பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அழைப்புப் பணியே தன முழு முதல் பணியாக கொண்டுள்ள ஐ.என்.டி.ஜே.வின் தலைமையகத்தில் அல்லாஹ்வின் பேரருளால் அன்றாடம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு கலிமா சொல்வோரின் எண்ணிக்கை சமிப காலமாக அதிகரித்து வருகிறது ! இவ்வாறு இஸ்லாத்தை ஏற்போருக்கு கத்னா ,அபிடவுட் மற்றும் மூன்று மாத அடிப்படைக் கல்வி போன்றவற்றிற்கு INTJ ஏற்பாடு செய்து வருகிறது. கடந்த 6.1.12 வெள்ளியன்று ஜும்மா தொழுகைக்குப் பின்னர் நண்பர்கள் இருவர் இஸ்லாத்தை ஏற்றனர்.அவர்களுக்கு எஸ்.எம்.பாக்கர் கலிமாவை சொல்லிக் கொடுத்தார் ! என்ன பெயர் விருப்பம் எனக் கேட்ட போது
இருவருமே ராஜா முஹம்மத் எனும் பெயரை தேர்வு செய்தனர். அந்த நண்பர்கள் இருவரும் தங்கள் குடும்பதினர்ரும் இந்த தூய இஸ்லாத்தை ஏற்க துவா செய்யமாறு ஜும்மாவிற்கு வந்தவர்களிடம் வேண்டினர்.தற்போது இருவரும் INTJ தலைமையகத்திலேயே தங்கி கல்வி பயிலுகின்றனர்.

