திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Wednesday, January 11, 2012

முஸ்லிமல்லாத மக்களைக் கவர்ந்த வரதட்சணையை திருப்பிக் கொடுத்த நிகழ்ச்சி!

,
                         முஸ்லிமல்லாத மக்களைக் கவர்ந்த  
                   வரதட்சணையை திருப்பிக் கொடுத்த நிகழ்ச்சி!
'மங்கையருக்கு அவர்களின் மனக் கொடைகளை மனமுவந்து கொடுத்து விடுங்கள்'[அல்குரான் 4:04] எனும் இறை வசனத்தை மறந்து , இரு மனம் சேரும் திருமண உறவில் பெண்ணிடம் மட்டும் கைக்கூலி எனும் வரதட்சணை கேட்கும் அவமானத்தை எதிர்த்து இருபத்தைந்து வருட ஏகத்துவ இயக்கங்களின்  பிரசாரத்தின் காரணமாக வரதட்சணை எனும் கொடுமை குறைந்து வருகிறது !

ஒளிந்து மறைந்து அல்லது கல்யாண செலவு, நகை, வீடு எனும் பெயர்களில் வாங்கினாலும் '  வரத்தட்சனை வாங்குவது தான் கவுரவம் எனும் நிலை மாறி வரதட்சனை வாங்காமல் மணமுடிப்பது தான் கவுரவும் எனும் நிலை உருவாகி உள்ளது !

வரதட்சணை எத்டிர்ப்பு பிரச்சாரங்கள் ஒரு பக்கம் நடந்தாலும் அதன் தீமையை உணராத மக்களும் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர். கடந்த வாரம் கீழக்கரையில் நடந்த வரதட்சணை எதிர்ப்பு பிரசாரம் மேற்கொண்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலப் பேச்சாளர் மைதீன் அவர்களை தாக்க முற்பட்டு பிரசாரத்தை தடுத்த செய்தி மக்கள் ரிப்போர்ட் பத்திரிகையில் வந்தது.

ஆயினும் நம்முடைய பிரச்சாரங்கள் வாயிலாக தலைமையகத்தில் எராளமான வரதட்சணை இல்லா திருமணங்கள் நடை பெற்று கொண்டுதான் வருகிறது. வாங்கிய வரதட்சணையை திருப்பிக் கொடுக்கும் நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் உள்ளது.

அந்த வகையில் கடந்த வாரம் பாண்டிச்சேரி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடை பெற்ற இறைவேதம் அழைக்கிறது எனும் பிறமத சகோதரர்களுக்கான தாஃவா நிகழ்ச்சியில் வைத்து ஒரு சகோதரர் பத்தாண்டுகளுக்கு   முன் தான் வாங்கிய 20000 ருபாய் சீதனப் பணத்தை தன தாயார் கையால் தன மாமனாரிடம் கொடுத்தார்.

இந்நிகழ்வு அங்கு இஸ்லாத்தை அறிய வந்திருந்த முஸ்லிமல்லாத மக்களிடம் இஸ்லாம் குறித்த நல்லெண்ணத்தையும் அதன் சமூகப் பார்வையையும் உயர்த்துவதாக இருந்தது.இது போன்ற நிகழ்வுகள் எல்லா இஸ்லாமிய மேடைகளிலும் நடந்தால் இன்ஷா அல்லாஹ் அதுவே  நம் மக்களிடம் வரதட்சணையை ஒழிக்கவும், முஸ்லிமல்லாத மக்களிடம் அழைப்புப் பணியாகவும் அமையும்!

அல்ஹம்து லில்லாஹ் ! எல்லாப் புகழும் இறைவனுக்கே!

0 comments to “முஸ்லிமல்லாத மக்களைக் கவர்ந்த வரதட்சணையை திருப்பிக் கொடுத்த நிகழ்ச்சி!”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates