பின்னர் மாவட்ட தலைவர் , வேலூர் இப்ராஹீம் அவர்கள் முதன்முதலில் இந்த செங்குன்றம் பகுதியில் பெண்களுக்கான பயானை இதே தவ்ஹீத் மர்கஸில் ஆரம்பித்தபோது பெண்களுக்கு பயானா??!! என்று எதிர்த்தவர்கள் இன்றைக்கு நம் வளர்ச்சியைக் கண்டு அவர்களும் பெண்கள் பயான் என்றனர், அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்விற்கே புகழனைத்தும் பின்பு ஃபித்ரா விநியோகம் வெகு சிறப்பாகவும் அமைதியகவும், மன நிறைவாகவும் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்....
செங்குன்றத்தில் தவ்ஹீதின் எழுச்சிக்கு பிரார்த்தியுங்கள்....
“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய். “எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக!