திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Wednesday, August 29, 2012

இஸ்லாத்தை ஏற்ற பாலாஜியும், இறை வேதத்தை பரப்ப போவதாக சொன்ன பாதிரியும்!

,


மாமறைக் குர் ஆனை மக்களிடம் சேர்ப்போம் எனும் மகத்தான முழக்கத்தோடு இந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 30,000க்கும் மேற்பட்ட குர்ஆனை முஸ்லிம் அல்லாத மக்களிடம் கொண்டு போய் சேர்த்துள்ளது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.

தமிழகத்தின் அனைத்து பெரிய நகரங்களிலும் நடை பெற்றுள்ள இந்த நிகழ்ச்சி கடந்த 26.8.12 அன்று மாங்கனி நகரமான சேலத்தில் சிறப்புற நடைபெற்றது. 

சேலத்தில் திருமறை நிகழ்ச்சியில் இஸ்லாத்தை ஏற்ற பாலாஜி, இறை வேதத்தை பரப்ப போவதாக சொன்ன பாதிரியார்.

காலை 11 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் புரைதா இஸ்மாயில் தலைமை தாங்க மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகிக்க மாவட்ட தலைவர் ஹுசைன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாநிலப் பேச்சாளர் அப்துல் ஹமீது அவர்கள் திருமறை பற்றியும், இஸ்லாத்தின் அடிப்படை பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார்.அடுத்து பேசிய காந்தியவாதி பிராங்க்ளின் ஆசாத் காந்தி தனது மது எதிர்ப்பு பிரசாரத்தைப் பற்றியும் இஸ்லாத்தின் மது எதிர்ப்பு பற்றியும் வியந்துரைத்தார்.
அடுத்ததாக பேசிய முன்னாள் காவல் துறை கண்காணிப்பாளர் சஹாதேவன் இஸ்லாமியர்களோடு தனக்குள்ள நெருக்கத்தையும், முஸ்லிம்கள் தீவிரவாதிகள் எனும் பொய்யான பரப்புரைகளை மாற்ற இது போன்ற நிகழ்சிகள் அடிக்கடி நடத்தப் படவேண்டும் என கூறினார்.
அடுத்ததாக பேசிய கிறிஸ்தவ பாதிரியார் தேவ மகிர் தன் கை குழந்தையோடு மேடை ஏறிப் பேசும் போது, மாநில செயலாளர் ஏற்காடு புரைதா இஸ்மாயிலை சந்தித்தபோது எனக்கு ஒரு குர்ஆனை வேண்டும் எனக் கேட்டேன்.
ஆனால் அதை இப்படி ஒரு நிகழ்ச்சியில் தருவார் என எதிர் பார்க்கவில்லை! எனக்கு கற்றுக் கொடுக்கப் பட்டதெல்லாம் 'இஸ்லாம் வாளால் வளர்ந்த மதம்' என்பதுதான்.ஆனால் அது பொய் என்பது இப்போது புரிகிறது. இனி எனது ஒவ்வொரு கூட்டங்களிலும் ஒரு குரான் வசனத்தை எடுத்து சொல்வேன் என்ற போது அரங்கம் அதிர்ந்தது.
உடனே பாக்கர் இடை மறித்து சரியான நேரத்தில் ஒரு சரியான செய்தியை எடுத்துக் கூறினார்.கைக் குழந்தையோடு ஒரு பாதிரியாரை பார்ப்பது சந்தோசமாக இருக்கிறது. இதைத் தான் இஸ்லாம் போதிக்கிறது.துறவறத்தை இஸ்லாம் தடுக்கிறது.திருமணம் செய்யாதவர் நம்மை சார்ந்தவர் இல்லை என நபி ஸல் கூறினார்கள்! இனி தேவ மகிர் நம்மை சார்ந்தவர் என்றார்.
அடுத்ததாக பேசிய சர்வமத மக்கள் அமைதி இயக்க நிர்வாகி இஸ்மாயில் அனைத்து மதங்களின் வேதங்களிலும் முஹம்மத் நபி பற்றிய முன்னறிவிப்பை அழகிய முறையில் எடுத்துரைத்தார்.அடுத்து SDPI, TMMK, JAQH, ஜெயின் இளைஞர் மன்றம் , வளர்பிறை தாவாக்குழு உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துரைகளை வழங்கினர்.

அடுத்ததாக பேசிய பொது செயலாளர் செங்கிஸ்கான் 'தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' எனும் அடிப்படையில் உங்களை இந்த இறை வேதத்தின் பால் அழைக்கிறோம ஏன் எனில் இன்றைக்கு இந்த உலகத்தில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் இந்த திருமறையில் தீர்வு உள்ளது. என மதுவை, விபச்சாரத்தை, தீண்டாமையை, லஞ்சத்தை வெறும் தத்துவமாக இல்லாமல் நடைமுறையில் ஒழித்துக் காட்டிய இதன் பக்கம் வாருங்கள்' என அழைப்பு விடுத்தார். அல்லாஹ்வின் அளப்பரிய கிருபையால் இந்த அழைப்பை ஏற்று பாலாஜி எனும் சகோதரர் நிகழ்ச்சியிலேயே ஏகத்துவ கலிமாவை மொழிந்து இஸ்லாத்தை ஏற்றார்.
இறுதியாக 'தேடல்' எனும் கண்தானம் பற்றிய குறும் படத்தை இயக்கிய ஊனமுற்றை இளைஞரை மேடைக்கு அழைத்து அவரை பாராட்டி, அந்த குறுந்தகட்டை வெளியிட்டதோடு கண் தானம் குறித்த இஸ்லாமிய நிலைப்பாட்டை எடுத்துரைத்தார்.

பின்னர் திருமறையைப் பெற வருமாறு அழைக்கப் பட்டவுடன் முஸ்லிமல்லாத மக்கள் வரிசையில் நின்று போட்டி போட்டு வாங்கியது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மாநில நிர்வாகிகள், மாவட்ட கிளை நிர்வாகிகள் தாவா குழுவினர் ஆகியோர் மக்களுக்கு மாமறையை வழங்கியதோடு மதிய உணவும் வழங்கி உபசரித்தனர். அலஹம்துலில்லாஹ்.

0 comments to “இஸ்லாத்தை ஏற்ற பாலாஜியும், இறை வேதத்தை பரப்ப போவதாக சொன்ன பாதிரியும்!”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates