இப்போதைக்கு நம்முடைய கோரிக்கையாகும்.