திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Sunday, November 18, 2012

டிசம்பர் 6 1992 மறக்க மாட்டோம்

,
1. பாபர் மஸ்ஜித் இடித்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்   2. பாபர் மஸ்ஜித் தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம்  விரைந்துமுடிக்கவேண்டும்                                        இந்தியா ஒரு மதச்சார்பற்ற பல்வேறு சமூகங்களை கொண்ட ஒரு நாடு இங்கே சாதிவெறியும், மதவெறியும் அனைத்து மக்களாலும் நிராகரிக்கப்படுகிறது என்பதே அதன் கூடுதல் சிறப்பாகும்.

இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள் என பல்வேறு சமூக மக்களும் வாழும் நாட்டில் காவி பயங்கரவாதத்தை மூலதனமாக கொண்ட சங்பரிவார் கும்பல், பிரிவினையையும் வகுப்புவாதத்தையும் துôண்டி வருகிறது.

அவர்களின் முதல் சதித்திட்டம் தான் 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட துன்ப நிகழ்வாகும். இந்தியாவின் பாரம்பரிய பெருமையை, நாகரீகத்தை, பண்பாட்டை, நல்லிணக்கத்தை சிதைத்து உலகளவில் இந்தியாவையும், இந்தியர்களையும் தலைகுனிய வைத்த அச்சம்பவம் நிகழ்ந்து 20 வருடங்கள் நிறைவடையப் போகிறது.

ஆனாலும் காயங்கள் ஆறவில்லை, மூட்டிய நெருப்பின் அனல் தணியவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் அறவழியில், நீதிக்கேட்டு தொடர் ஜனநாயகப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இதன் நோக்கம் நெருப்பை கிளறுவதல்ல, இனி வன்முறை நெருப்பை யாரும் மூட்டக் கூடாது என்பதே!

இந்திய மண்ணில் இனி எந்த மதத்தினரின் வழிபாட்டுத்தலங்களும் இடிக்கப்படக்கூடாது வேற்றுமையில் ஒற்றுமை என அனைவரும் அமைதியாக வாழவேண்டும்: மதவெறியை கிளறினால் சட்டம் உறுதியாக தண்டிக்கும் என்ற அச்சம் உண்டாக வேண்டும்: என்பதன் அடிப்படையிலே நமது போராட்டங்களும், முழக்கங்களும் தொடர்கின்றன.

மேற்கண்ட சூழல் உருவாக வேண்டுமென்றால் பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். அவர்கள் மீதான குற்ற வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. அந்த வழக்குகளில் விரைந்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்

பாபர் மஸ்ஜித் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதன் தீர்ப்பு மேலும் தாமதிக்காமல் விரைந்து முடிக்கப்பட வேண்டும்.


உரிமைகளை காக்க: இனியொரு பள்ளிவாசல்களும், வழிபாட்டுத்தலங்கும் இடிபடாமல் தடுக்க: நீதியை மீட்க: நியாயவான்களே திரண்டு வாரீர்! மக்களை திரட்டி வாரீர்!


அழைக்கிறது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்,

0 comments to “டிசம்பர் 6 1992 மறக்க மாட்டோம் ”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates