இந்திய தவ்ஹீத் ஜாமத்தின் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் கிளை சார்பில் கடந்த 11.3.12 ஞாயிறு காலை பேருந்து நிலையம் அருகில் ரத்ததான முகாம் நடை பெற்றது
நிகழ்ச்சியில் முன்னதாக நேற்று ஏற்பாடு செய்யப் பட்டிருந்த ரத்ததான பேருந்து பழுதாகி விட்டதால் முகாமை ரத்து செய்ய வேண்டும் என அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறினர். ஆனால் செங்குன்றம் கிளை நிர்வாகிகள் உறுதியாக நின்று பேருந்து நிலையம் அருகில் சாமியானா பந்தல் இட்டு ஏற்பாடு செய்திருந்தனர். காலையில் வந்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போதிய ஒத்துழைப்பு தராமல் போகவே பின்னர் அங்கு வந்த தேசியத்தலைவர் எஸ்.எம்.பாக்கர் அவர்களிடத்தில் பேசி சரி செய்ததை அடுத்து முகாம் தேசியத்தலைவர் S.M.பாக்கர் அவர்கள் துவக்கி வைத்தார். மாநிலச் செயலாளர் A.M. இனாயதுல்லாஹ். திருவள்ளூர் மாவட்டதலைவர் வேலூர் இப்ராஹீம் துணை செயலர்கள்: செங்குன்றம் முபாரக், செங்குன்றம் ஷஃபியுல்லாஹ் பொருளாளர் : ஆவடி ஜாஹிர் ஹுஸைன். உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செங்குன்றம் கிளை நிர்வாகிகள் மிகச் சிறப்புடன் செய்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்! .