திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Wednesday, January 11, 2012

INTJ விற்கு ராஜகிரியில் அமோக வரவேற்பு!

,






எல்லோரோடும்   இணக்கம்! ஏகத்துவத்தில் உறுதி ! எனும் கொள்கை முழக்கத்தோடு களமிறங்கிய இந்த மூன்று ஆண்டுகளில் அனைத்து முஸ்லிம் அமைப்புகளோடும் நல்லிணக்கத்தையும் ,சமுதாய விசயங்களில் ஒருங்கிணைந்தும் செயல் பட்டு வருகிறது! கட்டாய திருமண பதிவு சட்டத்தை எதிர்த்த போதும், கடந்த   தேர்தலில் கட்சி வேறுபாடின்றி முஸ்லிம் வேட்பாளர்களுக்கு    ஆதரவு அளித்ததும் பல்வேறு தரப்பினரிடமும் ஆதரவை பெற்று வருகிறது! அந்த வகையில் இந்திய தவ்ஹீத் ஜாமத்தின் பாபர் மஸ்ஜித் மீட்பு ரதயாத்ரை மக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ! அனைத்து மகல்லா ஜமாஅதுகளும் வரவேற்க காத்திருந்தன. ஆன்னல் எதிர்பாராத விதமாக அது தடுக்கப் பட்டதில் அனைவருக்கும் வருத்தம்.

அப்படி நமது முயற்சிகளுக்கு ஆதரவளித்த ராஜகிரி சுன்னத் வல் ஜமாத்தை சேர்ந்த பள்ளிவாசல் நிர்வாகிகள் கடந்த சனியன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகளை தங்கள் பள்ளிவாசலுக்கு அழைத்து ஒரு தேனீர் விருந்துக்கும் ஒரு கலந்துரையாடலுக்கும்   ஏற்பாடு செய்தனர்.  இதில் எஸ்.எம்.பாக்கர், முஹம்மத் முனீர், செங்கிஸ் கான் மற்றும் நாச்சியார் கோயில் ஜாபார், உள்ளிட்ட தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதே போல் ராஜகிரி இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை நிர்வாகிகளும் தங்களது தவ்ஹீத் பள்ளியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளோடு கலந்துரையாடினார்.

மேலும் மாலை நடந்த பொதுக் கூட்டத்தில் இயக்க வேறுபாடின்றி அப்பகுதியை சேர்ந்த பலரும் கலந்து கொண்டு கூட்டம் முடிந்த பின்னும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை சுற்றி நின்று சமுதாய அக்கறையோடு உரையாடியது மிகுந்த மகிழ்வை தந்தது!

தஞ்சை மாவட்டத்தின் த.த.ஜ.வின் வலுவான கோட்டை என கருதப்படும் ராஜகிரியில் இந்தக் கூட்டத்திற்கு யாரும் போகவேண்டாம் என த.த.ஜ.வினர் வெளிநாடுகளில் இருந்தெல்லாம் கோரிக்கை விடுத்தும் திரளான மக்கள் கூடியது குறிப்பிடத் தக்கது! எல்லாப் புகழும் இறைவனுக்கே!

0 comments to “INTJ விற்கு ராஜகிரியில் அமோக வரவேற்பு!”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates