
தர்பியாவில் கலந்து கொண்ட பெண்கள் இதை மாதந்தோறும் நடத்தவும் கோரிக்கை வைத்தனர்.முன்னதாக இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டாம் !அவர்கள் மோசமானவர்கள், ஆபாசமாக பேசுவார்கள் என்றெல்லாம் வீடு வீடாக சென்று இந்நிகழ்ச்சிக்கு விளம்பரம் தேடித் தந்த TNTJ சகோதர சகோதரிகளுக்கு ஆவடி INTJ கிளை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.
எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும்.இருக்கின்றாய்.” இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டு எங்களைக் காப்பாற்றுவாயாக!