திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Monday, February 28, 2011

பித்னாவின் மறு பெயர் பி.ஜே?

,
பித்னாவின் மறு பெயர் பி.ஜே?


இந்திய தவ்ஹீத் ஜமாத்தை தன குடும்பத்தார் பெயரில் திருட்டு தனமாக அபகரித்து , சமுதாயத்தாலும், சக நிர்வாகிகளாலும், வளைகுடா எஜமானர்களாலும் , ஏன் நீதி மன்றத்தாலும் கூட குட்டுப்பட்டு அவமானப்பட்ட பொய்யர் மீண்டும் திரு விளையாடலை துவங்கியுள்ளார். 

னது பைலாவை தானே மீறி மாத்தின் தலைவரான பொய்யர் , மீண்டும் அதிகாரம் கைக்கு வந்த ஆணவத்தில் ' குழப்பம் கொலையை விடக் கொடியது 'எனும் குர்ஆன் வசனத்தை மறந்து தன் குலத் தொழிலான குழப்ப வேலையை துவங்கியுள்ளார்.

பேரம் படியாத காரணத்தால் யாரை ஆதரிப்பது எனும் முடிவை அறிவிக்காமல், ம.ம.கவை மண்ணை கவ்வ வைப்பது தான் தன் தலையாய வேலை என இந்துத்வா சக்திகள் கூட எடுக்காத ஒரு நிலைப்பாட்டை தங்களின் தேர்தல் நிலைப்பாடாக அறிவித்து உள்ள இவர்களின் கொள்கை [?] முடிவை மக்களிடம் சொல்லாமல் ஒரு ஒப்பீட்டை வெளியிட்டுள்ளார்கள்!



  • எந்த கோரிக்கையும் வைக்காமல் அதிமுக வோடு இணைந்த ம.ம.க.
  • 5% இட  ஒதுக்கீடு தரும்   கட்சிக்கே வாக்கு ! எனும் த.த.ஜ
இந்த இரண்டு நிலைப்பாட்டில் எது சமுதாய சிந்தனையோடு எடுக்கப் பட்ட முடிவு? எனும் செய்தியை மக்களுக்கு வைக்கிறார்கள் !
 வைக்கட்டும் அது அவர்களுடைய உரிமை! 

ஆனால் அதை தங்கள் பெயரில் வெளியிட தைரியம் இன்றி இந்திய  தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் வெளியிட்டுள்ளார்கள்! தங்கள் கருத்தை தங்கள் பெயரில் வெளியிடும் தைர்யமின்மை  அல்லது த.மு.மு.க.மற்றும் இ.த.ஜ.வுக்கு இடையில் உள்ள உறவை கெடுக்க வேண்டும் என்ற நோக்கம் ! இந்த இரண்டைத்தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும் இவர்களின் இந்த இழி செயலுக்குக்கு?  முஸ்லிம் சகோதரர்களுக்கு மத்தியில் குரோதம் உண்டாக்க எண்ணி குழப்பம் ஏற்படுத்தும் இந்த செயல் யாருடைய செயல் என்பதை நீங்களே 
முடிவு செய்யுங்கள் ! 

குறைவான எண்ணிக்கையில் இருந்த உங்களை அவன் அதிகமாக்கி வைத்ததையும், குழப்பம் செய்தோரின் முடிவு என்னவானது ? என்பதையும் 
எண்ணிப்பாருங்கள்! [அல்குரான் 7:86]  

விழிப்புணர்வு நேரமிது!

,

பொருளாதாரச் சீர்திருத்தம், தாராளமயம் என்கிற பெயரில் யாரும் எதை வேண்டுமானாலும் செய்து மக்கள் நலனையும், நாட்டு நலனையும் காற்றில் பறக்கவிட்டுக் கொள்ளையடித்துக் கொள்ளலாம் என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. அரசியல்வாதிகளுக்கும், அதிகார வர்க்கத்தினருக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதுடன், விலைபோகாதவர்கள் யாருமே இருக்க முடியாது என்கிற மனோநிலையும் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதுதான் அதைவிடப் பெரிய ஆபத்தாகத் தெரிகிறது. 
எந்த ஒரு புதிய தொழில்நுட்பத்துக்கும், தொழிலுக்கும் அனுமதி வழங்கும்போது, அதனால் தேசத்துக்கு ஏற்பட இருக்கும் நன்மை தீமைகளையும், மக்களுக்கு ஏற்பட இருக்கும் சாதக பாதகங்களையும் சீர்தூக்கி முடிவெடுப்பதற்காகத்தான் ஓர் அரசும், அரசு இயந்திரமும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், நடைமுறையில் தேசத்தையோ, மக்களையோ பற்றிய கவலையே இல்லாமல் தொழில் நிறுவனங்களின் நன்மையை மட்டுமே கருத்தில்கொண்டு செயல்படும் மக்கள் பிரதிநிதிகளையும், மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அதிகார வர்க்கத்தையும் இந்தியாவில் மட்டும்தான் காண முடியும் போலிருக்கிறது. 
செல்போன் என்கிற கைப்பேசி ஒரு விஞ்ஞானப் புரட்சி என்றும், பொருளாதார வளர்ச்சியின் அடையாளம் என்றும் மக்களை நம்ப வைத்தாகிவிட்டது. உலகிலேயே மிக அதிகமான கைப்பேசிகள் இந்தியாவில்தான் இருக்கப் போகின்றன. யாரைப் பார்த்தாலும் கைப்பேசியும் காதுமாகத்தான் இருக்கிறார்கள். ஒவ்வொரு தடவை கைப்பேசியில் பேசும்போதும் ஏதோ ஒரு நிறுவனத்துக்கு வருமானம் சேர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய கவலை யாருக்குமே இல்லை. 
அரசு கைப்பேசியை அனுமதிக்கும் முன்னால், அதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அந்த நிறுவனம் செய்தாக வேண்டும், போதிய பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்திருக்க வேண்டும் என்று வரைமுறைகளை விதித்து மக்கள் நலனைப் பாதுகாத்திருக்க வேண்டாமா? அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய சுகாதாரப் பிரச்னையாக, பல லட்சம் பயனாளிகளின் உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் ஒன்றாகக் கைப்பேசிகள் மாறிவிடும் ஆபத்தைப் பற்றிச் சிந்தித்திருக்க வேண்டாமா? 
புதிது புதிதாகக் கைப்பேசி உரிமம் பல நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. “ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடும், அதனால் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பும்தான் சந்தி சிரிக்கிறதே. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் உரிமம் பெற்ற பல நிறுவனங்கள் களமிறங்கிவிட்ட நிலையில், ஆங்காங்கே காளான்கள்போல உருவாகி வருகின்றன கைப்பேசி கோபுரங்கள். இந்த செல்போன் டவர்கள் எனப்படும் நுண்ணலை கோபுரங்கள் மூலம்தான் தடங்கல் இல்லாத சேவையைக் கைப்பேசி நிறுவனங்கள் அளிக்க முடியும். 
மூன்று மாதத்துக்கு முந்தைய புள்ளிவிவரப்படி, ஏறத்தாழ 5 லட்சத்து 62 ஆயிரம் நுண்ணலை கோபுரங்கள் இந்தியா முழுவதும் எழுப்பப்பட்டிருந்தன. இப்போது இன்னும் சில ஆயிரம் கோபுரங்கள் எழுப்பப்பட்டிருக்கலாம். இந்தக் கோபுரங்களிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சால் ஏற்படும் பிரச்னைகள் பற்றிச் சொல்லி மாளாது. இதெல்லாம் நமது தொலைத்தொடர்புத் துறைக்குத் தெரியாதா என்ன? 
நுண்ணலை கோபுரங்கள் அமைப்பதற்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு அவை மீறப்படாமல் பார்த்துக் கொள்வதுதானே ஓர் அரசின் கடமை. நமது தொலைத்தொடர்புத் துறை என்ன செய்திருக்கிறது தெரியுமா? நுண்ணலை கோபுரங்களை அமைக்கும் கைப்பேசி நிறுவனங்கள், தாங்களே பரிசோதனை செய்து, கதிர்வீச்சின் அளவு குறிப்பிட்ட அளவுதான் இருக்கிறது என்று ஒரு நற்சான்றிதழ் தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது. இதற்குப் பெயர் உத்தரவா இல்லை வேண்டுகோளா என்பது தெரியவில்லை. 
இதைக்கூட நமது கைப்பேசி நிறுவனங்கள் செய்யத் தயாராக இல்லை. மாதந்தோறும் தங்களது வாடிக்கையாளர் எண்ணிக்கையையும், நுண்ணலை கோபுரங்களின் எண்ணிக்கையையும் அதிகரிப்பதில் அக்கறை காட்டும் இந்த நிறுவனங்கள், தங்களது வியாபாரத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதைப் பற்றி ஏன் கவலைப்படப் போகிறார்கள்? ஆனால், அதை மேற்பார்வை பார்க்க வேண்டிய அரசும் அல்லவா தூங்கிக் கொண்டிருக்கிறது. 
நுண்ணலை கோபுரங்கள் குடியிருப்புப் பகுதிகளில் அமைக்கப்படக் கூடாது என்றும் அதனால் உடல்நிலையில் பல பாதிப்புகள் ஏற்படும் என்றும் நீதிமன்றத் தீர்ப்புகளும், சுகாதார ஆய்வுகளும் வந்த பின்னும் இதைத் தடுக்க யாரும் தயாராக இல்லை. முறையான அனுமதி பெற்றுத்தான் ஒரு நுண்ணலை கோபுரம் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்பின் அறிவிப்பு ஒவ்வொரு நுண்ணலை கோபுரத்திலும் கண்ணில் படும்படியாக இருத்தல் வேண்டும் என்று இதுவரை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. 
நுண்ணலை கோபுரங்கள் இருக்கட்டும். கைப்பேசிகள் எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை என்பதைப் பற்றி யாராவது கவலைப்படுகிறார்களா? புதிய புதிய மாடல்களை வாங்குவதில் அக்கறை செலுத்தும் வாடிக்கையாளர்கள், அனுமதிக்கப்பட்ட அளவுக்குக் கதிர்வீச்சு உள்ள கைப்பேசிதானா என்று பரிசோதிக்கவா செய்கிறார்கள்? பன்னாட்டு கைப்பேசித் தயாரிப்பாளர்கள் அவர்களது நாட்டு விதிமுறைக்கு ஏற்ப குறைந்த கதிர்வீச்சுள்ள கைப்பேசிகளை இந்தியாவில் தயாரிப்பதில்லை என்பது நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்? 
பாவம், இந்தியக் குடிமக்கள். தங்களது பொன்னான நேரத்தைப் பேசிக் கழித்து, பணத்தையும் விரயமாக்கி, தங்களது உடல்நலத்தையும் பாதிப்புக்கு உள்படுத்திக் கொள்கிறார்கள். இவர்களும் கவலைப்படவில்லை, இவர்களைப் பற்றி அரசும் கவலைப்படவில்லை என்பதற்காக, நம்மால் வேடிக்கை பார்க்க முடியவில்லை. கைப்பேசிக் கதிர்வீச்சால் ஏற்பட இருக்கும் மிகப்பெரிய பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டாக வேண்டும்!
-அபூ ஆபிதீன்.

நாத்திகத்தின் தோற்றம்

,

நாத்திகத்தின் தோற்றம்

Post image for நாத்திகத்தின் தோற்றம்

பொதுவான ஒரு நிலை என்னவென்றால் எந்த ஒன்றைப் பற்றியும் உண்டு என்ற நிலைக்குப் பிறகுதான் இல்லை என்ற நிலை தோன்ற முடியும். இல்லாத ஒன்றை இல்லை என்று கற்பனை செய்ய முடியாது. அரிசி தமிழக மக்களின் பிரதான உணவு; அத்தியாவசியத் தேவை, அதனால் தான் மனித நேயமற்ற அரக்க குணம் கொண்ட வியாபாரிகள் அதில் கல்லைக் கலந்து கல்லைம் அரிசியாக்குகின்றனர். மக்களுக்குத் தேவையில்லாத ஒன்றை கலப்படம் செய்து ஆதாயம் அடைய முடியாது. மக்களுக்குத் தேவையானவற்றில் தான் கலப்படம் நடக்கிறது. அரிசியில் மனிதனின் சமூக வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அதனால் தான் மனித நேயமற்ற அரக்க குணம் கொண்ட அரசியல்வாதிகள் மதத்தின் பேராலும் ஜாதியின் பேராலும், மாநிலத்தின் பேராலும், மொழியின் பேராலும் மக்களுடைய உள்ளங்களில் நஞ்சைக் கலந்து மனித அமைதியைக் கெடுக்கிறார்கள். இதுவே எதார்த்த நிலை.
இதுப் போலவே கடவுள் நம்பிக்கை மனித வர்க்கத்திற்கு அத்தியாவசியத் தேவையாக இருப்பதால் தான், கடவுளின் பெயரால் வயிறு வளர்ப்பவர்கள், புரோகிதத்தைத் தொழிலாகக் கொண்டிருப்பவர்கள், அந்தக் கடவுளின் பெயரால் துணைக் கடவுள்களையும், பொய்க் கடவுள்களையும், மூட நம்பிக்கைகளையும், வெற்றுச் சடங்கு சம்பிரதாயங்களையும் இன்னும் இவைப் போல் மனித சமுதாயத்தை வழிகேட்டிலும் அழிவுப் பாதையிலும் இட்டுச் செல்லும் பல தீய செயல்களையும் நாளோரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அரங்கேற்றி வருகிறார்கள். இந்தப் படுபாதகச் செயல்ளைப் பார்த்து வயிறு எரியும் சிந்தனையாளர்கள், போதிய ஆய்வுக் குறைவால் உண்மையான அந்த ஒரிறைவனையும் மறுக்கத் துணிகிறார்கள். நாத்திகர்களின் இச்செயல் எதுப் போல் இருக்கிறது என்றால், அரசியல் என்று ஒன்று இருக்கப்போய்த் தானே அரசியலின் பெயரால், மக்களை சுரண்டிப் பிழைக்கும் அரசியல் தரகர்கள் தோன்றுகிறார்கள். எனவே அரசியலே வேண்டாம் என்று சொல்வதுப் போல் இருக்கிறது. மக்களின் உணவாக அரிசி இருக்கப் போய்த் தானே மனித நேயமற்ற அரக்க குணம் கொண்ட வியாபாரிகள் அரசியில் கல்லைக் கலக்கிறார்கள்; எனவே மக்கள் அரிசியை உணவாகக் கொள்ளக் கூடாது என்று சொல்வதுப் போல் இருக்கிறது.
அரசியலில் அயோக்கியர்கள் நுழைவதைத் தடுப்பதற்கு திறமையில்லாதவர்கள், அரசியலில் கல்லைக் கலக்கும் அயோக்கியர்களை ஒழித்துக் கட்ட வகைத் தெரியாதவர்கள் அரசியலே வேண்டாம்; அரிசியே வேண்டாம் என்று பிதற்றுவதுப் போன்ற ஒரு பிதற்றலைத் தான் ஒரேக் கடவுளைப் பற்றி நாத்திகர்கள் பிதற்றுகிறார்கள். கடவுளின் பெயரால் புரோகித அயோக்கியர்கள் புரிந்து வரும் அயோக்கியத்தனங்களை ஒழித்துக்கட்ட வழித்தெரியாத நாத்திகர்கள், படைத்த அந்த இணை, துணை இல்லாத ஒரே இறைவனை ஒழித்துக் கட்ட முற்படுகிறார்கள்.
அரிசியை உணவாகக் கொள்வதைத் தடுப்பது எப்படி சாத்தியமில்லையோ அதேப் போல் அகில உலகங்களையும் படைத்து, அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து மனிதனையும் படைத்து, உணவளித்து நிர்வகித்து வரும் இணை துணை இல்லாத அந்த ஏகன்-ஒரே இறைவனையும் இல்லை என்று ஒரு போதும் நிலைநாட்ட முடியாது; அதுமட்டுமல்ல நாத்திகர்களின் இந்தத் தவறான எண்ணத்தால், முயற்சியால் மனிதக் கற்பனையில் உருவான எண்ணற்றப் பொய் கடவுள்களையும், அந்தக் கடவுள்களின் பெயரால் மக்களை ஏமாற்றிப் பிழைத்து வரும் புரோகிதர்களையும் ஒருபோதும் ஒழிக்க முடியாது. காரணம் சத்தியத்தால் அசத்தியத்தை ஒழித்துக் கட்ட வாய்ப்பு உண்டு. ஆனால் அசத்தியத்தால் சத்தியத்தை ஒழித்துக் கட்ட முடியாது. பெரியாரின் கொள்கைகளையேப் பின்பற்றுகிறோம் என்று மேடையில் முழக்கமிடுவோரின் செயல்பாடுகளே இதற்கு போதிய ஆதாரமாகும்.
ஆரம்பத்தில் ஒரே இறைவன் தான்-ஒரேக் கடவுள் தான். அவன் படைத்து ஒரே மனித சமுதாயம் தான். இதை தான் தமிழக அறிவுசால் முன்னோர்கள் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று மக்களுக்கு உணர்த்தினார்கள். ஆனால் மனிதவர்க்கத்தினருக்குப் போட்டியான படைப்பி(ஜின்)லுள்ள ஷைத்தான்-ஷாத்தான் மனித இனத்தை வழிக்கெடுத்து அழிவுப் பாதையில் இட்டுச் சென்று நரகில் தள்ளுவேன் என்று சபதம் ஏற்றிருக்கிறான். அவனது வலையில் சிக்குபவர்களை நரகில் தள்ளுவேன். என்று இறைவனும் வாக்களித்திருக்கிறான்.
நாத்திகர்கள் இந்த இடத்தில் ஆழ்ந்து சிந்தித்து விளங்க வேண்டும். அவர்கள் மேடைகளில் மக்கள் மன்றத்தில் நீதி, நேர்மை, சத்தியம், உண்மை என்று முழங்கும் பல காரியங்களில் அவர்கள் பகுத்தறிவு ஏற்று ஒப்புக் கொண்டு சரிகண்டு மேடைகளில் மக்கள் மன்றத்தில் பகிரங்கமாக அறிவித்தப்படி அந்த நீதியை நேர்மையை சத்தியத்தை-உண்மையை தங்களின் அந்தரங்க தனிமனித வாழ்க்கையில் கடைப்பிடிக்கீறீர்களா? கடைப்பிடிக்க முடிகிறதா? என்று அவர்கள் நெஞ்சைத் தொட்டுக் கேட்டுப் பார்க்க வேண்டும். அப்போது எத்தனைக் காரியங்களில் அவர்கள் தங்கள் மனசாட்சிக்கு விரோதமாகச் செயல்படுகிறவர்கள் என்பதை அவர்களே உணர்ந்துக் கொள்ள முடியும். அப்படியானால் அவர்கள் சரி கண்டுள்ள விஷயங்களில், அவர்களின் மனசாட்சிக்கே மாறாக அவர்களைச் செயல்பட வைக்கும் சக்தி எது? அந்தச் சக்தியைத் தான் ஷைத்தான்-சாத்தான் என்கிறோம்.
மதங்கள் அனைத்தும் மனிதர்களால், குறிப்பாக மதப்புரோகிதர்களால், அவர்களின் வயிற்றுப் பிழைப்புக்காக கற்பனை செய்யப்பட்டவையே அல்லாமல் அந்த ஒரே இறைவன் கொடுத்தவை அல்ல. இறைவனால் மனிதனுக்கென்றுக் கொடுக்கப்பட்டது. தூய வாழ்க்கை நெறி-நேர்வழி-ஒரே வழி. கோணல் வழிகள்- மதங்கள் இறைவன் கொடுத்தவை அல்ல. ஆக உலகிலுள்ள இன்றைய மனித சமுதாயத்தின் 99 விழுக்காட்டினர் இந்தப் புரோகிதர்கள் பின்னால் பல கோணல் வழிகளில் சென்று கொண்டிருக்கின்றனர்.
இந்தப் பரிதாப நிலையை ஓரளவு சிந்திக்கும் திறன் படைத்தவர்கள் பார்த்து மனம் கலங்குகிறார்கள். மனித சமுதாயத்தின் பரிதாபகரமான ஏற்றத்தாழ்வு நிறைந்த சுரண்டல்கள் நிறைந்த-ஜாதிக் கொடுமைகள் நிறைந்த -மனிதனே சக மனிதனை அடிமைப்படுத்தும் நிலை மனிதனே இன்னொரு மனிதனை மனித மலத்தைத் தின்ன வைக்கும் கொடுமை இவற்றை எல்லாம் பார்த்து பதைபதைக்கிறார்கள்.
ஜோதிடம், நல்ல நேரம்-கெட்ட நேரம், எண் ஜோதிடம், வாஸ்து சாத்திரம், கிரகபலன், பெயர் மாற்றம், ரெகை சாத்திரம், கிளி ஜோசியம், எலி ஜோசியம் இன்னும் பலவகை ஜோசியங்கள், ராசி பலன்கள், கற்கள் ராசி, சகுனம் பார்த்தல் இத்தியாதி இத்தியாதி-மூட நம்பிக்கைகளில் மக்களை ஏமாற்றிச் சுரண்டும் கொடூர நிலைகளைக் கண்டும் மதங்களின் பெயரால் கர்மாதி, ததி, 3-ம்,7-ம்,40-ம் பாத்திஹா தேர், சப்ரம், கூடு, என இறந்தவர்களின் பெயரால் பொய்க் கடவுளர்களின் பெயரால் சடங்கு சம்பிரதாயங்கள், சிலை வழிபாடு, சமாதி வழிபாடு யானை, எலி, பாம்பு என பல பிராணிகளின் வழிபாடு, அறிவுக்கே பொருந்தாத கற்பனை கட்டுக் கதைகள், இன்னும் இவைப் போல் ஏட்டில் அடங்கா, எழுதி மாளாத மூடச் சடங்கு சம்பிரதாயங்களில் மக்கள் ஏமாற்றப்படுவதை, அவர்களின் பொருளாதாரம் சுரண்டப்படுவதை கண்டு சகிக்காத பகுத்தறிவாளர்கள், கடவுள்களின் பெயரால் தானே அறிவுக்கே பொருந்தாத இப்படிப்பட்ட அட்டூழிங்கள் அரங்கேறுகின்றன. கடவுளே இல்லை என்று சாதித்து விட்டால் இவை அனைத்தும் ஒழிந்துவிடும் என்று இவர்களாக கற்பனை செய்துக் கொண்டு ஒரெயொரு உண்மையான கடவுள் மறுப்புக் கொள்கையையும் பிரசாரம் செய்கிறார்கள்.
ஆக உண்மையான ஒரேக் கடவுளின் பெயரால் இந்தப் புரோகித வர்க்கத்தினர் எண்ணற்ற கடவுள்களை கற்பனை செய்துவிட்டதால், அந்த எண்ணற்ற பொய்க் கடவுள்களுடன் உண்மையான ஒரே கடவுள்களையும், ஒழித்துக் கட்டலாம் எனப் பகல்கனவுக் காண்கிறார்கள். பகுத்தறிவு பேசும் நுண்ணறிவு இல்லாதவர்கள். உண்மையில் இன்று உலகில் என்ன நடைபெறுகிறது என்றால், பல கடவுள் கொள்கையுடைய புரோகிதர்கள் மக்களை ஒரு பக்கம் வழிக்கெடுக்கிறார்கள்; உண்மைக் கடவுளையும் மறுக்கும் நாத்திகர்கள் மக்களை மறுபக்கம் வழிக் கெடுக்கிறார்கள். ஆக பல கடவுள் கொள்கையுடைய புரோகிதர்களாலும் உலகிற்கு ஆபத்து; ஒரே கடவுளை மறுக்கும் நாத்திகர்களாலும் உலகிற்கு ஆபத்து. உலகம் முழுவதும் இன்று அழிவில் மிதக்கிறது. ஆக இரு சாரரும் மனித விரோதிகளேயாவர்.
உண்மைக் கடவுளை மறுப்பதற்கு இன்னொரு நியாயமான காரணத்தையும் இந்த மதப் புரோகிதர்கள் உருவாக்கி விட்டார்கள். பெரும்பாலான மக்கள் இந்தப் புரோகிதர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறார்கள். மூட நம்பிக்கைகளில் மூழ்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் விஞ்ஞான வளர்ச்சி, மனித அறிவு முதிர்ச்சி காரணமாக பல உண்மைகள் வெளிப்பட்டு வருகின்றன. இவை இதுக் காலம் வரை இந்தப் புரோகிதர்களால் கற்பனையாக சொல்லப்பட்ட மூட நம்பிக்கைகளைத் தகர்த்து எறிவனவாக இருக்கின்றன. இதை இந்தப் புரோகிதர்களால், அவர்களின் தலைமைப் பீடங்களால் சகிக்க முடியவில்லை.
எனவே அந்த உண்மைகளை வெளிப்படுத்தும் அறிஞர்களை-விஞ்ஞானிகளைக் கொடுமைப்படுத்திக் கொல்லவும் செய்தார்கள். அறிஞர் சாக்ரட்டீஸ், கலிலியோ, இன்னும் இவர்கள் போல் பல அறிஞர்கள், விஞ்ஞானிகள் உண்மைகளைச் சொன்னக் காரணத்தால் கொடுமைப்படுத்தப்பட்டார்கள்; கொலை செய்யப்பட்டார்கள். விஞ்ஞான ஆய்வில் கோளாறு இருந்தால் அது தவறாக இருக்கலாம். ஆனால் சரியான ஆய்வில் முறையாக கண்டுப்பிடிக்கப்படும் உண்மைகள் இறைவனுடைய கூற்றுக்கு முரணாக ஒருபோதும் இருக்காது. காரணம் இறை அறிவிப்புகள் இறைவனது சொல்; நிருபிக்கப்பட்ட விஞ்ஞானம் இறைவனது செயல்; எனவே இறைவனது சொல்லும் செயலும் ஒருபோதும் முரண்பட முடியாது. குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான். என்ற டார்வின் தத்துவம் ஒரு தவறான ஆய்வு-தத்துவம் என இன்று நிரூபிக்கப்பட்டது. மரபணு (TNA) ஆய்வு முலம் உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் மூலம் வந்தவர்களே என்ற குர்ஆன் கூறும் உண்மை இன்று விஞ்ஞானம் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இறைத்தூதர் மூஸாவுக்கு, இறைத்தூதர் ஈஸாவுக்கு அருளப்பட்ட தவ்றாத்தும், இன்ஜீரும் னிதக் கரம் பட்டு கலப்படமாகி பல மூடநம்பிக்கைகள் அவற்றுள் நுழைந்து விட்டன. அவற்றிலுள்ள உண்மையான இறை அறிவிப்புகள் ஒருபோதும் நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானத்திற்கு முரண்படாது. இடையில் இந்த யூத கிறித்துவ புரோகிதர்களால் நுழைக்கப்பட்ட மனிதக் கருத்துக்கள் விஞ்ஞானத்திற்கு முரண்படுவதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் இந்த மதப்புரோகிதர்கள் இறை அறிவிப்புகளை விட மனிதக் கற்பனைகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். காரணம் அவையே அவர்களின் பிழைப்புக்குரிய வாழ்வு ஆதாரங்களாகும்.
இறைவனால் இறுதியாக அருளப்பட்ட அல்குர்ஆன் இன்று சுமார் 1425 ஆண்டுகளாகியும் அதன் அசல் நிலை மாறாமல் இருக்கிறது. முஸ்லிம் அல்லாத பல அறிஞர்கள், விஞ்ஞானிகள் நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளுக்கு முரணாக ஒரேயொரு ஆதாரமாவாது அல்குர்ஆனில் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் அல்குர்ஆனில் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் ஆராய்ந்தும், இறுதியில் தோல்வியையே தழுவினர். அவர்களில் சிலர் இஸ்லாத்தை நேர்வழி எனக் கண்டு அதில் இணைந்து விட்டனர். அவர்களில் ஒருவர் மருத்துவர் மாரிஸ் புகைல் என்ற பிரெஞ்சு டாக்டர். அவர் “விஞ்ஞான ஒளியில் அல்குர்ஆனும் பைபிளும் என்று ஒரு நூலே எழுதியுள்ளார். அதில் 19, 20ம் நூற்றாண்டுகளில் கண்டுப்பிடிக்கப்பட்ட உண்மைகளை 6-ம் நூற்றாண்டிலேயே அல்குர்ஆன் எடுத்துரைக்கும் அர்ப்புதத்தை விளக்கியுள்ளார். அதே சமயம் பைபிளில் எண்ணற்ற முரண்பாடுகள் இருப்பதையும் கண்டறிந்தார். முறையாக பகுத்தறிபவர்களுக்கு இந்த நூல் ஒரு அறிய வழிகாட்டியாகும்.
மருத்துவர் மாரிஸ் புகைஸ் போல் பல அறிஞர்களும் மனிதகுலம் அனைத்திற்கும் நேர்வழிக்காட்டி நூல்-நெறி நூல் அல்குர்ஆனை ஆய்வு செய்து அசந்து போயிருக்கிறார்கள். ஆச்சரியப்பட்டு போயிருக்கிறார்கள். அவர்களில் சிலர் அல்குர்ஆனில் நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளுக்கு முரணான கருத்து இருக்கிறது என்று நிலைநாட்டிவிட வேண்டும் என்ற வெறியோடு அல்குர்ஆனை வரிவிடாமல், ஆழ்ந்து ஆராய்ந்தவர்கள். ஆனால் அவர்களது முயற்சியில் தோல்வியுற்றனர். அவர்களில் சிலர் இஸ்லாத்தையும் அல்குர்ஆனையும் இழிவுப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தோடு ஆய்வில் ஈடுபட்டவர்கள். அல்குர்ஆன் வெளிப்படுத்தும் விஞ்ஞான உண்மைகளைக் கண்டு, இது உண்மையில் 6-ம் நூற்றாண்டில் தனி ஒரு மனிதரோ, அல்லது ஒரு குழுவினரோ முயற்சிகள் செய்து எழுதிய நூல் அல்லவே அல்ல; இது மனித சக்திக்கு மீறிய ஒரு சக்தியால் மட்டுமே வெளிப்பட்டிருக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர்.
“அல்குர்ஆன் தனி ஒரு மனிதனாலோ, ஒரு குழுவினராலோ எழுதப்பட்டது என்று கூறுகிறவர்கள், இறைவனைத் தவிர மற்றவர்கள் அனைவரையும் கூட்டு சேர்த்துக் கொண்டு முழுக் குர்ஆன் அல்ல அதிலுள்ள ஒரு அத்தியாயம் போல் பிரிதொரு அத்தியாயத்தை எழுதிக் காட்டட்டுமே பார்க்கலாம்” என்று அல்குர்ஆன் சவால் விட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த 1429 ஆண்டுகளாக அந்த சவாலை மனிதர்களால் முறியடிக்க முடியவில்லை. அல்குர்ஆன் அன்று மனிதனால் எழுதப்பட்டது என்று கூறுகிறவர்கள், அதில் அறிவுக்குப் பொருந்தாத கருத்துக்கள் இருக்கின்றன என்று கூறுகிறவர்கள், ஒன்றில் ஆத்திரத்தோடு, வெறுப்போடு காழ்ப்புணர்வுடன் அல்குர்ஆனை ஆய்வு செய்தவர்களாக இருக்க வேண்டும்; அல்லது அவசரஅவசரமாக நுனிப்புல் மேய்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதே நடுநிலையோடு, ஆழ்ந்து அல்குர்ஆனை ஆராய்ந்தவர்களின் ஒட்டுமொத்தக் கருத்தாக இருக்கிறது.
எனவே நாத்திக பகுத்தறிவுச் சகோதரர்கள், இருக்கும் ஒரேக் கடவுளே சுயநலப் புரோகிதர்களின் கற்பனையில் பல பொய்க் கடவுளர்களாகி அதிலிருந்து பிறந்ததுத்தான் நாத்திகவாதம் என்பதை அறிந்துக் கொள்வார்களாக. நடுநிலையோடு தங்களின் உள்ளத்தில் நிறைந்திருக்கும் கருத்துக்களை சில நாட்கள் ஒதுக்கி வைத்துவிட்டு ஆத்திரமோ அனுதாபமோ இல்லாமல், விருப்போ வெறுப்போ இல்லாமல் இறைவனின் இறுதி வழிகாட்டல் நூலினை ஆழ்ந்து ஆய்வு செய்தால் அற்புதமான விளக்கங்கள் அவர்களுக்கு கிடைக்கும்.
 -அபூ ஆபிதீன்.

எனக்கு எதையும் இணையாக்காமல் என்னிடமே கேளுங்கள்

,

 எனக்கு எதையும் இணையாக்காமல் என்னிடமே கேளுங்கள்

Post image for எனக்கு எதையும் இணையாக்காமல் என்னிடமே கேளுங்கள்

 
 அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் கொடுத்துள்ளான். அல்லாஹ் மனி தனிடம் கூறுவது ஒன்றே ஒன்றுதான். ‘நீ எனக்கு மட்டுமே அடிபணியவேண்டும் எனக்கு எதையும் இணையாக்காதே’ என்பது தான் அது! இவ்வாறு இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களில் ஒன்று தான் அல்லாஹ்வை மட்டும் அழைத்து பிரார்த்தனை செய்வது!
 
 அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்’ பிறகு, ‘என்னை அழையுங்கள்! உங்களுக்கு பதிலளிக்கிறேன். எனக்கு அடிபணி வதை விட்டும் பெருமையடிப் போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். (40:60) என்ற இறை வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.   அறிவிப்பு: நுஃமான் பின் பஷீர்(ரழி) நூல்:திர்மிதி.
 
 எனவே இந்தப் பிரார்த்தனை என்ற வணக்கத்தை வல்ல அல்லாஹ் ஒருவனிடம் மட்டுமே செய்ய வேண்டும். அல்லாஹ் அல்லாத வேறு எவரிடமும் நம்முடைய தேவைகளைக் கேட்கக் கூடாது என்பது தெளிவாகிறது. ஆனால் இன்று முஸ்லிம் சமூகத்தில் பெரும்பாலான மக்கள் இந்த இறைவசனத்தற்கு மாற்றமாக சமாதி வழிபாட்டில், அவ்லியாக்கள், நாதாக்கள் என்ற பெயரில் வழிபடும் அவநிலையை காண நேரிடுகிறது. இந்த அவல நிலைக்கு 7 வருடம் அரபு மதரஸாக்களில் மார்க்கக் கல்வி பயின்ற மவ்லவிமார்களும் ஆதரவு தெரிவிப்பது, அறியாத மக்களை, நாளை மறுமையில் இறைவனுக்கு இணை வைப்பான ‘ஷிர்க்’ என்ற மாபாதக செயலை செய்ததற்கான கூலியாக நரக வேதனையில் கொண்டு போய் சேர்க்கும் என்ற உண்மையை மறைப்பது ஏன்?
 
 என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ‘நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்’ என்று அல்லாஹ் அல்குர்ஆன் 2:186 வசனத்தில் கூறுகின்றான்.
 
 
பிரார்த்தனையில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள்:  பிரார்த்தனை செய்யும்போது அனைத்து ஆற்றல்களையும் உள்ளடக்கியிருக்கும் சர்வ வல்லமை படைத்தவனின் முன்னிலையில் நாம் இருக்கின்றோம் என்ற எண்ணத்துடன் அடக்கத்தோடும், பணிவோடும் பிரார்த்திக்க வேண்டும். உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 7:55) நபி ஜகாரிய்யா (அலை) அவர்கள் இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். (அல் குர்ஆன் 19:3)
 
 அச்சத்துடனும் உறுதியான நம்பிக்கையுடனும் அல்லாஹ்வை மட்டும் பிரார்த்தனை செய்யுங்கள் ‘நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது.’ (அல்குர்ஆன் 7:6)
 
 
வலியுறுத்திக்கேட்பது: அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யும் போது ‘நீ விரும்பினால் தா! இல்லையென்றால் தர வேண்டாம்’ என்பது போன்று கேட்கக் கூடாது. மாறாக, ‘இதை நீ தந்து ஆகவேண்டும் உன்னால் தான் தரமுடியும். வேறு யாராலும் தரமுடியாது’ என்று வலியுறுத்திக் கேட்க வேண்டும்.
 
 அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் பிரார்த்தனை செய்தால் வலியுறுத்திக் கேளுங்கள். அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு! என்று கேட்க வேண்டாம். வலியுறுத்திக் கேட்பது அல்லாஹ்வை நிர்பந்திக்காது. ஏனெனில் அவனை (அல்லாஹ்வை) நிர்ப்பந்திப்பவர் யாருமில்லை. அறிவிப்பு: அனஸ்(ரழி) நூல்: புகாரி.
 
 பாவமானதைக் கேட்கக் கூடாது: அல்லாஹ்;வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘நான் பிரார்த்தனை செய்தேன். ஆனால் என் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப் படவில்லை’ என்று மனிதன் கூறுகின்றான். உறவை துண்டிக்கும் விஷயத்திலும் பாவ மானவற்றிலும் பிரார்த்தனை செய்தால் அது அந்த அடியாருக்கு (பிரார்த்தனை செய்பவருக்கு)ப் பதில் அளிக்கப்படாது.
 அறிவிப்பு: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம்
 
 அவசரப்படக்கூடாது: பிரார்த்தனை செய்யும்போது அவசரப்படக்கூடாது. பலமுறை திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும். ஓரிரு முறை மட்டும் கேட்டு விட்டு, நான் பிரார்த்தனை செய்தேன் எனக்கு இறைவன் எதுவும் தரவில்லை என்று கூறி பிரார்த்தனை செய்வதையே விட்டு விடக்கூடாது. இத்தகைய எண்ணத்துடன் பிரார்த் தனை செய்தால் அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாது ‘நான் பிரார்த்தனை செய்தேன். ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப் படவில்லை என்று கூறி நீங்கள் அவசரப் படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்க ப்படும்’. என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.   அறிவிப்பு:அபூஹுரைரா(ரழி)நூல்: புகாரி.
 
 
நிராசை அடையக்கூடாது: சிலர் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள் அவர்கள் கேட்கும் அந்த காரியம் நிறைவேறவில்லையென்றால் அல்லாஹ்வின் அருளில் நிராசை அடைந்து விடுவார்கள். அல்லாஹ்வின் அருள் விசாலமானது. எனவே அவனது அருளில் நிராசையடையக் கூடாது ‘அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (அல்லாஹ்வை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்கமாட்டார்கள்’ (அல்குர்ஆன் 12:87)
 
 ’என் அடியார்களே! எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைக்க வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்: மிக்க கருணையுடையவன் என் று (அல்லாஹ் கூறுவதை) (39:53) தெரிவிப்பீராக!
 
 உணவு உடை ஹலாலாக இருத்தல்:  நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங் களுக்கு அளித்து உள்ளவற்றிலிருந்து தூய் மையானவற்றையே உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப் பின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங் கள். (2:172) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தூய்மை யானவன். தூய்மையானதைத் தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக் கொள்ளமாட்டான். அல்லாஹ் நபிமார்களுக்கு எதை ஏவினானோ அதையே முஃமின்களுக்கும் ஏவுகின்றான் என்று கூறிவிட்டு, ‘தூதர்களே! நல்ல பொருள் களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள். (ஸாலி ஹான) நல்ல அமல்களைச் செய்யுங்கள்! நிச் சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன். (23:51)
 
 ஒரு மனிதரைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். ‘அவனோ நீண்ட தூரம் பயணத்தில் இருக்கின்றான். அவனுடைய தலை புழுதிபடிந்த பரட்டையாக இருக்கின்றது. அவன் வானத்தின்பால் கைகளை உயர்த்தி, எனது இறைவனே! எனது இறைவனே! என்று அழைக்கின்றான். அவனது ஆடை அவனது உணவு அவனது குடிப்பு ஆகிய அனைத்தும் ஹராமாக இருக்கின்றது. அவனோ ஹராமில் மூழ்கிவிட்டான். இந்த நிலையில் அவனது பிரார்த்தனை எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படும். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி) நூல்: முஸ்லிம்
 
 அல்லாஹ் தன் அடியார்கள் மீது மிகவும் கருணையுள்ளவன். அந்த அடியான் வெளித் தோற்றத்தை வைத்துக் கொண்டு அவனுடைய அறியாமையினால் தீங்கு தரக்கூடியதைக் கேட்பான். உதாரணமாக, தனக்கு அதி கப்படியான, செல்வம்ஃபணம் வேண்டுமென்று பிரார்த்தனை செய்வான். ஆனால் அந்த செல்வம் பணம் அவனை இறை நிராகரிப்புக்கு இழுத்துச் செல்லும் என்றிருந்தால் அதைக் கொடுக்காமல் அதைவிடச் சிறந்ததை இறைவன் கொடுப்பான். ஒருவன் தனக்கு ஏற்படவுள்ள ஆபத்தை உணராமல் தனது தேவையைக் கேட்கிறான். அனைத்தையும் அறிந்த அல்லாஹ் அதைக் கொடுப்பதற்கு பதிலாக அவனுக்கு வரவிருக்கும் ஆபத்தை நீக்குகிறான். அதுவும் இல்லையென்றால் அவன் கேட்டதைக் கொடுக்காமல் அதற்கு பகரமாக மறுமையில் அவனது நிலையை உயர்த்துவான்.
 
 ’உறவைத் துண்டிக்காமலும் பாவமான காரியம் அல்லாமலும் எந்த ஒரு பிரார்த்த னையை ஒரு முஸ்லிம் செய்தாலும் அவரது அந்த பிரார்த்தனை விரைவாகப் பதில் அளிக்கப்படும் அல்லது அதை அல்லாஹ் மறுமையில் ஒரு சேமிப்பாக ஆக்குகிறான் அல்லது அந்தப் பிரார்த்தனைக்குத் தக்க வாறு அவனது பாவத்தை அழிக்கின்றான். இவ்வாறு மூன்று விதங்களில் ஏதேனும் ஒரு விதத்தில் அல்லாஹ் பதிலளிக்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அதிகமாகப் பிரார்த்தனை செய்தால் என்ன? என்று நபித் தோழர்கள் கேட்டனர். அதற்கு ‘அல்லாஹ் அதிகமாக்குவான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அபூஸயீத்(ரழி) நூல்: அஹ்மத்.
 
 ஒரு அடியான் அல்லாஹ்விடம் பிரார்த் தனை செய்யும்போது அவனை வெறுங்கையு டன் அனுப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகின்றான். உங்களுடைய இறைவன் சங்கையானவன் அவனுடைய அடியார் தனது கையை அவன் பக்கம் உயர்த்தும் போது அந்த இரு கைகளையும் வெறுமனே அனுப்புவதற்கு வெட்கப்படுகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள். அறிவிப்பு: சல்மான்(ரழி) நூல்:இப்னு மாஜா.
 
 
பதிலளிக்கப்படும் பிரார்த்தனைகள்: கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகை யையும் நிறைவேற்றிய பின் கேட்கப்படும் பிரா ர்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும். எந்தப் பிரார்த்தனை செவியேற்கப்படும்? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், இரவின் கடைசியிலும், கடமையாக்கப்பட்ட தொழுகைக்குப் பின்னரும் கேட்கும் பிரார்த்தனை ஆகும் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பு: அபூஉமாமா(ரழி) நூல்: திர்மிதீ
 
 இரவின் கடைசி நேரத்தில்… இரவின் கடைசிப் பகுதியில் கேட்கப்படும் பிரார்த்தனை பதிலளிக்கப்படும் பிரார்த்தனைகளில் ஒன்று. எனவே அந்த நேரத்திலும் அதிகமாகப் பிரார்த்திக்க வேண்டும். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரவை மூன்றாக பிரித்து கடைசிப் பகுதியில் அல்லாஹ் முதல் வானத்திற்கு தினமும் இற ங்குகிறான். என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் ஏற்கின்றேன். என்னிடம் யாரேனும் கேட்டால் நான் அதை ஏற்கின்றேன். என்னிடம் யாரேனும் மன்னிப்புக் கேட்டால் நான் மன்னிக்கிறேன் என்று கூறுகிறான். அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி) நூல்: புகாரி 1ஃ1145 அல்லாஹ் தன்னுடைய நெறிநூலாகிய அல்குர்ஆனில் இறை நம்பிக்கை உடையவர் இரவின் கடைசி நேரத்தில் மன்னிப்பு கேட்பவராக இருப்பார் என்று கூறுகின்றான். (அல்குர்ஆன் 3:17)
 
 
ஸஜ்தாவின்போது…. ஓர்அடியான் அல்லாஹ்விடம் மிக நெருக் கமாக இருக்கும் நேரம் ஸஜ்தாவாகும். எனவே இந்த சந்தர்ப்பத்தில் கேட்கப்படும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. ஸஜ்தாவில் இருக்கும் நிலையில் ஓர் அடியான் தன் னுடைய இறைவனை நெருங்குகின்றான் எனவே ஸஜ்தாவில் பிரார்த்தனையை அதிகப் படுத்துங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி) நூல்: முஸ்லிம்.
 
 பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில்.. பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அனஸ்(ரழி) நூல்: அபூதாவுத்.
 
 
தந்தை பிள்ளைகளுக்கான பிரார்த்தனையின் போது…. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பிரார்த்தனைகள் இருக்கின்றன. அவற்றிற்குப் பதிலளிக்கப்படும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 1.அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை. 2. பிரயாணியின் பிரார்த்தனை. 3.தந்தை தனது பிள்ளைகளுக்காகச் செய் யும் பிரார்த்தனை. அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி) நூல்: இப்னு மாஜா
 
 ஜும்ஆ நாளில்….. வெள்ளிக்கிழமை அன்று ஒரு நேரம் உண்டு. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தால் அதை அல்லாஹ் அவருக்கு கொடுக்காமல் இருப்பதில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த நேரம் மிகக் குறைவானது என்பதைத் தமது கையால் சைகை காட் டினார்கள். அபூஹுரைரா(ரழி) புகாரி.
 
 
நோன்பாளி நோன்பு திறக்கும் போது… நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று நபர்களின் பிரார்த்தனை மறுக்கப்படாது. 1. நீதியான அரசன், 2. பாதிக்கப்பட்டவர் செய்யும் பிரார்த்தனை 3. நோன்பாளி நோன்பு திறக்கும்போது கேட்கும் பிரார்த்தனை.  அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி) நூல்: இப்னுமாஜா.
 
 எனவே நாம் பிரார்த்தனை செய்யும் போது, நம்மைப் படைத்த அல்லாஹ்வை மட்டுமே அழைத்து முறையிட்டு, அவனுடன் யாரையும் கூட்டாக்காமல், பிரார்த்தனையின் போது மேற்கண்ட குர்ஆன் ஹதஃத் ஒழுங்கு முறைகளுடன் பிரார்த்திப்போமாக! வல்ல இறைவன் நம்முடைய அனைத்து பிரார்த்தனைகளையும் ஏற்றுக் கொள்வானாக! ஆமீன்
.
-அபூ ஆபிதீன்.

சேப்பாக்கம் லாக் நகர் சேரி பகுதிகளில் இதஜ தஃவா குழு!

,
ங்கும் தஃவா! எதிலும் தஃவா!  மார்க்கம்  மற்றும் சமுதாயப் பணிகளில் தன்னை அர்பணித்துக் கொண்ட   இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மருத்துவ முகாம்கள், ரத்த தான முகாம்கள், போராட்டம் கருத்தரங்கம், அதிகாரிகள் அரசியல்வாதிகள் சந்திப்பு என அனைத்து மட்டத்திலும் மாமறை குர் ஆனை மக்களிடம் சேர்க்கும் வாய்ப்பாக கொண்டு செயல் படுகிறது!இஸ்லாத்தை எடுத்து சொல்லும் அற்புதமான அழைப்பு பணியாக   வாரந்தோறும் அரசு மருத்துவ மனைகளில் அல்லலுறும் ஏழைகளை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி பழம் ,பிஸ்கட் போன்ற உணவுகளை வழங்கி அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்லும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது நாம் அறிந்ததே
அந்த வகையில்.  சமூகத்தில் புரையோடிப்போய் உள்ள குடி, சூது, விபாச்சாரம், வட்டி, வரதட்சணை, ஆபாசம் உள்ளிட்டவைகளை ஒழிக்கும்  விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் சேப்பாக்கம் லாக் நகர்.சேரி
                              பகுதிகளில் உள்ள மக்களுக்கு (27 .02 .2011)  ஞாயிறன்று        


















                                                                                                                                    மாநிலச்செயலாளர் செங்கிஸ்கான் மற்றும் மாநிலச்பேச்சாளர் மசுதா ஆலிமா தலைமையில் பெண்கள் குழுவும் இணைந்து மக்களை சந்தித்து அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து கூறி தாஃவா  செய்தனர். (அல்ஹம்துலில்லாஹ்)
மணலி அஸ்பாக்

சென்னை மண்ணடியில் இதஜ சார்பில் சமூக தீமை எதிர்ப்பு பொதுக் கூட்டம்!

,



















நேற்று (27.02.2011)  ஞாயிறு மாலை மண்ணடியில் சமூக தீமை எதிர்ப்பு   பொதுக்கூட்டம் மிக எழுச்சியுடன் நடைபெற்றது. இதில் மாநிலப் பேச்சாளர் மஸுதா ஆலிமா “வரதட்சணை” என்ற தலைப்பில் மாநில செயலாளர் செங்கிஸ்கான் “இஸ்லாமிய அரசியலும்  இன்றைய அரசியலும்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து  மாநில பொருளாளர் தொண்டியப்பா “சமூக தீமைகள்” என்ற தலைப்பிலும்,  மாநில தலைவர்  S.M.பாக்கர் "கோத்ரா ரயில் எரிப்பும் தீர்ப்பும் சதியும்" என்ற தலைப்பில் எழுச்சிமிக்க உரையினை ஆற்றினர். 

பயனுள்ள இந்நிகழ்ச்சியில் பெரும் திரளான ஆண்களும் அதற்கு சமமாக  பெண்களும் கலந்து கொண்டனர். (அல்ஹம்துலில்லாஹ்)
    மணலி அஸ்பாக்

Saturday, February 26, 2011

ஸலாம் கூறுதல்

,
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹிவபரக்காத்துஹு
மனிதர்களில் அல்லாஹ்விடம் உயர்வானவர்கள் ஸலாத்தினைக்கொண்டு ஆரம்பிப்பவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபுஉமாமா (ரலி) நூல்: அபுதாவூது, திர்மிதி, அஹ்மத்
உனக்கு அறிமுகமானவரோ அறிமுகமில்லாதவரோ எவராயினும் நீஸலாம் கூறிக்கொள். இது இஸ்லாத்தின் சிறப்புக்களில் ஒன்றாகும்என பெருமானார் கூறினார்கள். (நூல்: புஹாரி)
தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின்அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: ஹாகிம் 4/493
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும்சிறந்தது எது?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், '(பசித்தவருக்கு)உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்குஅறிமுகமற்றவருக்கும் சலாம் சொல்வதுமாகும்' என்றுபதிலளித்தார்கள்.12236. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்     ஸலாத்தை பரப்புதல்:
"உங்களில் எவரும் நம்பிக்கை கொள்ளாத வரை, சுவர்க்கம் நுழையமுடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காத வரை விசுவாசம்கொண்டவராகக் கருதப்பட மாட்டீர். உங்களுக்கு மத்தியில் நேசத்தைஏற்படுத்தும் ஒரு காரியத்தை சொல்லித் தரட்டுமா? உங்களுக்குமத்தியில் ஸலாத்தை அதிகமாகப் பரப்புங்கள்" என நபிகளார் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
மக்களே! ஸலாமைப் பரப்புங்கள்! உறவினரோடு சேர்ந்து வாழுங்கள்!உணவளியுங்கள்! மேலும் இரவில் மக்கள் தூங்கும் போது நீங்கள்(எழுந்து) தொழுங்கள். அப்போது நீங்கள் சுவர்க்கத்தில் அமைதியுடன்நுழையலாம் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ்; இப்னு ஸலாம்; (ரழி). நூல் : புகாரி, முஸ்லிம்.
யார் என்மீது ஒரு தடவை ஸலவாத்து கூறுகின்றாரோ, அவருக்குஅல்லாஹ் பத்து தடவை ஸலவாத்து கூறுகின்றான் (அருள்புரிகின்றான்); என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
நன்மையிலும் பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிசெய்து கொள்ளுங்கள். பாவத்திலும், பகைமையிலும் நீங்கள்ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்.அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாகதண்டிப்பவன். (திருக்குர்ஆன் 5:2)
இரு வார்த்தைகள் ரஹ்மானுக்கு விருப்பமானது, நாவுக்குஇலகுவானது, தராசில் கனமானது (அவ்விரு வார்த்தை) سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْم சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில்அளீம்' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரிرِ
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்குநன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்குநன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின்வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”

வீண் விரயம் செய்யாதீர்கள்

,
ஏகஇறைவனின் திருப்பெயரால்....
வீண் விரயம் செய்யாதீர்கள்
படர விடப்பட்ட, மற்றும் படர விடப்படாத தோட்டங்களையும்,பேரீச்சை மரங்களையும், 
மாறுபட்ட உணவான தானியங்களையும், தோற்றத்தில்) ஒன்று பட்டும் (தன்மையில்) வேறு பட்டும் உள்ளமாதுளை மற்றும் ஒரிலவ மரங்களையும் அவனே படைத்தான். அவை பலன் தரும் போது அதன் பலனை உண்ணுங்கள்! அதைஅறுவடை செய்யும் நாளில் அதற்குரிய (ஸகாத் எனும்) கடமையைவழங்கி விடுங்கள்!வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம்செய்வோரை அவன் நேசிக்க மாட்டான். திருக்குர்ஆன்  6:141.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
இறைவனால் உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும்அவைகளின் உடல் அமைப்பிற்கு ஏற்றவாறும், அவைகளின் மனம்ஒப்புமாறும் உண்டு வாழ்வதற்குத் தேவையான உணவு வகைகளைதாவரங்கள், கால்நடைப் பிராணிகள் மூலம் இறைவனே ஏற்படுத்திக்கொடுத்தான்.அனைத்து வகை உயிரினங்களும் தன்னுடையத் தேவைக்குப்போதுமான அளவு உண்டுப் புசித்து தன்னைப் படைத்தவனுக்கு நன்றிசெலுத்துகின்றன.மனிதர்களாகிய நாமும் இறைவன் நமக்கு அளித்த பொருள்வளத்திலிருந்து போதுமான அளவு உண்டுப் புசித்து இறைவனுக்குநன்றி செலுத்துவதுடன் ஸகாத் எனும் ஏழை நிதியை பொருளீட்டமுடியாத வறிய நிலையிலுள்ளோருக்கு மனமுவந்து வழங்குவதுடன்எஞ்சி இருக்கும் பொருளாதாராத்தை வீண் விரயம் செய்யக் கூடாதுஎன்பதில் கவனத்துடன் செயல்பட வேண்டும். வீண் விரையம்செய்வோரை அவன் நேசிக்க மாட்டான். திருக்குர்ஆன்  6:141.தேவைக்கு மீறி சமைப்பதும், மிஞ்சுவதைக் கொட்டுவதும்.மனிதனுடைய உள்ளத்தில் இதுப் போதாது, இன்னும் வேண்டும்,இன்னும் வேண்டும் என்று சொத்து சேர்ப்பதிலிருந்து நாவுக்குசுவையானத் தீணிப் போடுவது வரை எல்லா நிலைகளிலும் எல்லைஇல்லாத ஆசையை விதைத்து பொருளாதாரத்தை விரயமாக்கச்செய்வது ஷைத்தானின் வேலையாகும். அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச்செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான்நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன். திருக்குர்ஆன் 4:36உள்ளத்திற்கு கடிவாளமிட்டு எந்த தேவைக்கும் குறிப்பிட்ட அளவைநிர்ணயித்தக் கொண்டு  போதுமென்ற சிந்தனையை யார் உருவாக்கிக்கொள்வாரோ  அவரே இறைவனின் திருப்பொருத்தத்திற்கு உகந்தஅடியாராவார் இறைவனின் அடியானின் பக்கம் ஷைத்தான் நெருங்கமாட்டான். ...உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத்தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழி கெடுப்பேன்'' என்றுகூறினான். திருக்குர்ஆன் 15:40இன்றுப் பார்க்கின்றோம்.
எதை உண்ணுவது என்றுக் கூட முடிவெடுக்க முடியாத அளவுக்கு பலவகை உணவுகளை பணக்கார வீடுகளில் தயார் செய்து அளவுக்குமீறிப் பறிமாறுவதும் அதனால் உண்ண முடியாமல் மீதம் வைப்பதைகுப்பையில் கொட்டுவதும் அவர்களது அன்றாட வழக்கமாகி விட்டது.யதார்த்தமாக மிஞ்சுவது என்பது வெறுவேண்டுமென்றே வெரைட்டிகளை அதிகப்படுத்தி உண்ண முடிமாமல்கொட்டுவது என்பது வேறு.இதில் இரண்டாவது நிலையே இன்று வசதி படைத்தவர்களின்வீடுகளில் அதிகபட்சம் நடந்து வருகிறது.  சமைக்கும் பொழுதேபக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் ( முஸ்லீமாக இருந்தாலும்,முஸ்லீமல்லாதோராக இருந்தாலும் ) சிறிதை சேர்த்து சமைக்கச்சொல்கிறது ஈகை குணத்தை வலியுருத்தும் இஸ்லாம். அபூதர்ரே ! நீர்குழம்பு சமைத்தால் அதில் சிறிது தண்ணீரை அதிகப்படுத்திக்கொள்வீராக ! அதன் மூலம் உமது அண்டை வீட்டாரை கவனிப்பீராக !என்று கருணை நபி(ஸல்) அவர்கள் உபதேசம் செய்தார்கள். ஆதாரம் :முஸ்லிம்.அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்களின் வீட்டில் ஒரு ஆடுஅறுக்கப்பட்ட பொழுது இதிலிருநது பக்கத்து வீட்டு யூதகுடும்பத்திற்கும் கொடுத்தீர்களா ? என்று கேட்டு விட்டு அண்டைவீட்டாரை எனது வாரிசாக்கி விடுவாரோ என்று எண்ணும் அளவுக்குஜிப்ரீல் என்னிடம் வலியுறுத்திக் கொண்டிருந்தார் என்று நபி(ஸல்)அவர்கள் கூற நான் கேட்டேன் என்று அப்துல்லாஹ் இப்னுஅம்ரு (ரலி) அவர்கள்  அவர்களது வீட்டாரிடம் கூறினார்கள் ஆதாரநூல்: திர்மிதீ உணவு வகைகளும், அளவும் கூடுதலாக இருக்கிறதென்றுக் கருதிசமையலறையிலேயே சிறிதை பக்கத்து வீட்டாருக்காகஒதுக்குவதில்லை சமைப்பது அனைத்தும் டைனிங் ஹாலுக்குப்போய் கைகளால் புறட்டப்பட்டு மிஞ்சுவது குப்பைக்குப் போய்விடுகிறது.விருந்துகளிலும் இதே நிலை.
ஒரு காலத்தில் விருந்துகளில் தயார் செய்யப்படும் பிரியானிஉணவில் இறைச்சி இட்டு சமைப்பார்கள். அதனுடன் வெங்காயம்தயிர் கலந்த ஊறுகாய் ஒன்று மட்டும் அதிகமாக சேர்த்துகொள்வார்கள். அது சிறிது காலத்தில் வசதி படைத்தவர்களின் விருந்தில்முன்னேற்றம் அடைந்து முட்டை  சேர்க்கப்பட்டது,இன்று அதுவும் முன்னேற்றம் அடைந்து அவைகளுடன் சிக்கன்ஃப்ரை, அல்லது சிக்கன் சிக்ஸ்டி ஃபைவ் சேர்க்கப்படுகிறது.இனிவரும் காலங்களில் அதனுடன் காடை, கொக்கு ஃப்ரைஐட்டங்களும் சேர்க்கப்படலாம்.பெரும்பாலும் விருந்துகளுக்கு பிரபலங்கள் அழைக்கப்படுவதால்வெரைட்டிகளை அதிகப்படுத்துகின்றனர் விருந்தினர் அதிலொன்றும்,இதிலொன்றுமாக கை வைத்து விட்டு அப்படியே விட்டு விடுகின்றனர்அவைகளும்

தொழுகையும், தஃவா சிந்தனையும்

,

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

حَافِظُواْ عَلَى الصَّلَوَاتِ والصَّلاَةِ الْوُسْطَى وَقُومُواْ لِلّهِ قَانِتِينَ {238

தொழுகைகளையும்நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்!அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள்! 2: 238.
 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
கடந்த கட்டுரைகளில் பசுமரத்தாணி போன்றுப் பதியக்கூடியப் பிஞ்சுப்பருவத்தில் தொழுகையைப் புகுத்தி விடவேண்டும் தாமதித்தால்தீமைகள் புகுந்து விடலாம், தீமைகள் புகுந்து விட்டால் அதைஅப்புறப்;படுத்தி விட்டுத் தொழுகையைப் புகுத்துவதுகடினமாகிவிடும் என்பதையும், தொழுகையைப் புகுத்தியதும் அதுஉள்ளத்தில் பதிவதற்காக வல்லோன் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கவேண்டும் என்பதையும் பார்த்தோம்.
அதற்கடுத்ததாக பிள்ளைகள் தொழ ஆரம்பித்ததும் விட்டு விடாமல்அவர்களுக்கு தஃவாவுடனானத் தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்பதை இப்பொழுதுப் பார்ப்போம். தொழுகையில்இறையச்சத்துடன் நில்லுங்கள் என்று அல்லாஹ் தன் திருமறையில்கூறுகிறான். தொழுகைகளையும், நடுத் தொழுகையையும் பேணிக்கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள்! 2: 238.  அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறையில்தொழுகையை அமைத்துக் கொண்டால் மட்டுமே இறையச்சத்துடன்தொழுகையில் நிற்க முடியும், அதன் மூலம் மறுமையில் வெற்றிப்பெற முடியம் என்பதை அறிந்திருந்த வாயில் பின் ஹூஜைர் (ரலி)அவர்கள் தொழுகையை எவ்வாறு தொழவேண்டும் என்பதை தெரிந்துகொள்வதற்காக ஏமன் பிரதேசத்திலிருந்து மதீனா நகர் வரைமிகப்பெரிய சிரமத்திற்கு மத்தியில் பயணித்து வந்து அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்களை சந்தித்து தொழுகை செய்முறைவிளக்கமறிந்து சென்ற வரலாற்றைப் படித்திருக்கின்றோம்.
அந்த நபித் தோழர் வாயிலாகவே என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள் என்றநபிமொழியையும், அத்தஹயாத்தில் விரலசைக்கும்நபிமொழியையும் கூறக் கேட்டிருக்கிறோம்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில்மதீனாவிற்கு வெளியில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மக்கள்நாலாப் புறங்களிலிருந்தும் பல நூரு மைல் தூரம் நடையாய் நடந்தும்மதீனா நகர் சென்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் முன்னிலையில் அமர்ந்து சீரிய தஃவாவை உள்ளத்தில்புகுத்திக்கொண்டு அதனடிப்படையில் தொழுகை, மற்றும் இன்னப்பிறஅமல்களை அமைத்துக்கொண்டு நல்வாழ்க்கை வாழ்ந்தவரலாற்றைப் படித்திருக்கின்றோம்.
அவர்களுக்கு அடுத்த காலத்திலும் இது தொடர்ந்தது இறையச்சமுடையவர்கள் ஆட்சியில் இருந்த காலம் வரை இதேநிலை நீடித்தது. இன்றைய நிலை அவ்வாறில்லை இஸ்லாத்தைநோக்கி அழைக்கும் பணி ஒவ்வொருவருடைய வீட்டுக் கதவையும்தட்டும் அளவுக்கு இலகுவாகி விட்டது.
இரவு,பகல் செல்லும் இடங்களுக்கெல்லாம், கீழ்தட்டு–மேல்தட்டுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கெல்லாம் இந்த இஸ்லாம்சென்றடையும் என்;று இறைவனின் இறுதித்தூதர்(ஸல்)அவர்கள்முன்னறிவிப்பு செய்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் கீழ்காணுமாறு கூறினார்கள் : இரவு, பகல்சென்றடையும் பிரதேசங்களையெல்லாம் இம்மார்க்கம் நிச்சயம்சென்றடையும். மதர், வபர் ஆகிய எந்தப் பிரதேசத்தையும் இறைவன்விட்டு வைக்க மாட்டான். அவற்றிலும் இந்த தீனை அல்லாஹ்நுழைவிப்பான். கண்ணியமுடையவன் கண்ணியம் பெறுவான்.இழிவானவன் இழிவடைவான்... தமீம் அத்தாரி(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: முஸ்னத் அஹ்மத் பாகம் 4 : பக்கம் 103
இறைவனின் இறுதித்தூதர்(ஸல்)அவர்கள் முன்னறிவிப்பு செய்ததைப் போலவே இன்று உலகில் அதிகமானப் பகுதிகளுக்குஇஸ்லாம் சென்று விட்டது, இன்ஷா அல்லாஹ் மீதமுள்ளப்பகுதிகளுக்கும் இனி வரும் காலங்களில் சென்று விடும் இவ்வாறுஇஸ்லாம் செல்வதற்கு காரணமாக அமைந்தது தஃவா.கூரை வழியாக வரும் ஷைத்தான்.இன்று தஃவா அவரவர் வீட்டுக் கதவைத் தட்டினாலும் கதவைத்திறந்து வரவேற்று நெஞ்சாரத் தழுவ  மறுத்து கூரை வழியாக (கேபிள் மூலம்) வீட்டிற்குள் வரும் ஷைத்தானை நெஞ்சாரத் தழுவிக்கொண்டு அவன் உள்ளத்தில் புகுந்து தன் இஷ்டத்திற்கு வழி கெடுக்கவழி விடுகிறோம். இதை நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.தொழுகை குறிப்பிட்ட நேரத்தில் செய்யும் அமல் என்பதால்தொலைகாட்சி முன்பு அமர்ந்து கேளிக்கைகளை கண்டு களித்துக்கொண்டிருக்கும் போது நிகழ்ச்சியை பாதியில் முடித்து விட்டு எழுந்துசென்று குறிப்பிட்ட நேரத்தில் தொழுகையை நிறைவேற்றமுடியாமல் போவதால் தொழுகையை தொடர முடியாத துர்பாக்கியநிலை சினிமா, சீரியல்களில் அமர்வதால் ஏற்படுகிறது.தொலைகாட்சியில் தஃவா நிகழ்ச்சிகள் அல்லது நாட்டு நடப்புகள்போன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாங்குசொன்னால் பதிலளிக்க எண்ணம் ஏற்படும் இக்காமத்திற்கு முன்தொழுகைக்குச் செல்ல எண்ணம் ஏறபடும். ஆனால் சிமிமா, சீரியல்பார்க்கும்போது பாங்குக்குக் கூட பதிலளிக்க எண்ணம்ஏற்படுவதில்லை, இக்காமத்திற்கு முன் பள்ளி செல்வது என்பது கேள்விக் குறியான விஷயமாகிறது.நமக்கே இந்த நிலை என்றால் பசுமரத்தானிப் போன்றுப் பதியும் சிறுப்பிராயத்துக் குழந்தைகளை நம்முடன் சேர்த்து அமர வைத்துக்கொண்டு சினிமா, சீரியல் நிகழ்ச்சிகளைப் பார்த்தால் அவர்கள்எவ்வாறு தொழுகையை முறைப்படி அமைத்துக் கொள்ள முடியும் ?   அதனால் குர்ஆன்- ஹதீஸ் அடிப்படையில் நடைபெறும் பயான்நிகழ்ச்சிகளை பிள்ளைகளுடன் அமர்ந்து பார்க்க வேண்டும். இப்போதுமார்க்க நிகழ்ச்சி என்றப் பெயரால் கோயிலில் காணிக்கைத் தட்டுடன்பெயர் கூறி நடத்தப்படும் பூஜையை மிஞ்சும் அளவுக்கு நிகழ்ச்சிகள்நடைப் பெறுவதால் இதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.அதற்கடுத்ததாக குர்ஆன்- ஹதீஸ் அடிப்படையில் பயான்கள்நடைபெறும் இடங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்,  தவறினால்தொழுவார் தொழுவார் தொழுது கொண்டே இருப்பார் தொழுகைஉள்ளத்தில் நுழையாது, இயைச்சத்தையும் ஏற்படுத்தாது.அல்லாஹ்வுக்காகவென்று உள்ளத் தொழுகை பிறருக்குகாட்டுவதற்காகவென்றும், உலக ஆதாயங்களுக்காகவென்றும்மாறிவிடும் அபாயம் ஏற்பட்டு விடும். தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடு தான். அவர்கள் பிறருக்குக்காட்டுவதற்காகத் தொழுகின்றனர். 107: 4, 5. 6.
லுக்மான்(அலை) அவர்கள் தங்கள் மகனிடம் அல்லாஹ்வை அவனுடைய வல்லமைக்கொப்பப் புகழ்ந்து விட்டு தொழுகையைகடைபிடிக்குமாறும், தஃவா செய்யுமாறும், தஃவா செய்யும்போதுஏற்படும் சிரமங்களை சகித்துக் கொள்ளுமாறும் உபதேசம் கூறியதைஅல்லாஹ் தன் திருமறையில் சொல்லிக் காட்டுகிறான்.

உணரப் படாத தீமை சினிமா

,
நம் பிள்ளைகளுக்குப் பல்முளைக்கும் முன்பே இந்த சினிமா மீசை முளைக்க வைத்து விட்டது.இந்த அழுக்குத் திர சலவை செய்யப்படுமா?இல்லையெனில்…மக்களைச் சுருள வைக்கும்திரைப்பட சுருளையெல்லாம் ஒரு தீக்குச்சிக்குத் தின்னக் கொடுப்போம்’
சினிமாவை குடித்து, உண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும்வைரமுத்துவின் வைர வரிகள். சினிமா என்ற சாக்கடையில் புரண்டுகொண்டிருக்கும் ஒருவரால் கூட சினிமாவுக்கு நற்சான்றிதழ்கொடுக்க முடியவிலை.கவியரசின் வரிகளுக்கு ஒப்புதல் அளிப்பது போல், “அனைத்துகுற்றங்களுக்கும் காரணம் சினிமா’ என, மதுரை ஐகோர்ட் நீதிபதி வி.தனபாலன், வழக்கு விசாரணை ஒன்றில், சாட்டையைசுழற்றியுள்ளார். இது, நம்மூர் சினிமாக்காரர்கள் காதில் விழவில்லைபோலும்; இல்லையென்றால் இந்நேரம் கண்டனக் கூட்டம் தான்.இவையெல்லாம் சினிமாவுக்கு முஸ்லிம் அல்லாதவர்கள்கொடுக்கும் certificates.முஸ்லிம்களால் உணரப்படாத தீமைகள் என்று பட்டியல் போட்டால்அதில் வட்டி, சினிமா, கிரிக்கெட் என்று தொடரும். இவற்றில்சினிமாவைப் பற்றிய இஸ்லாத்தின் பார்வையை குர்ஆன், ஹதீஸில்ஆதாரத்துடன் சுருக்கமாக ஆராய்வோம்.
அனைத்து மக்களையும் எளிதில் சென்றடையக் கூடிய ஒரு தகவல்தொடர்பு சாதனம் ‘சினிமா’ என்று பட்டிமன்றம் வைக்காமல் முடிவுசெய்து விடலாம். அந்த அளவுக்கு சினிமா என்பது மக்களோடுமக்களாக இரண்டறக் கலந்து விட்டது. ஆனால் அதன் அவலநிலைஅதல் பாதாளத்தில் உள்ள்து.நடிப்புத் துறையில் நடைபெறும் அவலங்கள், ஒழுக்கச் சிதைவுகள்,கோடிகளில் பணம் புரண்டும் நிம்மதியற்ற வாழ்க்கை, தற்கொலைகள், அதிகமான விவாகரத்துகள், ஆபாசங்கள்,இயற்கையாக ஏற்படக்கூடிய காம உணர்வை முக்கால்நிர்வாணத்துடன் நடித்து விரசத்தை தூண்டி பணத்துக்காக எதையும்செய்யும் நடிகைகள், மணிதனை மிருகமாக்கும் குரூர சிந்தனைகொண்ட வசனங்கள், இரட்டை அர்த்தம் கொண்ட ஆபாச வசனங்கள், ஏகத்துவத்துக்கே வேட்டு வைக்கும் பாடல் வரிகள், தீவிரவாதசெயல்களுக்கு வழிவகுக்கும் சண்டைக் காட்சிகள்,  சினிமாவைப்பார்த்து கொலை செய்தேன் என்று கூறும் வாலிபர்கள்..  அப்பப்பாபட்டியல் நீள்கிறது!   இதுதான் இன்றைய சினிமாவின் எதார்த்த நிலைஎன்பதை யாராலும் மறுக்க முடியாது.ஆபாசத்தின் இருப்பிடம் சினிமா. ஆபாசத்தை உற்று நோக்கும்ஒருவனின் கடைசி நிலை கண்டிப்பாக விபச்சாரமாகத்தான்இருக்கும். தொடர்ந்து சினிமா பார்க்கும் ஒருவன் கடைசி வடிகால்விபச்சாரம்.‘விபச்சாரனோ, விபச்சாரியோ முஃமினான நிலையில்இருக்கும்போது விபச்சாரம் செய்வதில்லை’ எனற ஹதிஸைஇந்த இடத்தில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.சாமானியர்கள் முதல் சாமியார்களிடம் வரை விபச்சாரம் பெருகிவருவதைப் பார்க்கும் போது எதிர்கால சமுதாயம் பற்றிய அக்கறைகவலை கொள்ளச் செய்கிறது. “விபசாரத்தை ஒழிக்கமுடியாவிட்டால் அதை சட்டபூர்வமாக்க வேண்டியது தானே?”என்று அண்மையில் உயர்நீதிமன்றம் கூறியதை இங்கு நினைவுகொள்ள வேண்டியது அவசியம். இது சினிமா செய்த சாதனை.‘கண்ணால் பார்ப்பது கண் செய்யும் விபச்சாரம்.  காதால் கேட்பதுகாது செய்யும் விபச்சாரம், கையால் தொடுவது கை செய்யும்விபச்சாரம்.  இவை எல்லாவற்றையும் மர்மஸ்தான உறுப்புஉண்மைப்படுத்தும் அல்லது ஒதுக்கித் தள்ளிவிடும்’ – ஹதீஸின்சுருக்கம். சினிமாவில் நடிப்பவர்கள், மனித சமுதாயம் முழுவதையும்அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லக் கூடியவர் வீட்டில் என்னநடக்கிறது?  குழந்தைகளை கூட வைத்துக் கொண்டு, பெற்றோரும்,உற்றாரும் குடும்ப சகிதமாக, தொழுகை நேரம் என்றில்லாமல்,சினிமாவை ரசித்துக் கொண்டிருக்கிற காட்சியை பரவலாக காணமுடிகிறது (விதிவிலக்காக இருப்பவர்களைத் தவிர்த்து). கடைசியில்தன் குழந்தை, படத்தில் வருவது போல யாரையாவது இழுத்துக்கொண்டு ஓடிய பிறகுதான் பெற்றோர்கள் விழித்துக் கொள்வார்கள்.வேதனையான விஷயம் என்னவென்றால், நான் ஏகத்துவத்தில்இருக்கிறேன் என்று சொல்லக்கூடிய எத்தனையோ பேர் சினிமாபார்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்கள்.  முக்கியமாகவெளிநாட்டில் வசிப்பவர்கள்,  வார விடுமுறை நாட்களில் அன்றையரிலீஸ் படத்தை பார்த்துவிட்டு, தாமதமாக உறங்கி, ஷைத்தான்காதில் சிறுநீர் கழிப்பதையும் சட்டை செய்யாமல், கொரட்டை விட்டுதூங்கி, பஜ்ர் தொழுகையை கோட்டை விட்டு,  நேராக ஜும்ஆதொழுகைக்கு எழுந்திருப்பவர்கள் நம்மில் எத்தனை பேர்?  சிலர் பஜ்ர்தொழுகைக்கு பாங்கு சொல்லும் போது தயாராவதை பார்த்தால்நமக்கே ஆச்சரியமாக இருக்கும்!  எதற்காக தொழுகக்காக அல்ல!தூங்குவதற்காக! நிச்சயமாக கண், காது, இதயம் இவைகள், ஒவ்வொன்றும்மறுமையில் விசாரிக்கப்படும்’ 17:36.சினிமவைப் பார்த்து பொழுதை கழிப்பவர்கள் மேற்கண்டஇறைவசனத்தின்படி, மறுமையில் இறைவனிடம் எப்படித் தான்பதில் சொல்லப் போகிறார்களோ!
முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடவேண்டுமா? வேண்டாமா? என்றசர்ச்சையை நடத்திக் கொண்டிருப்பார்கள்! முடிவாகாத நிலையில், TVயில் நடிகையின் two piece உடையை ரசித்து கொண்டிருப்பார்கள்.வெட்கக்கேடு!கலாச்சாரச் சீரழிவு எந்த அளவுக்கு இருக்கிறது என்றால், “கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா’ என்ற காலம் போய், “பிள்ளக் குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா?’ என்ற ரீதியில்அல்லவா சென்று கொண்டிருக்கிறது நமது கலாசாரம்! கலாசாரசீரழிவு, வன்முறை, மாணவர்களிடையே ஹீரோயிசம் என,சமூகத்தை சீரழிக்கும் செயல்கள் அனைத்திற்கும்
 


Friday, February 25, 2011

திருவல்லிக்கேணி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸில்பெண்களுக்கான மார்க்கச் சொற்ப்பொழிவு நிகழ்ச்சி

,
அல்லாஹ்வின்கிருபையினால் சென்னை திருவல்லிக்கேணி இந்திய தவ்ஹீத் ஜமாஅத்  மர்கஸில் 24-02-2011 .இன்று.மாலை மக்ரிப்.  தொழுகைக்குப் பின் பெண்களுக்கான மார்க்கச் சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.





இந்நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் சகோரதரி.மஸுதாஆலிமா ( நம்முடிய இலக்கு எது ) என்ற தலைப்பில்  உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர். (அல்ஹம்துலில்லாஹ்)

Monday, February 21, 2011

இந்தாண்டின் இறுதிக்குள், 77 பாஸ்போர்ட் சேவை மையங்கள் : இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்

,
ஐதராபாத் : பாஸ்‌போர்ட் அனைவரும் எளிதில் பெறும் வண்ணம், நாடெங்குமிலும் 77 புதிய பாஸ்‌போர்ட் சேவை மையங்கள் இந்தாண்டின் இறுதிக்குள் அமைக்கப்பட இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக உயர் அதிகாரி கே என் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்த சேவை மைய‌ங்கள் திறக்கப்பட்ட பிறகு, பாஸ்போர்ட் குறித்த விசாரணைகள் ஆன்லைனிலே மேற்கொள்ளப்பபடும், இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவல்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். இதன்மூலம் பாஸ்போர்ட் பெறுவது எளிதாக்கப்படும். ஆந்திராவில் 7 மையங்களும், ஐதராபாத்தில் 3 மையங்களும் அமைக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.
 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates